9.
|
அருளி
னீர்மைத் திருத்தொண் டறிவருந்
|
|
|
தெருளி
னீரிது செப்புதற் காமெனின்
“வெருளின் மெய்ம்மொழி வானிழல் கூறிய
பொருளி னாகு” மெனப்புகல் வாமன்றே. |
9 |
(இ-ள்.)
அருளின்.......தெருளினீர் - அருள்வழி நிற்கும்
தன்மையாயுள்ள திருத்தொண்டின் புகழ் அறிய அரிதென்று (மேலே
“அளவுகூட உரைப்பது ” என்றும், “தெரிவரும் பெருமை ” என்றும்
கூறி உணர்ந்துள்ள நீர்; இது செப்புதற்கு ஆம்? எனின் - இது
செப்புதற்குத் துணியலாமோ? என்பீராகில்; வெருள் இல்....
பொருளின் - மயக்க நீக்கும் மெய்ம்மொழியாலே வானினிடத்தே
யமர்ந்து கூறியருளிய பொருளின் துணையாலே; “ஆம்”
எனப்புகல்வாம் - அது யாம் செப்புதற்கு உரித்தேயாம்
என்று
துணிந்து கூறுவோம்;அன்றே - அவன் மெய்ம்மொழி கூறித்
துணைசெய்த அப்பொழுதே.
(வி-ரை.)
அருளின் நீர்மைத் திருத்தொண்டு -
பிறிதொன்றினும் படாது அருள்வயப்பட்டு அவ்வழியே நிற்கும்
திருத்தொண்டு. “ஏகனாகி இறைபணி நிற்க”
என்ற விதிப்படி
உள்ள அடிமைத் திறம். அறிவரும் தெருளினீர் - அறிவரிது என்ற
தெருட்சி பெற்ற, அறிவு - அரும் தெருள் - இல் - நீர் என்று
பிரித்து, உரிய அறிவும் அரிய ஞானமும் இல்லாத நீர் என்று
உரைத்தலும் ஒன்று.
ஆம் எனின் - ஆமோ என்று வினவுவீராயின். ஆம்
- ஆமோ?; வினாத்தொக்கது.
வெருள்
- வெருட்சி; மயக்கம்; இல் - இல்லையாகச் செய்யும்;
போக்கும்.
மெய் மொழி வான்நிழல் கூறிய பொருள் - (1) வானினின்றும்
நிழலாய்க் கூறிய மெய்ம்மொழிப் பொருள். (2) மெய்ம்மொழிவான்
நிழல் - உண்மையே மொழிபவன் - சத்தாகிய இறைவனுடைய
நிழல். வெளிப்படாத நிலை - மறைந்து நின்று
கூறியநிலை. (3)
வான் நிழல் கூறிய மெய்ம்மொழியும் பொருளும் என்றுமாம். நிழல்
- ஒரு பொருளின் சாயலாய்க் காணப்பட்டு அப்பொருளை அனுமான
அளவையால் அறிவிப்பது.
வெருளின்
மெய்ம்மொழிவான் - இறைவன்; நிழல் -
அவனது திருவுருவின் பிரதிபிம்பமாகிய நம்பிகள்; அருளிய
பொருளிள் - திருத்தொண்டத் தொகையின் துணையானே; ஆம் -
ஆகும் என்ற குறிப்புப்பட உரைப்பாருமுண்டு; நம்பிகள் இறைவரது
திருவுருவின் பிரதிவிம்பம் - சாயை - என்பது
- “கயிலை நாயகன்
காமரு தன்னுருப், பயிலு மாடியிற் பார்த்தங் கழைத்தலும், வெயில்
்செய் வெங்கதிர் கோடி விராயெனச், செயிரி லாதமெய்த் தேசொடுந்
தோன்றினான்” (பன் - பட - 1) என்ற பேரூர்ப்புராணத்தாலறிக.
26-ன் கீழ் உரைப்பவை பார்க்க.
பொருள்
- உலகெலாம் என்று எடுத்துக் கொடுத்த முதல் மொழியாகிய ஊதியம். மெய்ம்மொழி
- மெய்யனுடைய மொழி;
மெய்யாகிய மொழி என்க. இதன் விரிவு முதற்பாட்டில் காண்க.
புராணம்
பாடத் தொடங்குமுன் ஆசிரியர் சேக்கிழார் பெருமான்
நடராசப் பெருமான் திருமுன்பு நின்று வணங்கி
“அடிகளே!.....உனது அடியர் சீர் அடியேன் உரைத்திட இடர்
கெடுத்து அடி எடுத்துத் தருவாய்” என்று பிரார்த்தித்தனர்.
அதற்கு
“அலைபு
னற்பகி ரதிந திச்சடை யாட வாடர வாடநின்
றிலகு மன்றினி லாடு வார்திரு வருளி னால்அசரீரிவாக்
‘குலகெ லா’மென வடியெ டுத்துரை செய்த பேரொலி
யோசைமிக்
கிலகு சீரடி யார்செ விப்புலத் தெங்கு மாகி
நிறைந்ததால்” |
என்று இதனையே உமாபதி
சிவாசாரியர் திருத்தொண்டர் புராண வரலாற்றிற் கூறியருளியது காண்க. 9
|