61. மாதர் நாறு பறிப்பவர் மாட்சியுஞ்  
  சீத நீர்முடி சேர்ப்பவர் செய்கையும்
ஓதை யார்செய் யுழுந ரொழுக்கமுங்
காதல் செய்வதொர் காட்சி மலிந்தவே.
11

     (இ-ள்.) மாதர்.......மாட்சியும் - அழகிய நாற்றுக்களைப்
பறிப்பவர்களது மாண்பும்; சீத.........செய்கையும் - அழகிய நாற்று
முடிகளை நீரிற் சேர்ப்பவர்களது செய்கைச் சிறப்பும்;
ஓதையார்......ஒழுக்கமும் - ஓசை மிகுந்த வயலை உழுது பண்படுத்தும்
உழவர்களின் வரிசையும்; காதல்.......மலிந்ததே - கண்டார்க்கு ஆசை
மேன்மேல் விளைவிக்க வல்லனவாய் ஒவ்வொன்றும் பெருங்
காட்சியாக எங்கும் மலிந்தன.

     (வி-ரை.) மாட்சியும் - செய்கையும் - ஒழுக்கமும் - காண
ஆசை உண்டாக்கும் காட்சிகளாய் அந்நாடு எங்கும் மலிந்தன
என்பதாம்.

     மாதர் - அழகு. மாதர் நாறு - அழகிய நாற்று. நாறுபறித்தல்,
முடிசேர்த்தல் உழுதல் என்ற மூன்றுவகை வெவ்வேறு உழவு
முயற்சிகள் இங்குக் கூறப்பட்டன.

     ஓதையார்........ஒழுக்கமும்.......ஓதையார்
-
முழக்கத்தினையுடைய. வலிந்த நிலத்தைச் சேறாக்கி உழவு
செய்தலின் முயற்சியும் சனத்திரளும் மிகுந்து முழக்கம்
உண்டாக்குமாதலால் ஓதையார் ஒழுக்கம் என்றார். கடினமாகிய நிலம்
ஒழுகுதற்கியலாதது; உழவிட்டுச் சேறான பின்னரே நெகிழ்ந்தோடும்
தன்மையுடைய தாம் என்பது குறிக்க உழுநர் ஒழுக்கமும் என்ற
குறிப்புமாம். ஒழுக்கம் ஒழுகும்படி செய்வது என்ற பொருளுமாதல்
காண்க. நாறு பறிக்கும்போது வேர்கள் அறாமலும் இளைய
அப்பயிரின் உயிர்களுக்குத் தீங்கு நேராமலும் தொழில் செய்ய
வேண்டுதலின் மாட்சியும் என்றும், நாறுமுடி சேர்த்துக் கட்டி நீரிலே
இடுதல்

     அவ்வாறன்றிப் புத்திகலவாத வெறும் கையினது
செய்கையேயாம் என்பார், சேர்ப்பவர் செய்கையும் என்றும் கூறினார்.

     முடி - நாற்றுக்களின் நுனி.

     முடி சேர்த்தல் - நுனிகளைச் சேர்த்துத் தொகுதியாக்குதல்.

     சீதநீர்முடி சேர்த்தல் - முடிகளைச் சீதநீர் சேர்த்தல் என்க.
முடிகளை நாறு பறித்த பின் நடுவதற்குள் பழுத்து உலராதபடி
நீருள்ள இடத்தில் இட்டு வைத்தல்.

     செய் உழுநர் ஒழுக்கம் - செய்யினை உழும் வரிசை. நாற்று
நடுதலுக்குத் தகுதியாம்படி நிலத்தைச் சேறாக உழும் செய்கை. சேறு
- இழுதுசெய் - என வரும் பாட்டினும் கூறுவது காண்க.

     காதல் செய்வதோர் காட்சி - கண்டார்க்கு ஆசை
ஊட்டுவதாகிய காட்சி. இங்குக் காதல் என்பது, நாறுபறித்தல் -
முடிசேர்த்தல் - செய்யுழுதல் என்ற செய்கைகளைக் கண்டாரது
மனத்து நிகழும் இனிய உணர்வு. இதனை விருப்ப 10
முள்ளார்
நேரிற்கண்டு உணர்க. மேலும் கருமச் சேற்றிலே முளைக்கும்
ஆன்மாக்களை அங்கிருந்து எடுத்து இறைவன் தனது புவனங்களிற்
பதித்துப் போகங்களை ஊட்டிப் பக்குவப்படுத்திச் சிவானந்த
பரபோகத்தை விளைவிப்பன் என்பது ஓர் உண்மை. குளவி தான்
எடுத்த புழுவை எடுத்த இடத்தில் தனது வடிவமாக்காது. தான்
கொண்டுபோய் வைக்குமிடமாகிய தனது கூட்டிலே ஆக்கும்
என்பதும் ஓர் உண்மை. இவ்வுண்மைத் தத்துவக் கருத்துக்களை
நாறு முளைக்கவிட்ட இடத்திலிருந்து பறித்து, இதற்காகப்
பண்படுத்திய சேற்று வயல்களில் நட்டுப் போகம் விளையும்படி
செய்வனவாகிய இங்குக் குறித்த நாறு பறித்தல் முதலிய செய்கைகள்
நினைவூட்டுவனவாம். நினைவூட்டவே, ஆன்மாக்களின் பொருட்டு
இறைவன் இவைபோன்று செய்யும் நித்தமாகிய அருட் செயல்கள்
பலவும் நினைவுக்கு வரும். வரவே, அவனிடத்துக் காதல் விளையும்.
இதனைக் காதல் செய்வதோர் காட்சி என்று குறித்தவாறு. இது “காத
லாகிக் கசிந்துகண் ணீர் மல்கி“ என்ற தேவாரத்திற் குறித்த “காதல்“
என்க. இது செய் என்ற மொழிக்குப் பொருள் கற்பித்தது போலும்.

     சீத நீண்முடி - என்பதும் பாடம்.   11