27.
|
அந்தி வான்மதி சூடிய வண்ணல்தாள்
|
|
|
சிந்தி
யாவுணர்ந் தம்முனி தென்றிசை
வந்த நாவலர் கோன்புகழ் வன்றொண்டன்
எந்தை யாரரு ளாலணை வானென, |
17 |
(இ-ள்.)
அந்தி ... உணர்ந்து - மாலையில் வானிற்றோன்றும்
பிறைச் சந்திரனைச் சிரத்திலே சூடிய பெருமானது திருவடிகளைத்
தியானித்து உண்மை யுணர்ந்தவராய்; அம்முனி
- (மாதவர்
வினாவக்கேட்ட) அந்த உபமன்னிய முனிவர்; தென்றிசை ...
வன்றொண்டன் - (கயிலையிலேயிருந்து) தென்றிசையில்
வந்து
அவதரித்த நாவலூர்நம்பிகளாகிய புகழ்ச்சிமிக்க வன்றொண்டர்;
எந்தையாரருளால் - எமது பெருமானுடைய திருவருளினாலே; அணைவான் என - மீண்டும் கயிலைக்கு
எழுந்தருள்கின்றார்
என்று சொல்லி;
(வி-ரை.)
என்று மாதவர் வினாவக்கேட்ட அம்முனி
என வருவித்துக் கொள்க. அம்முனி அண்ணல்தாள் சிந்தியா
வன்றொண்டன் அணைவான் என உணர்ந்து - என்று சொல்லி -
என முடித்துக்கொள்க. அருளால் என்பது, அருளால்
தென்றிசை வந்த எனவும்,
அருளால் அணைவான் எனவும்
தீவகமாய்ப் பொருள் கொள்ளநிற்றலும் காண்க....
தென்றிசை மீது தோன்றியம்மெல்லியலாருடன் காதலின்பங்
கலந்து அணைவாய் என(27) என்று அறியப் படுதலால் தென்றிசையில் நம்பிகள்
வந்தது திருவருள் ஆணை வழியேயாம்;
இப்போது வெள்ளை யானையின்மீது மீண்டு கயிலைக்கு
எழுந்தருளுவதும் அவரது ஆணை வழியேயாம். இதனைத்
தானெனை முன்படைத்தான்எனும் திரு கொடித்தான்மலைத்
தேவாரத்தாலும் அறிகின்றோம்.
அந்தி
வான்மதி - அந்தியில் வானில் மேற்கில் முளைக்கின்ற
மதி;பிறைச்சந்திரன். குடதிசை மதியது சூடு சென்னி
- தேவாரம்.
அண்ணல் - பெருமையுடையவன்.
தாள்
சிந்தியர் உணர்ந்து - தாள்களைச் சிந்தித்து அந்தச்
சிந்தனையின் துணையால்
உணர்ந்து - என்க. மந்திரமா முனிவரிவனாரென நம்பெருமான், நந்தமரூர னென்றா
னொடித் தான்மலை
யுத்தமனே(தேவா) என இவ்வரலாற்றை நம்பிகள் வரும் வழியில்
உணர்ந்து பாடியருளிய அற்புதமும் காண்க.
மதி
சூடிய - மாதவர் இங்கு இது என்கொல் அதிசயம்
என்று கேட்டார்க்கு அதனைத் தெளிவிக்கு முன்னர் அதனைத்
தாம் உணரவேண்டியிருத்தலின் அதற்காகத் தமது மதிகொண்டு
துணியலாகாமையின், மதிசூடிய அண்ணல்தாள் சிந்தித்தனர் - என்று
குறிப்பிட்டவாறு.
சிந்தியா
உணர்ந்து - சிவன்றன்னையே உணர்ந்து
உள்ள
முனிவராயினும் இது தெரியும்படி தனித்துச் சிந்தித்து உணர்ந்தார்
என்பது. தோன்றிய சோதியின் வரலாறு தெரிய வேண்டியிருந்தது;
அவ்வாறு தெரிவதனை ஏனையோர்க்குச் சொல்லவும் வேண்டியிருந்தது; அருட்சோதியாய்க்
கயிலையில் தோன்றிய அது
புலனறிவாலும் கலையறிவாலும் உணரலாகாதது; ஏனெனில் தோன்றிய
அது புலனறிவாலும் கலையறிவாலும் உணரலாகாதது; ஏனெனில்
இவ்வறிவுகள் கட்டுப்பட்ட தன்மையுடையன. கட்டுப்படாத -
எல்லையில்லாத - அறிவினால் உணரவேண்டியவன் இறைவன்;
அவனோடு கலந்த அடியார்களும் அவ்வாறே உள்ளவர்கள். ஆதலின்
பதிஞான சிற்சத்தி உபகாரத்தால் உணரவேண்டுதலின் அண்ணல்
தாள் சிந்தியர் உணர்ந்து என்றார்.
"நெறிநீர்மையர்
நீள்வானவர் நினையுந் நினைவாகி
அறிநீர்மையி லெய்துமவர்க் கறியும் மறிவருளிக்
குறிநீர் மையர் ..............."
-
திருஇடும்பாவனம் - நட்டபாடை - 6 |
என்ற திருஞானசம்பந்த
சுவாமிகள் தேவாரங் காண்க.
வன்றொண்டன்
- நம்பிகளது பெயர்கள் பலவற்றுள்ளும்
இப்பெயரே மிகச் சிறந்தது. அவரது சரித இயல்பு முழுதும்
நினைவுறுத்துவது, மற்றுநீ வன்மை பேசி வன்றொண்டனென்னு
நாமம் பெற்றனை எனப் பின்னர்க்கூறுகின்றபடி இறைவனாலே
தரப்பெற்றது. வன்றொண்டனா யிருந்ததனாலே -இறைவனையும்
வன்மைபேசவும், விறன்மிண்டர் புறகென்னவும் - அதனால்
திருத்தொண்டத்தொகை பாடவும் - அதன் துணையால் இப்புராணம்
இயற்றவும் - காரணமாயிற்று.மற்றிதற்குப் பதிகம்
வன்றொண்டர்தாம்,புற்றிடத்தெம் புராணரருளினால், சொற்ற
மெய்த்திருத் தொண்டத்தொகை ...... என்பது காண்க. தொண்டு
இருவகைப்படும். அவை வன்றொண்டு - மென்றொண்டு என்பன. மென்றொண்டு சாத்திர விதி
விலக்குகளுக்கு உட்பட்டு அவற்றோடு
இணங்கிச் செய்வதாம்; இவற்றைக் கடந்து சாத்திர அதீதமாகச்
செய்வது வன்றொண்டாம். இது செய்பவர்கள் தற்போதம்
சிறிதுமின்றிப் பதிகரணம் அடைந்தவர்கள். இவர்கள் செய்வது
யாவும் சிவபுண்ணியமேயாம். சண்டீச நாயனார் பிதாவின் காலை
வெட்டினார். அது பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்
எனற்படி புண்ணியமாயிற்று.இத்தன்மைவாய்ந்தவர்களே இவ்வாறு
செய்தற்குரியவர்களாம். இது பற்றியே வன்றொண்டர் என்ற
இப்பெயராலே சிறப்பாய் இங்குக் குறிப்பிட்டவாறு. 17
|