533.
|
நன்று
சால! வென் றன்பரு மொருதுலை
நாட்டக் |
|
|
குன்ற
வில்லியார் கோவண மொருதட்டி லிட்டார்;
நின்ற வன்பருங் கையினி னெய்தகோ வணந்தட்
டொன்றி லேயிட நிறைநிலா தொழிந்தமை
கண்டார். |
32 |
(இ-ள்.)
வெளிப்படை. மிகவும் நன்று! என்று இசைந்து,
அன்பரும் ஒரு துலையினை நாட்ட, மலையை வில்லாகவுடைய
பெருமான் அத்துலையின் ஒரு தட்டிலே கோவணத்தை யிட்டார்;
நின்ற அன்பரும் கையில் வைத்திருந்த நெய்ததாகிய கோவணத்தைத்
துலையின் மற்றைத் தட்டிலேயிட, அது அக்கோவணத்திற்கு நேரான
எடையாக நில்லாதொழிந்ததைக் கண்டனர்.
(வி-ரை.)
சாலவும் நன்று என மாற்றுக.
முற்றும்மை
தொக்கது.
துலை
- எடையிடும் என்று மறையவர் கேட்டாராதலின்
எடையிட்டறிதற்கு வேண்டும் நிறுத்தற் கருவியாகிய துலையினை
நாட்டினார் நாயனார். நாயனார் வணிகராதலின் துலையினிறுத்துச்
சரக்குக் கொள்ளலும் கொடுத்தலும் அவர்க்குரிய தொழிலாம். இத்தந்
திரத்திற் காண்டுமென் றிருந்தோர்க், கத்தந் திரத்தினவ்வயி
னொளித்தும் - (திருவாசகம்) என்றபடி யாவர் யாவர்
எதிலெதிற்றப்புதற்குத் தந்திரம் பயின்றாலும், அவரவர்க்கும் அவ்வத்
தந்திரத்தினுள்ளே புகுந்துஅவரவரது சூழ்ச்சியையுங்கடந்து
நின்றருளுவது இறைவனது இயல்பாம். இங்கு வணிகர்க்கு
வாணிபத்தொழிலிற் புக்கு நின்றருளியது காண்க. இக்கருத்துப்பற்றியே
கொடுப்பன் என்று சொல்லுவித்தது
என் கோவணங் கொள்வது
குறித்தோ?, ஈங்குறு வாணிபம்
அழகிது (527) என முன்னர்க்
கொள்ளல் கொடுத்தலாகிய வாணிபத்தைச் சுட்டடிக் கூறியதுங்
காண்க.
ஆயின்
இங்கு அவர் நாட்டிய துலைதான், அவர் இதுவரைக்
கொண்டதும் சேமித்ததுமாகிய பொருளேயன்றி அவர்தம்மையும்
அவர் தாம் அறியாத நிலையில் நிறுத்த முறையாலே கொள்ளவும்,
நிறுத்துக் காட்டவும் வல்லதாயினமை திருவருட் செயலேயாம்.
இவ்வருட்டிறங் குறிக்கக் குன்ற வில்லியார்
என்றார். என்னை?;
வளையாது பிளந்திறுவதாகிய கல்லையே வில்லாக வளைத்ததான
திருவருட்டிறத்தானே இதுவுமாயிற்று என்பது குறிப்பு.
கோவணம்
- தண்டினில் அவிழ்த்து எடுத்து கோவணம்.
நின்ற
அன்பர் - கோவண நேர்தருதலாற் பிழையை
நேர்செய்ய நின்ற அன்பர்.
கையினில்
- அவர்க்குத் தரக் கொண்டு வந்து தம் கையில்
வைத்திருந்த. நெய்த கோவணம் - துணியினின்றும்
கிழித்தெடுக்கும்
கிழிக்கோவண மல்லாமல் கோவணமாகவே நெய்தமைத்த கோவணம்.
525 பார்க்க.
தட்டு
ஒன்றிலே - ஒன்றாகிய மற்றைத் தட்டிலே. மற்றை
என்பது தொக்கி நின்றது.
நிறை
நிலாது ஒழிந்தது - நிறை - எடை. நிலாதொழிந்தது
சமனாக நில்லாது போயினதை.
நின்ற
தொண்டரும் - என்பதும் பாடம். 32
|