547. அண்டர் பூமழை பொழியமற் றதனிடை யொளித்த  
  முண்ட வேதிய ரொருவழி யான்முத னல்லூர்ப்
பண்டு தாம்பயில கோலமே விசும்பினிற் பாகங்
கொண்ட பேதையுந் தாமுமாய்க் காட்சிமுன்
                             கொடுத்தார்.
46

     (இ-ள்.) வெளிப்படை. அண்டத் தலைவர்கள் கற்பகப்பூமழை
விசும்பு மறையப் பொழிந்தனராக, மற்றதனிடையிலே ஒரு வழியால்
ஒளித்தவராகிய திரிபுண்டரந்தரித்த வேதியர், முதன்மையாகிய
திருநல்லூரிலே, ஒரு பாகத்தில் வைத்த உமையம்மையாருந் தாமுமாக
அநாதியாய்த் தாம் பயின்ரருள்புரியும் கோலத்தினையும்
மேற்கொண்டவராகி ஆகாயத்திலே முன்னர் நின்று காட்சி
தந்தருளினார்.

     (வி-ரை.) மற்று அதனிடை ஒரு வழியான் ஒழித்த எனக்
கூட்டுக. பூமழை ஒன்று திருவருள் வெளிப்பாடு மற்றொன்று.
ஆதலின் மற்று என்றார். அதனிடை ஒளித்தலாவது தாம்
வெளிப்படத் தோற்றிய வேதிய உருவம் மறைந்து உமைபாகமாகிய
பண்டைக் கோலங் கொள்வதற்கு இடைவெளிகரந்த பூமழை
திரையிட்டு உபகரித்ததுபோல நின்றது என்றலங்கரித்து நாடகச்சுவை
பெறக்கூறியவாறு.

     முண்டவேதியர் - திருபண்டரந் தரித்த மறையவர். “சைவ
வெண்டிரு நீற்று முண்டத்தொளித் தழைப்பும்“ (508) என முன்னர்
இதைத் தேற்றம்பெறக் குறித்தகை நினைவு கூர்க. இத்திருநீறே
நாயனாரை வசீகரித்ததாம் என்பது “இறை திருநீற்று மெய்யடிமை
பிழைத்திலோ மெனின்“ (544) என முடிந்த பொருளாக அவர்
சூளுரைத்தமையாற் றுணியப்படும். ஆதலின் இதனையே இங்கு
முடித்துக் காட்டியபடி.

     ஒருவழியால் ஒளித்த - அவர் ஒளித்தற்கு ஒரு வகையாற்
பூமழை துணை செய்தது போலும் என்க. ஒரு வழியாற் பயில்
என்று கூட்டி யுரைப்பினுமாம். திருநல்லூரிலே இலிங்கத்
திருமேனியாகவும் உமாசகாயத் திருமேனியாகவும் ஒரு வழியாற்
றெரிசிக்க நின்று பண்டுதொட்டு நாயனார்க்கு அருள் தந்து பயின்ற
- பழகிய - அத்திருக்கோலமே இப்பொழுது மற்றொரு வழியிலே
பாகங் கொண்ட பேதையும் தாமுமாக முன்காட்சி கொடுத்த
கோலமாம் என்க. பண்டு நல்லூரிற் பயில் கோவமேயாய்
விசும்பினில் பேதையும் தாமுமாய் என்று கூட்டுக. விசும் பினிற்
காட்சி கொடுத்தார்
எனக் கூட்டியுரைத்து முடிக்க. 46