532.
|
உடுத்த
கோவண மொழியநா முங்கையிற் றரநீர் |
|
|
கெடுத்த
தாகமுன் சொல்லுமக் கழித்தகோ
வணநே
ரடுத்த கோவண மிதுவென்று, தண்டினி லவிழா
வெடுத்து, மற்றித னெடையிடுங் கோவண
மென்றார் |
31 |
(இ-ள்.)
வெளிப்படை.நாம் உடுத்தியிருக்கும் கோவணம்
தவிர, உமது கையிலே நாம் தர நீர் போக்கியதாக முன்னே
சொல்லிய அந்தக் கிழித்த கோவணத்திற்கு நேராகப் பொருந்திய
கோவணம் இதுவாகும் என்று சொல்லித், தண்டின் மேற்
கட்டியிருந்ததனை அவிழ்த்து எடுத்து, மற்ற இதற்குச் சமனாக
எடையுள்ளகோவணம் இடுவீராக என்றார்.
(வி-ரை.)
உடுத்த கோவணம் ஒழிய - நாம்
உடுத்தியிருக்கும்
கோவணம் எமது இடையிலே நிற்க, முஞ்சி யரைஞாண் சாத்திய
வரையிற் றஞ்சமா மறைக் கோவண வாடையின் றசைவும் (509)
என்றபடி அக்கோவணம் திருவரையினையே தஞ்சமாகி நிற்பதனால்
இங்கு அஃது நிறுத்தலளவைக் குதவாது; அங்கு உடையாகி
நின்றொழிய.
நாம்....அவிழா
எடுத்து -
எம்மிடத்தில் நின்றது மூன்று
கோவணங்கள். ஒன்று இடையில் நின்றது; அது அங்கு நிற்க,
ஏனையிரண்டில் ஒன்று நாம் கையிற்றா நீர் அதனைக் கெடுத்ததாக
முன் சொல்லியதாம்; அதற்கு நேராக அடுத்த கோவணம் இது
என்று, தண்டின்மேல் உள்ளதனைக் காட்டி, அவிழ்த்து எடுத்தனர்
என்க.
உம்
கையிற்றர - அவர் கையிற் கொடுத்தார் 515.
நீர்
கெடுத்ததாக முன் சொல்லும் - உண்மையில் நீர்
கெடுக்கவில்லை. அதனை நானே போக்கினேன். ஆயின் அதனை
நீர் ஏற்றுக்கொண்டு, அஃதொழிந்தவாறறியேன் (524) என்று
முன்னே சொன்னீர் என்றபடி. சொல்லும் - சொன்ன
அளவாலன்றி
உண்மையன்று என்பது குறிக்கக் கெடுத்த என்னாது கெடுத்ததாகச்
சொல்லும் என்றார். The alleged என்பர் நவீனர். முன்
- முன்னர்.
என் முன்னே என்றலுமாம்.
அக்
கிழித்த கோவணம் - அ - முன் சொல்லிய
விவரணத்திற் கண்ட அந்த. முன்னிலையில் இல்லாத அந்த. அ
-
சேய்மைச்சுட்டு. அதற்கெதிர் இது என மற்றதனை
அண்மைச் சுட்டிற்
குறித்தது காண்க.
கிழித்த
கோவணம் - கிழிக்கோவணம் (522) பார்க்க. நீர்
உயர்வாய்ச் சொல்லியதுபோல நெய்தமைத்ததன்று என்பது குறிப்பாம்.
நேர்
அடுத்த கோவணம் - நேராக - சமனாகப் -
பொருந்திய கோவணம். தனியாக நெய்தமைத்ததாயின்
ஒன்றற்கொன்று ஏற்றத் தாழ்ச்சியிருத்தல் கூடும்; அவ்வாறன்றி ஒரு
துணியிலே சமனாக இரண்டு கோவணம் கிழிக்கப்பட்டதாதலின்
இஃது அதற்கு நேராகும். ஆதலின் இதற்கு நேர்தரவே அதற்கு
நேர்தந்ததேயாகும் என்பது. ஒரு பொருளுக்குத் தனித்தனி சமனாகிய
மற்றிரு பொருள்கள் தம்முளே சமமாவன என்பது நியாயம். Things
which are equal to the same thing are equal to one
another என்பது நவீனர்.
தண்டினில்
- தண்டினின்றும். இல் - ஐந்தனுருபு
நீக்கப்பொருளில் வந்தது.
அவிழா
எடுத்து - அவிழ்த்து எடுத்து. அவிழா
- செய்யா
என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.
மற்றிதன்
எடை இடும் கோவணம் - மற்ற இதற்கு நேராக
எடையுள்ள கோவணம் இடும் என்க. தமது கோவணம் வேண்டும்;
அஃதில்லையேல் அதற்கு நேர் எடையுள்ள கோவணமே தாம்
விரும்பியதன்றி, வேறு துகில் மணி முதலியன அன்று என இங்கு
வெளிப்படையாய்க் கூறியது காண்க. ஆயின், அவற்றைத்
துலையிலிடப் பின்னர் இசைந்து ஏற்ற தென்னையோ? எனின், அவை
யொன்றும் இதற்கு நேராகா என்று தமது கோவணப் பெருமை
காட்டவும், நாயனார் அவற்றை விட்டுத்
தம்மை யடையுமாறு
நீடருள் கொடுக்கவுமே இசைந்தனர் என்பது. 507
பார்க்க.
இப்பாட்டினிற்
பேச்சும் செயலுமாய் இயன்ற நாடகத்
தமிழ்ச்சுவை காண்க. இதன் எடையிடுங் கோவணம் என்றதன்
காரணம் அடுத்த கோவணமிது, (ஆதலின்) என முன்னர்க்
கூறியபடியாம். 31
|
|
|
|