97.
|
நிலம
கட்கழ கார்தரு நீணுதற் |
|
|
றிலக
மொப்பது செம்பியர் வாழ்பதி
மலர்ம கட்குவண் டாமரை போன்மலர்ந்
தலகில் சீர்த்திரு வாரூர் விளங்குமால். |
12 |
(இ-ள்.)
நிலமகட்கு ... பதி - நிலமாகிய மகளுக்கு அழகு
நிறைந்த நீண்ட நெற்றியிலே திலகம் போல்வது சோழர்கள்
அரசுபுரிந்து வாழும் இந்நகரம்; மலர் மகட்கு ... விளங்குமால் -
(அதனோடு) மலர்மகளுக்கு (உறையுளாகிய) வளமுடைய தாமரை
போல மலர்ந்து அளவில்லாத சிறப்புடைய இத்திருவாரூர் விளங்கும்.
இதுமேலே கூறிய புறநகர் - இடைநகர் - உண்ணகர்ச்
சிறப்புக்களை எல்லாம் தொகுத் துரைப்பது.
(வி-ரை.)
நிலமகட்குத் திலகம் போன்றதாகிய, செம்பியர்
வாழ்பதியாகிய அலகில் சீர்த்திருவாரூர் மலர் மகளுக்குத்
தாமரைபோல மலர்ந்து விளங்கும் என்று கூட்டுக.
நிலமகள் - பூமிதேவி. மலர்மகள்
- சீதேவி; இலக்குமி.
இந்நகர் நிலமகளுக்கு இருப்பிடமும் ஆம் என்றதாம்.
அழகு ஆர்தரு நீள்நுதல் அழகு நிறைந்து நீண்ட நெற்றி
எனவே நிலமாய மகளுக்குச் சோழ நாடு நீண்ட நெற்றி போன்றும்,
திருவாரூர் அதன் திலகம் போன்றும் உள்ளன என்க. நுதல்
என்றதனால் சோழ நாடு என்பதை வருவித்துக் கொள்க.
செம்பியர் வாழ் என்றதனாலும், (அக்குறிப்புப் பற்றி)
நீள்
என்றதனாலும் நுதலின் நீளமும் நாட்டின் நீளமும் குறித்தவாறு.
நுதல் - திலகம் - புருவநடுவாகிய
தியானத்தானத்தைக் குறிக்கும்.
இத்திருநகர் நிலமகளின் திலகம் என்றது நிலத் தன்மை வாய்ந்து
எழுந்து, அவளுக்குத் தியானத்தலம் போன்ற புற்றினிடமாக
இறைவன் எழுந்தருளியிருக்கும் குறிப்புப் பற்றி என்க.
அழகு ஆர்தரு
- அழகு நிறைவிக்கும். தரு - (கற்பகம்)
போல்வதும், நுதல் - திலகம் ஒப்பதும் என்று
பிரித்து உம்மை
விரித்து உரைப்பதுமாம்; தரு - விரும்பியதெல்லாம்
கொடுத்தல்போல
- இந்நகரும் வேண்டியவற்றை எல்லாம் நிலத்தில் வாழ்வாருக்குத்
தருதலான் (கொடுக்கும் தியாகேசர் எழுந்தருளியிருத்தலால்) கற்பகம்
போலும் என்க. செம்பியர் - சோழர்.
மலர் மகட்கு வண்டாமரைபோல் மலர்ந்து. தாமரையிற்போல
இத்திருநகரில் என்றும் இலக்குமி வழிபட்டு உறைதலால் மலர்ந்து
என்றார். மலராள் வழிபட்டமை முதற்பாட்டிலே கூறினார். மலர்மகள்
சரச்சுவதி - என்பாருமுண்டு.
நிலமகள் - மலர்மகள்
- இருவரையும் நாயகிகளாக
உடைய திருமால் விரும்பி வழிபட்ட தலமாதலாலும், தமது மார்பில்
திருப்பாற்கடலில் தியானப்பொருளாய் வைத்து வழிபட்ட தியாகேசர்
எழுந்தருளி யிருத்தலாலும், திருமாலின் நாயகிகளுக்கும் சிறப்புச்
செய்வதாம் என்பதும் குறிப்பாகும்.
“பையஞ்
சுடர்விடு நாகப் பள்ளிகொள் வானுள்ளத் தானும்“
|
என்ற தேவாரமுங் காண்க.
12
|
|
|
|