57.
|
வம்பு
லாமலர் நீரால் வழிபட்டுச் |
|
|
செம்பொன்
வார்கரை யெண்ணில் சிவாலயத்
தெம்பி ரானை யிறைஞ்சலி னீர்ம்பொன்னி
உம்பர் நாயகற் கன்பரு மொக்குமால். |
7 |
(இ-ள்.)
வம்புலாம்.......வழிபட்டு - வாசனையுடைய
மலர்களாலும் நீரினாலும் வழிபாடு செய்து; சம்பொன்........இறைஞ்சலின்
- செம்பொன் மணலையுடைய இருகரையிலும் உள்ள எண்ணில்லாத
சிவாலயங்களிலே எமது பெருமானைக் கும்பிடுதலினாலே; ஈர்ம்
பொன்னி - நீர்வற்றாத காவிரியாறு; உம்பர்.......ஒக்குமால் - தேவ
தேவனாகிய சிவபெருமானுடைய அடியவர்களையும் போன்றுள்ளது.
(வி-ரை.)
ஆல் - தேற்றப் பொருளில் வந்த அசைமொழி.
காவிரி; மலராலும் நீராலும், வழிபட்டுப், பொன் தூவிச்
சிவாலயங்களைச் சூழ்ந்து வணங்கிச் செல்லுதலால் அக்காரியமே
செய்யும் அன்பர்களுக்கு ஒப்புமை பெறுவதாம்.
அன்பரும் - உம்மை - சிறப்பு உம்மை. தனக்கு
உவமையில்லாத இறைவனுக்கு அன்பராவார்களும் அவ்வாறே தமக்கு
உவமை யில்லாதவர்கள். “பெருமையாற்றம்மை(யே) ஒப்பார்“ என்று
பின்னர்க் கூறுதல் காண்க. அசேதன பௌதிகப் பொருளாயிருந்தும்
செய்கையால் அவர்களையும் ஒக்கும் என்ற சிறப்புக் காண்க.
இதனை இறந்தது தழுவிய எச்சவும்மையாகக் கொண்டு மேலே கூறிய
ஒழுக்கம் போல்வதேயன்றி அன்பரையும் போல்வது என்று
உரைப்பதுமாம். அளுடைய நாயகியின் உண்ணெகிழ் கருணையின்
ஒழுக்கமே அன்பர்களை வழிப்படுத்திச் சிவபெருமானிடத்திற்
சேர்ப்பதாதலின், அதனைப் போன்ற காவிரியும் வழிபட்டுக் காட்டி
அவரையும் ஒக்கும் என்று, மேற்பாட்டினைச் சார இதனை வைத்தார்.
வம்பு உலாம் மலர்
- அன்றலர்ந்தமையால் மணம்
வீசிக்கொண்டிருக்கும்புது மலர்.
மலர் நீர்
- மலராலும் நீராலும் என உருவும்
எண்ணும்மையும் விரிக்க, “புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு
நீருண்டு“ என்பது திருமந்திரம். மலர்களையிட்ட நீர் என்றுமாம்.
அருக்கியநீர், திருமஞ்சை நீர்களின் இலக்கணம் இதுவேயாதல்
காண்க.
நீரால்
வழிபட்டு இறைஞ்சலின் - நீரால் அருக்கியம்
ஆசமனம் பாத்தியம் கொடுத்தலும் அபிடேகித்தலும் ஆம்.
இறைஞ்சல் - அடி வீழ்ந்து வணங்குதல். வழிபடுதல்
- இறைவன்
காட்டிய வழியிலே, அல்லது அவனைக் கூடும் வழியிலே படுதல்
என்க. வழியே செல்லுதல் என்பது காவிரிக்கு மிகப் பொருந்துமாறும்
காண்க. காவிரி தனது இருகரையும் உள்ள அனேக
சிவாலயங்களிலும் பூவுடன் சேர்ந்த நீரை எங்கும் நிரம்ப வீசிப்
பொன்னையும் தூவி ஆலயங்களைச் சூழ்ந்து செல்வதாகும்; ஆதலின்
இதனை அன்பர்களைப்போலக் காண்கின்றார் ஆசிரியர். காவிரியின்
வடகரையிலும். தென்கரையிலுமே பாடல்பெற்ற தலங்கள்
பெரும்பாலும் இருப்பதும் குறிப்பாம்.
தனது முன்னை நிலையாகிய கங்கையாயிருந்தபோது பெறாது,
அகத்தியமா முனிவரது கமண்டலத்திற்றங்கியதனாலே தான்பெற்ற
பயனாகிய சிவபுண்ணியத்தின் தொடர்பினாலே பின்னரும்
சிவபூசைசெய்து பெரும் பேறுபெற்றது என்ற குறிப்பும் போதருதல்
காண்க. “பொன்பரப்பி மணிவரன்றிப் புனல்பரக்குங் காவேரி“ எனப்
பின்னர்ச் சேரமான் பெருமாணாயனார் புரணாத்துட் கூறியதும்
இங்குக் காண்க.
“நுகராரமொ
டேலம்மணி செம்பொன் னுரையுந்திப
பகராவரு புனல்காவிரி பரவிப்பணிந் தேத்தும்
நிகரான்மண லிடுதண்கரை....“
-திருஞான- தேவாரம்- நட்டபாடை திருநெய்த்தானம் -
5 |
“.....பனிவரைமீப்
பண்ட மெல்லாம் பறித்துடனே நிரந்துவரு
பாய்நீர்ப்
பெண்ணை நிரந்துவரு மிருகரையும் தடவா வோடி நின்மலனை
வலங்கொண்டு நீளநோக்கித் திரிந்துலவு......“
-
திருத்தாண்டகம் - திருமுண்டீச்சரம் - 8 |
என்ற தேவாரங்களின் கருத்தும்
நோக்குக.
செம்பொன் வார்கரை
- மண்மடந்தை பொன்
மார்பிற்றாழ்வதால் இருமருங்கும் செம்பொன் வார்கரையாயிற்று.
பொன் துகளை இருகரையும் வாரி வீசுதலாலும் செம்பொன் வார்கரை
- என்பதும் ஆம். பொன்னுடைமையாலே இதற்குப் பொன்னி என்று
பெயராயிற்று. இதுபற்றி முன் உரைத்தவையும் காண்க.
ஈரம்பொன்னி
- நீர் மேலும் உள்ளும் நிறைவதனால்
ஈரம்மாறாத - என்றபடி. ஈரம் - அன்பு என்றலும்
குறிப்பு.
வம்பலர் மலர் - என்பதும் பாடம். 7
|