1086.
|
தேனி
றைந்தசெந் தினையிடி தருமலைச் சீறூர்;
பானி றைந்தபுற் பதத்தன முல்லைநீள் பாடி;
தூநெ லன்னநெய் கன்னலின் கனியதண் டுறையூர்;
மீனி றைந்தபே ருணவின வேலைவைப் பிடங்கள். 9 |
(இ-ள்.)
வெளிப்படை. குறிஞ்சிக்குரிய சீறூர்கள்
தேன்
நிறையக் கலந்த செந்தினை மாவை யுடையன; முல்லைக்குரிய
நீண்ட பாடிகள் பால் சேர்த்து அடப்பட்ட புல்லரிசிச்
சோற்றையுடையன; மருத நிலத்தின் குளிர்ந்த துறைகளையுடைய
ஊர்கள் தூய நெல்லரிசியன்னமும் நெய்யும் கரும்பும் இனிய
கனிகளும் என்றிவற்றையுடையன; நெய்தற் பகுதியாகிய
கடலைச்சார்ந்த இடங்கள் மீன்கள் நிறைந்த பேருணவினையுடையன.
(வி-ரை.)
இப்பாட்டினால் நானிலக் கருப்பொருள்களின்
ஊர்களையும் உணாவினையும் கூறினார். உணவினைக்
கூறியவாற்றால் அவ்வுணவு பெறும் வகையிற் செய்யப்படும் செய்தி -
தொழில் - களும் உடன் கூறியவாறுமாயிற்று. ஊர்கள், குறிஞ்சி
நிலத்தில் சீறூர் எனவும், முல்லையில்
பாடி எனவும், மருதத்தில்
ஊர்எனவும் (நெய்தலில் பட்டினம் - பாக்கம் - எனவும்)
பெயர்பெறும். வைப்பு என்பது பொதுப்பெயர்.
உணவு - அவ்வ
நிலங்களில் வாழ்கின்ற மக்கள் அங்கங்கும்
மிகுதியாய்க் கிடைப்பவையும் விளையக்கூடியவையுமாகிய விளை
பொருள்களில் தக்கவற்றையே உணவாக்கிக் கொள்ளுதல்
இயல்பாதலின் இங்குக் கூறிய உணவுவகைகள் அவ்வநிலத்திற்
குரியவாயின. இதுவே தமிழிற்குச் சிறப்புரிமையாகிய பொருளிலக்கண
அமைதியாகும். சொல்லும் பொருளும் ஒத்தியங்கும் என்ற உண்மை
தமிழுக்கு உரியது என்பது இதனாற் கண்டு கொள்க.
இங்குத் தேனும்
தினையும் மலைகளிலும், புல்லரிசியும் பாலும்
முல்லையிலும், நெல் - நெய் - கரும்பு - கனி முதலியன
வயல்களிலும், மீன் கடலிலும் இயல்பாகவே மிகுதியும் படுகின்ற
தன்மையும் காண்க. மீன்நிறைந்த பேருணவு -
என்றது கடலினுள்
பெருமீன்கள் மிகுதியாகக் கிடைக்கும் அளவினையும்,
ஏனைநிலங்களிற் போலப் பருவமும் சிரமமும் இன்றி இவ்வுணவு
பெறும் எளிமையையும், இவ்வுணாவிற் பயிலும் மாக்கள் இதிற்
கொள்ளும் ஆர்வத்தின் மிகுதியினையும் குறித்தபடியாம். 9
|