536.
|
முட்டி
லன்பர்த மன்பிடுந் தட்டுக்கு முதல்வர் |
|
|
மட்டு
நின்றதட் டருளொடுந் தாழ்வுறும் வழக்கால்
பட்டொ டுந்துகி லநேககோ டிகளிடும் பத்தர்
தட்டு மேற்படத் தாழ்ந்தது கோவணத் தட்டு. |
35 |
(இ-ள்.)
முட்டுஇல் ... தட்டுக்கு - முட்டு இல்லாத
அன்பருடைய அன்பினை இடுகின்ற தட்டினை நோக்க; முதல்வர்
மட்டு நின்றதட்டு - முதல்வர் மட்டும் நின்ற தட்டானது; அருளொடு
தாழ்வுறும் வழக்கால் - அருளுடனே தாழும் என்றது
வழக்காதலின்; பட்டொடும் ... மேற்பட - பட்டுக்களுடனே
துகில்களும் அனேக கோடிகளாக இடவும் நாயனாரது தட்டு
மேற்பட்டே நிற்க; தாழ்ந்தது கோவணத்தட்டு - மறையவரது
கோவணம் மட்டும் இட்ட தட்டானது தாழ்ந்தே நின்றது.
(வி-ரை.)
இப்பாட்டில் முதலிரண்டடிகளில் ஒரு நியதி - நீதி
- உண்மை - ஆகிய ஒருவழக்கினை நிறுவிப், பின்னிரண்டடிகளில்
அவ்வுண்மை இந்நிகழ்ச்சியால் உதகரிக்கப் பெற்றது என்று எடுத்துக்
காட்டுகின்றார் ஆசிரியர். மாயை என்று நாயனாரால் காணப்பட்ட
இவ்வரிய நிகழ்ச்சிக்குக் காரணங்கூறியதுமாம். இது ஆசிரியரின் மரபு.
இவ்வாறு ஒரு நியதியாகிய வழக்கினைக் கூறிச் சரிதத்தை
உதகரிக்கும் இவ்வாசிரியரது அரிய மரபினைக் கம்பரும்,
தெருண்ட
மேலவர் சிறியவர்ச் சேரினு மவர்தம்
மருண்ட சிந்தையை மாற்றுவ ரெனுமிது வழக்கே;
யுருண்ட வாய்தொறும் பொன்னுரு ளுரைத்துரைத் தோடி
யிருண்ட கல்லையும் பொன்னிற மாக்கிய விரதம்
-
வரைக்காட்சிப் படலம் - 8 |
என்ற பாட்டிலே சொல்
- பொருள் - யாப்பு எனும் பலவகையிலும்
அடியொற்றிப் பின்பற்றி நின்றது காண்க.
இங்குக்
குறித்த வழக்காவது - அன்பர் ஒரு தட்டும்
முதல்வர் ஒரு தட்டுமாகக் கொண்டு ஒரு துலையில்
நிறுக்கப்பெற்றபோது அன்பர் தட்டிலே அன்பு இடப்பெறும்.
அதனுக்கு இறைவரது அருள் இடும் தட்டுத் தாழ்ந்தே காட்டும்.
அன்பு அன்பரது உடைமை; அருள் முதல்வரது உடைமை. அன்பு
- அருள் - என்பன இங்கு
அன்பு கொண்டு செய்வனவும் அருளாற்
செய்வனவுமாகிய செயல்களைக் குறித்தன. அன்புக்கு அருள்
தாழ்தலாவது அன்புடையார்க்கு அருள் கொடுத்துத் தாங்கி நிற்கின்ற
இறைவனது தன்மையாம்.
தன்கடன்
அடியேனையும் தாங்குதல் - என்கடன் பணிசெய்து
கிடப்பதே
|
என்பது அப்பர் சுவாமிகள்
திருவாக்கு. தாங்கப்படும் பொருளுக்குத்
தாங்கும் பொருள் தாழ்ந்து கீழே நிற்பது ஓரியல்பு.
