546. மதிவி ளங்கிய தொண்டர்தம் பெருமையை
                              மண்ணோர்
 
  துதிசெய் தெங்கணு மதிசய முறவெதிர் தொழுதார்;
கதிர்வி சும்பிடை கரந்திட நிரந்தகற் பகத்தின்
புதிய பூமழை யிமையவர் மகிழ்வுடன்
                             பொழிந்தார்.
45

     (இ-ள்.) வெளிப்படை. மதியினால் விளக்கம் பெற்ற
தொண்டரது பெருமையினை இவ்வுலகத்தவர்கள் யாவரும் துதித்து
எங்கும் அதிசய உணர்ச்சி பெறத் தொழுதார்கள். விளக்கம்பெற்ற
வானுலகத்தினின்றும் அவ்வெளி மறைவு பெறும்படி நிரைந்த புதிய
இனிய கற்பக மலர்களை மழைபோல வானவர்கள் மகிழ்ச்சியுடன்
பொழிந்தார்கள்.

     (வி-ரை.) இவ்வதிசயங் கண்ட மண்ணோரும், விண்ணோரும் செய்த செயல்களை இப்பாட்டாற் கூறினார்.

     மதிவிளங்கிய மதி - மெய்யறிவு - மெய்யுணர்ச்சி.
விளங்கிய
- அந்த மதியினால் விளக்கம்பெற்ற முன்னர் “அறிவுறா“
(521) திருந்த நாயனார் இங்கு இறைவர் காட்ட அறிவு
பெற்றாராதலின் மதி விளங்கிய தொண்டர் என்றார். அத்தனை
தனங்களும் இடஇடத் தட்டு மீதெழுந்து நின்றது கண்டு வியந்த
மண்ணவர்கள் (539) நானயார் ஏறியதும் நேர்நின்றமை கண்டு
அவரது பெருமையை உணர்ந்தனராதலின் துதித்து அதிசயித்துத்
தொழுதனர்.

     அதிசயம் உற - கண்டு அனுபவிப்பது அதிசயம். “அத்தன்
ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே“ என்பது
முதலிய திருவாசகங்களும் இதுபற்றி முன்னர்க் கூறியவையுங் காண்க.

     எதிர் தொழுதார் - எதிரே - நேரே - தொழுதனர்.
கதிர்விசும்பு -ஒளியுடையவான வுலகம். வான வுலகங்கள்
ஒளியுடையன என்பதாம். கதிர்களாகிய ஞாயிறு முதலிய கோள்கள்
திரியும் விசும்பு எனினுமமையும். இடைகரந்திட - இடைவெளி
மறைய எங்கும் புதிய பூமழையேயாய்த் தோன்ற. கதிர்
வீசும்பிடைக் கரந்திட
என்று பாடங்கொண்டு கதிர் - சூரியன் -
விசும்பிடை மறைய என்று பொருள் கூறுவாருமுண்டு. நிரந்த -
அணியணியாக. இமையவர் - இமையா நாட்டத்தவராதலின் இவ்
வருள்வெளிப்பாட்டினை விரைவில் அங்கிருந்தபடியே அறிந்து
பூமழை பொழிந்து புனிதம் பெறவல்லராயினர் என்பது குறிப்பார்
இமையவர் என்ற பெயராற் சுட்டினார். “புத்தமிர்த போகம்
புசித்துவிழி யிமையாத பொன்னாடு என்பர் தாயுமானார்.

     நிறைந்த - நிரைந்த - என்பனவும் பாடங்கள். 45