(வி-ரை.)
இதனால் வாளை, சேல், (கெண்டை), வரால் என்ற மூன்று வகை மீன்கள் இவ்வுழவின்
பகுதிகளில் செய்யும்
செயல்களை இடையூறு செய்வன போலக்கூறினார். வாளை
மீன்கள்
குறுக்கிட்டுக் கால்களில் நீர்வருதலைத் தடுக்கும்; சேல்கள் பல
கூடியதனால் பள்ளவயல் கரைபோல மேடிட்டுப்போம்; வரால்கள்
மதகினுட் புகுந்து நீர்வரும் வழியினை அடைக்கும் என்க.
மறித்திட
- விலங்குவ - உயர்த்துவ - அறுப்பன -
நாறுநட்டுக் களைகட்டபின் விளைவுமுற்றி அறுக்கும் வரை
நீர்ப்பாய்ச்சுதல் தவிர வேறு உழவுவினைகள் இல்லை. அக்காலத்து
நீர்பாய்வதனை இடையூறின்றி நிகழச் செய்தலே உழவர் உழத்தியர்
தொழிலாம். இங்கு மீன்களால் நீர்ச்செலவின் நிகழும்
இடையூறுகளைக் கூறியவதனால் அவற்றை விலக்கி நீர்பாயும்படிச்
செய்வதும் குறிப்பாற் கூறப்பட்டமைகாண்க. இடையூற்றை நீக்கும்
வகையால் உழவுக்குத் துணைசெய்வதோடு தமது மீன் உணவுக்கும்
துணை செய்துகொள்பவர் என்ற குறிப்புமாம். நீர் வளத்தால் மிக்குப்
பெருகிய மீன்களின் செழிப்பும், அவற்றின் செயலால் நெல்
விளைவுவரை உள்ள காலப்பகுதியின் செலவும் உணர்த்திய திறம்
காண்க. இவ்வாறே முன்னர்த் திருநாட்டுச் சிறப்பில் நாறு நட்டுக்
களைகட்டபின் கடைச்சியர்களின் விளையாட்டும், வயன்மாதர்
சிறுமகளிர் விளையாட்டுமாகக் காலங்கழித்துப், பயிர் வளர்ந்து
முற்றும்வரை காலம்செல்லுதலைக் காட்டிய திறமும்,
அவ்விடத்துரைத்தவையும் இங்கு நினைவு கூர்க. (63-66).
கரைப்படுத்துச்
சேற்குலம் பழனம் உயர்த்துவ - என்றது
சேல்கள் மிகுதியாய் நெருங்கிச். செறிந்து தங்கும் தன்மையினை
உணர்த்திற்று. நெருங்குசேல் என்ற குறிப்புமிது.
சேல் -
கெண்டைமீன். இதற்கு இவ்வாறன்றி சேல்கள் ஒன்றன்மேலொன்று
படுத்துக்கரைகளை உயர்த்துவ என்றுரைத்தனர் முன்னுரைகாரர்கள்.
வரால்
- வேகமான நீரோட்டத்தினும் எதிர்த்துச் செல்லும்
இயல்பு குறித்து அவை மதகுவாயில் வரும் வேகமான நீர் வழியிற்
புகுந்து நீர்வழக்கு அறுப்பன என்றார். சுருங்கை
-
நீர்வருதற்கமைத்த சிறுவழி; மதகுவாய். வழக்கு
- வழங்குதல் -
வருதல். முன்னரும் வழங்குவ (1100) என்றது
காண்க.
வாளைகள்
கால்களை மறித்திட - அளவாற் பெரியனவாய்
வேகமாய் இயங்குதலன்றி அங்கங்கும் கிடக்கும். இயல்பினை
உடையன என்பது குறிப்பு. வரால்கள் தொகுதியாயும்,
சேல்கள்
நெருங்கியும் இயங்குமியல்பினை முறையே தொகுதி என்றும்,
நெருங்கு என்றும் குறித்த ஆசிரியர் அவ்வாறன்றித்
தனித்தனி
யியங்கும் வாளையை அடைமொழியின்றித் தனிக் கூறிய நயமும்
காண்க. 25