63.
|
மண்டுபுனல்
பரந்தவயல் வளர்முதலின்
சுருள்விரியக்
|
|
|
கண்டுழவர்
பதங்காட்டக் களைகளையுங்
கடைசியர்கள்
தண்டரளஞ் சொரிபணில மிடறியிடை
தளர்ந்தசைவார்
வண்டலையுங் குழலசைய மடநடையின்
வரம்பணைவார்.
|
13 |
(இ-ள்.)
மண்டு......விரிய - நட்டபின் செறிந்த புதுநீர் பரந்து
பாய்ந்து வந்த வயலிலே வளர்ந்த நெல் நாற்றின் பயிர்இலை சுருள்
விரிந்து காட்ட; கண்டு........கடைசியர்கள் - அப்பருவத்தைக் கண்டு
உழவர்கள் இதுதான் களைகட்டும் பருவம் என்று காட்ட, அவ்வாறே
களையைக் களைந்து செல்லும் உழத்தியர்கள் : தண்
தரளம்.......அசைவார் - குளிர்ந்த நீர்மையுடைய முத்துக்களை ஈனும்
சங்குகள் தம் காலில் இடறுவதால் தளர்ந்து மெல்ல அசைந்தசைந்து
செல்வார்களாய் வண்டலையும்......அணைவார்- வண்டு மொய்க்கும்
கூந்தல் அசையுமாறு இளநடையினால் அருகில் உள்ள வரம்புகளிற்
சேர்வார்கள்.
(வி-ரை.)
மண்டு புனல் - புதுப்புனலாதலின் மண்டுஎன்றார்.
மேலே 10-வது பாட்டு உரையிற்போல் உரைத்துக்கொள்க. இங்குப்
பரந்து பாயும் புனல் அதுவே யாதலின். புனல் பரந்த வயல்
-
நட்ட வயல் நடவின்பின் காய்ந்து விடாதபடி சிறுகிய அளவில்
பரந்து பாய்ந்துவந்த தன்மையால் பரந்த புனல் வயல் என்றார்.
“வெண்ணடவு காய்ந்தால் விதை முதல் காணாது” என்பது உழவர்
பழமொழியாம்.
முதலின் சுருள்
- முதல் - நெற்பயிர்; நட்ட இடத்தில்
வேரூன்றி வந்த இலையின் சுருள் என்க.
பதம் காட்ட
- நட்ட நாறு முதலில் வெண்மையுற்றுப்,
பின்னர் வேர் ஊன்ற ஊன்றப் பசுமைத்தாகும். இதனைக் கருநடவு
திரும்பும் பருவம் என்பர். பின்னர் அது குருத்துவிடும். பின்னர்
அச்சுருண்ட குருத்துச் சுருள் விரியும். இது காண்டலே களை
பிடுங்கும் பருவமாம். இது நடவுக்குப் பின்னர் 25 முதல் 30 நாட்கள்
வரை செல்லும். இந்நாட்களிலே நெற்பயிர்களோடு களைப்பயிரும்
உயிர்பெற்று வளரத் தொடங்கும். அப்பதத்துக்குமுன் களையைக்
களைந்தால் நெற்பயிர் வேரூன்றாத வகையில் சிதையும். இதன்
பின்னரும் களை களையாமல் தாமதித்தால் நெற்பயிரின் உணவைக்
களைப்பயிர் உண்டு நெல்லை மெலியச் செய்யும். ஆதலின் பயிர்
இலையின் சுருள் விரிதலையே முதலின் பதம் என்பர். இப்பருவத்தை
சுருள் என்றார்.
மேலே -
நாறு பறித்தலும் - முடிசேர்த்தலும் உழவர்
செயலாயினது போலக், களை களைதல் மாதர் செய்கையாயிற்று.
இவ்வாறே பின்னர்ப் பிறவும் காண்க. உயிர்களைப் பெற்றெடுத்தலும்
ஏதங் களைதலும் போகங்களில் வைத்துக் காத்தளித்தலும்
சிவசத்திகளின் செயலாமாதல் இங்குக் குறிப்பிற்காணத்தக்கது.
தரளம் சொரி பணிலம்
- முத்துக்களை ஈனும் சங்குகள்.
பணிலம் - சங்கு. காவிரி முத்துக்களை யுடைத்தாதல் முனனர்க்
குறிக்கப் பெற்றது. காவிரியை “ஓதநீர் நித்திலத் தாமம் ஒக்குமால்”
என முன்னர்க் கூறினதும் இங்குக் கருதத்தக்கது.
“கடலேறித்
திரைமோதிக் காவிரியி னுடன்வந்து கங்குல் வைகித்
திடலேறிச் சுரிசங்கம் செழுமுத்தங் கீன்றலைக்கும் திருவையாறே” |
என்ற திருஞான சம்பந்த
சுவாமிகள் தேவாரமும் இங்குக் குறிக்க.
இடறி - இடற - இடறுதலால் - வயல்களிற்
களைகளையும்போது அங்குள்ள சங்குகளில் தட்டுண்டு கால் இடறும்;
இடறவே, அசைவார் - என்க. இடை தளர்வார் மெல்லிய
இடையாதலின். நடையின் - நடையினால் அசைந்து மெல்லச்
செல்லுதலால் மட நடையின் என்றார்.
அசைவார்
- அணைவார் - இவ் வினைகள் தனித்தனி
வெவ்வேறு செயல்களைக் குறித்துக் கடைசியர்கள் என்ற
எழுவாயைத் தழுவின; அசைவார் - முற்றெச்சம்; அசைவாராகி
அணைவார் என்க.
அசைதல்
- பயிருக்குச் சிதைவுண்டாகாதபடி மெல்லப்
போதல்.
வரம்பணைவார் - மேலும் பயிருக்குச்
சிதைவாகாவண்ணம்
வரம்பினை அணைவார் - சேர்வார் - என்பது கருத்து.
குழலலைய
- என்பது பாடம். 13
|