அன்புடையாரிடத்து அருளினாலே பணிந்து அருள் செய்வதும்
இறைவனது இயல்பாம். விறகு சுமந்து ‘பத்திரனடிமை' யென்றது;
வந்தியம்மை பொருட்டும் திருவாதவூரடிகள் பொருட்டுமாக
மண்சுமந்தது; வந்தியம்மை பொருட்டும் திருவாதவூரடிகள்
பொருட்டுமாக மண்சுமந்தது; அப்பர்சுவாமிகளுக்குப் பொதி சோறு
கொடுத்தது; சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குச் சோறிரந் தளித்தது;
ஆளுடைய பிள்ளையார்க்குத் தாளம், சிவிகை, பந்தர் அளித்தது;
சாக்கியனார் இட்ட கல்லடி யேற்றது முதலிய எண்ணிறந்த
அருட்டிருவிளையாடல்கள் அன்புக்குத் தாழும் முதல்வனது
அருளினியல்பை விளக்குவன.
தாழ்ந்தது
- தாங்கி நிற்பது - கீழ்நிற்பது - எனவும், கீழ்மைத்
தன்மையிலே பட்டது எனவும் இருபொருளும்பட நயம்பெற
உரைத்தது காண்க. அன்பிலே அருள் அழுந்தது என்றும்,
அருள்காண அன்பு மேலிடும் என்றும் காண்பது மரபு.
எவ்வாற்றானும் கோவண நேர்தந்து மறையவனா ரருள்பெற
வேண்டுமென்ற அன்பு மேலிட்டுத் துகிலும் பட்டும் மேன்மே
லிட்டார்; ஆதலின் அன்பு மேலிட மேலிட அருள்பதியும்
என்றதனாற் கோவணத் தட்டுப் பதிந்து தாழ்ந்தது என்க. கோவணம்
இங்கு நாயனாரை ஆட்கொள்ளவந்த கருவியாதலின் அருட்
சொரூபமென்பது. பரிபாகம் மேற்படத் திருவருள் பதிந்ததெனவுங்
கூறுப.
அருளொடும் தாழ்வுறும்
வழக்கால் - பரமசிவன்
அடியவர்கட்கு எளியராந் தன்மையுடையவ ரென்று வேத
முதலியவைகளாற் சொல்லப்படுகிற முறைமையினால், ஈண்டுப்
பரமசிவனது கோவணத்தட்டும் எளிய தன்மையுடையது
போலத்தாழ்ந்ததென்று சொற் சாதுரியந் தோன்றக் கூறினார்.
தன்னடியார்க் கென்று மெளி வரும்பெருமை யேழுலகு
மெடுத்தேத்தும் - (134) என்பதனானும், அருளென்னு மன்பீன்
குழவி என்பதனானும் அறிக என்பது வித்துவான் காஞ்சீபுரம்
சபாபதி முதலியார் உரைக்குறிப்பு. வழக்கால்
- இஃது வழக்கு -
நியதி - உண்மை; ஆதலால் அன்பர் அன்பிடும் தட்டுக்கு முதல்வர்
தட்டு அருளொடு தாழ்வுறும் எனக் கூட்டி முடிக்க. மாயையன்று;
வழக்கே; ஆதலின் பத்தர் தட்டு மேற்பட முதல்வர் தட்டுத்
தாழ்ந்தது என்றபடி.
அன்பு இடும் என்றது
இங்குப் பட்டொடுந்துகில் அனேக
கோடிகளிடும் எனவும், அருளொடும் - என்றது இங்குக்
கோவணத்தொடும் எனவும் பொருந்திக் கண்டுகொள்ள நின்றது.
எடுத்துக் காட்டுவமை. முற்கூறிய இரண்டு தட்டினையும்
தன்மையாகக் கொள்க என்பர் காஞ்சிபுரம் வித்துவான் சபாபதி
முதலியார்.
