| 90. 
               | 
          அங்கு 
            ரைக்கென் னளவப் பதியிலார் | 
            | 
         
         
          |   | 
          தங்கண் 
            மாளிகை யின்னொன்று சம்புவின் 
            பங்கி னாடிருச் சேடி பரவையா 
            மங்கை யாரவ தாரஞ்செய் மாளிகை. | 
          5 | 
         
       
       
           (இ-ள்.) 
      அங்கு ... அளவு - அவ்விடத்தே உரைக்கும்  
      உரைகளுக்கு என்ன அளவிருக்கின்றது?; அப்பதியிலார் ... மாளிகை  
      - அங்குள்ள மாளிகைகளிலே பதியிலார் எனும் உருத்திர கணிகையர்  
      மாளிகைகள் பலவற்றுள் ஒன்று, இறைவனது ஒருபாகத்திலே உள்ள  
      உமை அம்மையாரினது சேடியாகிய (அனிந்திதை கமலினி என்னும்  
      இரு சேடிமார்களில் ஒருவராகிய) கமலினியார் வந்து அவதரிக்க  
      நின்றது என்று சொல்வோமானால். 
       
           (வி-ரை.) 
      அன்றியும் அவ்வீதி தூதுபோய் நடந்த திருவடி  
      நாறும் எனின் இதன் பெருமை உரையில் அளவுபடுமோ? என  
      வரும்பாட்டையும் சேர்த்து முடித்தலுமாம். 
       
           அங்கு - அவ்வீதிகளைப்பற்றி - என் உரைக்கு? என் 
       
      சொல்வேன் என்றலுமாம். 
       
           பதியிலார் 
      - உருத்திர கணிகையர். இஃது ஒரு குலம்.  
      பதியிலார் - சிவபெருமானையும் அவனே போன்ற 
       
      அவனடியார்களையுமேயன்றி வேறு பதியில்லாதவர். “உன்னடியார்  
      தாள் பணிவோ மாங்கவர்க்கே பாங்காவோ, மன்னவரே யெங்கணவ  
      ராவார்” எனவும், “எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க,  
      யெங்கை யுனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க” எனவும் வரும்  
      திருவாசகங்கள் காண்க. இன்னும் இதன் விரிவைப் பின்னர்த்  
      தடுத்தாட்கொண்ட புராணம் 131-ம் பாட்டிற் காண்க.  
       
           சம்புவின் 
      பங்கினாள் - சம்பு - சுகத்தை உண்டு 
      பண்ணுபவன் என்பது பகுதிப்பொருள்; சிவபெருமான். “இன்பஞ்  
      செய்தலிற் சங்கா; னெம்பிரான், இன்பமாக்கலிற் சம்பு; விடும்பை 
      நோய், என்பதோடடுமியல்பி னுருத்திரன், என்பரால்” (காஞ்சிப்  
      புரா - பரசுராமீச - 44). சம்புவின் - சிவபெருமானுடைய சம்பு +  
      இன் - சம்புவினது இனிய பங்குக்குடையவன் என்றலுமாம். சிவபெருமானது ஒரு பகுதி அம்மையாருடையது 
      ஆயினமையின்  
      பங்கினாள் என்றார். “மாதிருக்கும் பாதியன்” முதலிய  
      எண்ணிறந்த ஆட்சிகள் காண்க. 
       
           பங்கினாள் திருச்சேடி 
      - இச்சேடியர்கள் இருவர்;  
      இவருட் கமலினியாரே பரவையாராய் வந்து இங்கு அவதரித்தவர்.  
      இவ்வரலாறு முன்னர்த் திருமலைச் சிறப்பிற் கூறப்பெற்றது.  
      பரவையார் ஆம் மங்கை - பரவையாராக ஆகும் 
      மங்கை;  
      கமலினியார். 
       
           அவதாரஞ் செய் மாளிகை 
      - அவதரித்தற் கிடமாகிய  
      திருமாளிகை. 
       
           மாளிகையின் ஒன்று 
      - மேற்பாட்டிலே சொல்லப் பெற்ற  
      மாளிகை பலவற்றுள்ளும் பதியிலார் மாளிகை பல; அவற்றுள்  
      ஒன்று மங்கையார் அவதரிக்கும் இடம் என்க. 
       
           இதுவும் வரும் பாட்டும் இடைநகர் வீதியைச் சொல்வன. 
      5 
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |