74.
|
சாலியின்
கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக் |
|
|
காலிரும்
பகடு போக்குங் கடம்பெரும் பாண்டி
லீட்டம்
ஆலிய முகிலின் கூட்ட மருவரைச் சிமயச் சாரன்
மேல்வலங் கொண்டு சூழுங் காட்சியின் மிக்க
தன்றே. |
24 |
(இ-ள்.)
சாலியின்....சாய்த்து - நெற்கற்றைகள் சூடு குவிந்த
பெருமலை போன்ற போரினை மேலிருந்து அளவாய்ச் சாயச் செய்த;
காலிரும்.....ஈட்டம் - தோற்றுவிக்கும் பெரிய ஏர்களைச் செலுத்தும்
கரிய பெரிய எருமைக் கூட்டங்கள் (மிதித்துச் சூழும் காட்சியானது);
ஆலிய.....காட்சியின் - நீர்த்துளி நிறைந்த கருமேகங்கள் பெரிய
பொன்மலையின் சாரலின்மேல் வலம்வந்து சுற்றும் காட்சிபோல;
மிக்கது அன்றே - விளக்கம் மிக்கு இருந்தது; சூடு மிதிக்கும்
அந்நாளிலே.
(வி-ரை.)
நெற்கதிர்ச்சூட்டுப் போர் பொன்மலைக்கும்,
அதனைச் சாய்த்து மிதித்துச் சுற்றி வரும் கரிய எருமைக் கூட்டம்
பொன்மலைச் சாரலின்மேற் சூழும் கரிய முகிற் கூட்டத்திற்கும்
உவமம்.
கற்றை
- பல கதிர்கள் சேர்த்துக் கட்டிய கட்டு. துற்ற
தடவரை - துறுத்தல் - சேர்த்தல்; துறுத்தலினால் ஆகிய பெரிய
மலைபோன்ற தொகுதி. விரிந்த பலவற்றைச் சுருங்க ஓரிடத்திற்
சேர்ப்பது துறுத்தல் என்ப. எல்லாந் துறுத்தும் பேழைப்
பெருவயிறு - பதினோராந்திருமுறை, மூத்த நாயனார் திருவிரட்டை
மணிமாலை. (4) காலிரும்
பகடு போக்கும் - கால் இரும் +
பகடு + போக்கும் - சாலியைத் தோற்றுவிக்கும் (உண்டாக்கும்
துணைக் காரணங்களில் முதன்மையான) கருவியாகிய பெரிய
ஏர்களைச் செலுத்தும் என்க. இது பாண்டிலின் அடை. காலுதல்
தோற்றுவித்தல். பிறவினை விகுதி தொக்கது. பகல்கான் றெழுதரு
பல்கதிர்ப் பரிதி என்ற பெரும்பாணாற்றுப் படையும் காண்க. பகடு
- ஏர். பகடு புரந்தருநர் - புறநானூறு 35.
கரும்பெரும் பாண்டில்
ஈட்டம் - பாண்டில் - எருமை.
உழவிலும் பிறவற்றிலும் வேலை செய்வதற்கு எருமைகளையே
நியோகித்தல் சேக்கிழார் சுவாமிகள் மரபு. எருதுகளைச்
சிவபெருமானுக்கேயன்றி மனிதருக்காகச் செய்யும் வேலைகளில்
ஆசிரியர் பயன் படுத்துவதில்லை,
....சடையார்
தேவர்கடம் பிராட்டி யுடனே சேரமிசைக்
கொள்ளுஞ் சினமால் விடைத்தேவர் குலமன் றோவிச் சுரபிகுலம் |
என்று இக்கருத்தைச் சண்டேசுர
நாயனார் புராணத்துட் (22)
கூறியமை காண்க. ஆதலின் இங்குப் பாண்டில் என்பதனை எருது
எனவும், காலிரும்பகடு போக்கும் - என்பதில் பகடு என்றதற்கு
எருமை எனவும் கொண்டு வலிந்த கால்களையுடைய பெரிய
எருமைக் கடாக்களோடு சேர்த்து நடாத்துகின்ற கரிய எருதுகளின்
பெரிய கூட்டம் என்றும், பாண்டில் என்பதை வட்டம் என்று
பொருள்கொண்டு வலிய கால்களையுடைய பெரிய எருமைகள்
விரைந்துபோகும் சுழலால் உண்டாகும் கரிய வட்டத்தின் கூட்டம்
என்றும், உரைத்த உரைகள் பொருந்தாமை உணர்க. எருதுகளில்
கரியவற்றையே பொறுக்கிச் சேர்த்தலுக்கும், எருமைகளுடன்
எருதுகளைச் சேர்த்தலுக்கும் இயைபின்மையும் காண்க.
அன்றியும் பயிர்களைத் தோற்றுவிக்கத் துணை செய்த
அவைகளே அவற்றின் போகம் முடிவிலும் பிரிக்கத் துணை
செய்வன என்ற நயமும் தோன்றுதல் காண்க.
ஆலிய (முகில்) -
மழைத் துளிகள் பொருந்திய - நீர்
நிறைந்த - ஆலியை உடைய என்பது பொருள். ஆதலின் கரிய
முகில் என்று உரைக்கப்பெற்றது. வெண் முகிலாய்ப் பரந்தெங்கும்
பெய்யுமா மழை என்றபடி வெண்முகிலும் உளதாயினும் உவமப்
பொருளாகிய கரும்பெரும் பாண்டிலுக் கேற்பக் கருமுகில் என்க.
ஆலிய அசைவுடைய என்றுமாம். ஈட்டம் (சூழும் காட்சி) - மிக்கது
என வினைமுடிக்க.
காட்சியின் மிக்கது
- காட்சி போல விளங்கிற்று. இங்குக்
காட்சி என்றதற்கேற்க (ஈட்டம்) சூழும் காட்சி என முன்னரும்
வருவித்துரைக்கப் பெற்றது. இடப்படுவது ஈட்டம். இதற்காகக்
கொண்டுவந்து ஓரிடத்தில் இடப்படுவதனால் பாண்டிலுக்கு ஈட்டம்
என்றும், காலமும் இடமும் சேரத் தாமே கூடுவதனால் முகிலின்
கூட்டம் எனவும் குறித்தார்.
சிகரச் சாரல் -
என்பது பாடம். 24
|
|
|
|