1115. |
வாம்பெ
ருந்திரை வளாகமுன் குடிபயில் வரைப்பிற்
றாம்ப ரப்பிய கயல்களின் விழிக்கய றவிரக்
காம்பி னேர்வருந் தோளியர் கழிக்கயல் விலைசெய் தேம்பொ திந்தசின் மழலைமென்
மொழியசெவ்
வழியாழ்.
38 |
(இ-ள்.)
வெளிப்படை.
வாவுகின்ற பெரிய அலைகள் சூழ்ந்த
வளாகத்தின் முன்னே குடிகளின் இருப்பிடங்களில் மூங்கிலை ஒத்த
தோள்களையுடைய பரத்தியர்கள் தாம் பரப்பிய கயல்மீன்களுள்,
கண்களாகிய கயல்மீன் நீங்கலாக, அக்கழிக் கயல் மீன்களை
விலைப்படுத்துகின்ற இனிமை மிகுந்த சிறிய மழலையாகிய மென்
மொழிகளின் இனிய தன்மையை, அந்நிலத்துக்குரிய செவ்வழியாழ்
பெற்றிருக்கின்றது.
(வி-ரை.)வாம்
- வாவும். குதித்து மேற் கிளம்பும்.
திரைவளாகம் முன்
- அலைகளால் வளைக்கப்பட்ட இடத்தின்
முன்னே. வளாகம் - வளைக்கப்பட்ட இடம்.
குடி பயில் வரைப்பு
- பரதவர் குடியிக்கும் இடம்.
தாம்பரப்பிய
கயல்களின் விழிக்கயல் தவிரக்
கழிக்கயல்விலை செய் - என்றது பரத்தியர் இருவகைக்கயல்களைப் பரப்புவர்;
ஒன்று கழிக்கயல்; மற்றது விழிக்கயல். இவ்விரண்டனுள்
விழிக்கயல் நீங்கக் கழிக்கயல் மட்டும் விலைப்படுவன என்றதாம்.
விழிக்கயல்
பரப்புதலாவது விழியின் பரந்த செயல்கொண்டு
கயல்களை அளந்து நிச்சயித்தற்கும், விலைக்குக்கொள்வோரைத்
தெரிந்துகோடற்கும் பார்வை செலுத்துதல்.
கழிக்கயல்
பரப்புதலாவது கழியிற் படுத்த மீன்களை விலைப்
பொருட்டு இனம் பிரித்தும் வேறுவகையானும் பரப்பிக் காட்டுதல்.
உலரவைத்தற்காகப் பரப்பிய என்பாருமுண்டு.
விழிக்கயல்
தவிர என்றதனால் விழிக்கயல்
விலைப்பண்டமாக்கப்படுதல் இல்லை என்பது. இவர்களது பார்வை
காமப்பொருட்டு அயலவரிடத்துச் செல்லாது என்ற இதனாற்
பரத்தியரது கற்பின்றிறமும் குறித்தவாறு. "காச லம்பு லையவர்
கண்ணெனும், பூசலம்பு நெறியின் புறஞ்செலா" என்ற கம்பர் பாட்டும்
கருதுக.
காம்பின்
நேர்வரும் தோளியர் - இதனாற் பரத்தியரது
உடலியலின் அழகு குறிக்கப்பட்டது. நீள் - சாயன்மென்னடை
(1111) என்பவையும் இக்கருத்துப் பற்றியன.
விலைசெய்
தேம் பொதிந்த சின்மழலை மென்மொழி -
மீன் விலைசெய்தல் இழி தொழிலேயாயினும் அதனை
மெல்லியமொழி கொண்டு இயற்றி நலம்பெறும் பரத்தியரது
மெல்லிய நல்லியல்பும் உடன் குறிக்கப்பட்டது காண்க.
மழலை
மென்மொழிய செவ்வழி யாழ் - மழலைமொழி
செவ்வழியாழ் போன்றது என்பதனை மாற்றி யாழ் மழலைமொழி
போன்றன என்று ஒதினார் பரத்தியரின் மொழிச் சிறப்பும் உடன்
கூறுதற்கு. தேம்பொதிந்த சின் மழலை என்ற
கருத்துமிது.
மொழிய - மொழிகளின் றன்மையை - இனிமையை - உடையன.
மொழி - சாதி யொருமை. மொழிபோல இசைத்தால்
யாழின்
சிறப்பியல்புமாம். செவ்வழி
யாழ் - ய்தனிலத்துக்குரிய யாழ்.
கயல் விலைப்படுத்துதல் நெய்தனிலச் செய்தி. நெய்தற்
கருப்பொருள்களுள் இரண்டு கூறியவாறு. 38
|