தாழ்தல் -
விரும்புதல் என்றுகொண்டு அன்பினைத்
தம்மிடத்து இட்டு இட்டு மேன்மேல் ஈட்டிவைக்கும் அன்பர் பாலே
தாழ்வுடையவன் - விருப்பமுடையவன் - சிவன் என்றுரைத்தலுமாம்.
தலைச்சங்கைக் கோயிலே கோயிலாகத் தாழ்ந்தீரே
- (காந்தாரம்)
- என்ற ஆளுடைய பிள்ளையார் தேவார முதலிய ஆட்சிகள்
காண்க.
முட்டில் அன்பர் -
அன்பு முட்டிலர் எனமாற்றிக் கொள்க.
அன்பினாற் புரியும் செயல் நேரிதிற் செல்லுகைக்கு எவ் விடையூறு
வரினும், தம்பணிக்கு முட்டுவாராது எவ்வாற்றானும் செய்து கொள்ள
வல்லராய் அன்பு செலுத்துபவர்.
நட்டம்புரி
வாரணி நற்றிரு மெய்ப்பூச் சின்று
முட்டும்பரி சாயினுந் தேய்க்குங்கை முட்டா தென்று
வட்டந்திகழ் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார் |
-
(மூர்த்தியார் புராணம் - 20.) என்றது காண்க. அன்பர்
-
இங்கு அன்பர்களின் பொதுமை குறித்தது.
முதல்வர்
மட்டும் நின்ற தட்டு அருளொடும் தாழ்வுறும்
என்றது ஒரு புறம் அன்பர் தட்டிலே அன்பரது அன்பு இடப்பெறும்;
மற்றொருபுறம் முதல்வரது அருள் மட்டும் உளதாம். அன்பர்களாவார்
தம் மெய்யன்புடைய உள்ளத்தில் அன்பு செய்யப்பட்ட
இறைவனையுங் கொண்டு விளங்குவர். எனவே, அன்பர் என்றதனால்
அன்பரும் இறைவரும் ஆம் இருவராவர்.
உள்ளத்திற்
றெளிகின்ற வன்பின் மெய்ம்மை யுருவினையு
மவ்வன்பி னுள்ளே மன்னும்
வெள்ளச்செஞ் சடைக்கற்றை நெற்றிச் செங்கண்
விமலரையு முடன்கண்ட விருப்பம்
-
திருஞான - புரா - 1023
|
நடமாடக்
கோயி னம்பர்க்கொன் றீயிற்
படமாடக் கோயிற் பகவற் கதாமே
- திருமந்திரம் |
முதலிய திருவாக்குக்கள்
காண்க. அன்பு அருளை யீனும் தாய்
என்பர் திருவள்ளுவர். ஆதலின் அன்பர் தட்டில் அன்பரும்
முதல்வருமாக அன்பும் அருளும் என்ற இரண்டும் நிற்க, மற்றைத்
தட்டிலோ, முதல்வரும் அவரது அருளும் மட்டில் நின்றன. எனவே
இரண்டிற்கு ஒன்று தாழ்ந்தது என்பதும் ஒரு கருத்தாம். முதல்வர்
மட்டு நின்ற என்ற சொற்குறிப்பும் காண்க.
அன்பருக்குத்
தாழும் தன்மை ஆண்டானாகிய பரமசிவத்தின்
மட்டிலுண்டு என்பார் முதல்வர் மட்டினின்ற தட்டு என்றார் என்பது
காஞ்சிபுரம் வித்துவான் சபாபதி முதலியார் குறிப்பு.
இப்பாட்டிலே
வாணிபம் - நீதி - வழக்கு - இலக்கியம் -
ஞானசாத்திரம் - முதலிய பல உண்மைகளையும் சுவைகளையும்
காண இனிதின் அமைத்த ஆசிரியரது தெய்வப்புலமைத்திறங் கண்டு
சிந்தித்துக் களிக்க.
அனேக
கோடிகள் - கோடிகள் என்றதனை எண்ணுப்
பெயராகவன்றிப், புதுத்துணிகளின் பெயராகக்கொண் டுரைப்பினும்
பொருந்தும். 35
|