1122. |
அயன றும்புற
வினிலிடைச் சியரணி நடையும்
வியனெ டும்பணை யுழத்தியர் சாயலும் விரும்பி
யியலு மன்னமுந் தோகையு மெதிரெதிர் பயில
வயலு முல்லையு மியைவன பலவுள மருங்கு. 45 |
(இ-ள்.) வெளிப்படை.
ஒன்றனையொன்று அடுத்துள்ள,
மணங்கமழும் முல்லப்புறவில் வாழும் இடைச்சியர்களது அழகிய
நடையினையும், அகன்ற நெடிய வயல்களையுடைய மருதநிலத்தில்
வாழும் உழத்தியர்களது சாயலையும் விரும்பி இயங்குகின்ற
அன்னமும் (மருதம்), மயிலும் (முல்லை) எதிர் எதிர் பயில்வதனால்
மருதமும் முல்லையும் கூடுவனவாகிய பல நிலங்கள்
அந்தப்பக்கங்களில் உள்ளன.
(வி-ரை.)
அயல் - அடுத்துள்ள. நறும்புறவு - நறுமை
மணம். இதுபற்றி முன்உரைத்தவை பார்க்க.
புறவு. இடநோக்கி
முல்லைப்புறவினைக் குறித்தது.
இடைச்சியர்
- முல்லை நிலமகளிர். உழத்தியர் -
மருதநிலமகளிர். அன்னம் - மருதத்துக்குரியது.
தோகை குறிஞ்சிப்
பொருளாயினும் சிறுபான்மை முல்லைக்கும் வரும். "முல்லைக்
குரியபுள் கானங் கோழியும் மயிலும் சிவலும்" (இறைய - 1 - உரை).
அன்னம் சிறுபான்மை நெய்தலுக்கும் உரியது. "அன்னந் தாய
முன்றுறைச் சூழல்" (1114) என்றது காண்க.
அன்னமும் தோகையும்
எதிர் எதிர் பயிலுதலாவது -
இடைச்சியரது நடையை விரும்பி அன்னமும், உழத்தியரது சாயலை
விரும்பி மயிலும் முறையே மருதநிலத்திலிருந்து முல்லைநிலத்துக்கும்
முல்லைநிலத்திலிருந்து மருதத்துக்கும் பயிலுதலின்,
ஒன்றனையொன்று எதிர் எதிர் சந்திப்பன என்பது கருத்து.
பயிலுதல்- அவர்களுக்கெதிரில் நடந்து பழகுதல் என்று
கொள்ளலுமாம்.
வயல்
- மருதம். விரும்பி எதிரெதிர் பயில
- தற்குறிப்பேற்றம். 45
|