1154.
|
மன்னு
கின்றவத் திருநகர் வரைப்பின்
மண்ணின் மிக்கதோர் நன்மையி னாலே,
துன்னும் யானையைத் தூற்றில்வாழ் முயன்முன்
றுரக்க வெய்திய தொலைவிலூக் கத்தாற்
றன்னி லத்துநின் றகற்றுதல் செய்யுந்
தான, மன்றியுந் தநுவெழுந் தரணி,
யெந்நி லத்தினுங் காண்பரு மிறவாத் தான
மென்றிவை யியல்பினி லுடைத்தால்.
77 |
(இ-ள்.)
வெளிப்படை. நிலைபெற்ற அந்தக் காஞ்சிபுரத்
திருநகரத்தின் எல்லையுள், இந்நிலவுலகத்தில் மிகுந்ததோர்
நன்மையினால், அணுகநெருங்கிய ஒரு யானையைத் தூற்றில்
வாழ்கின்ற ஒரு முயலானது ஓடும்படி கெடாத ஊக்கத்தினால்
தன்னிடத்தினின்றும் அகலச் செய்யும் இடமும்,அதுவன்றியும்
உயிர்நீங்கிய உடம்புகள் மீளவும் உயிர்பெற்றெழுகின்ற
இடமும்,
எந்நிலத்திலும் காண்பதற்கரிதாகிய இறவாத்தானம் என்ற
இடமும்,
ஆகிய இவைகளை அந்நகரம் இயல்பாக உடையது.
(வி-ரை.)
இப்பாட்டால், முயல்கரி தொடர்பொது,
தநுவெழுந்தரணி, இறவாத்தானம் என்ற மூன்றிடங்களையும்பற்றி
நகர்வளம் பேசப்பட்டது.
யானையை
முயல் துரக்க - என்றது அந்த இடத்தின்
பலத்தினாலே, அங்கு இருந்த குறுமுயல் அங்கு
வந்த யானையைத்
தன்னிடத்தினின்று அகற்றவல்லது என்பதாம். "குறுமுயல்போய்க்
கரிதொடர் பொது" (கந்தபுராணம்),"மதகரியை முயலூக்கித் துரக்கு
மொன்றில்" (காஞ்சிப்புராணம்) என்பவை காண்க. இவ்வாறே ஒரு
கோழி யானையைத் துரத்திய பூசாரமுள்ள உறையூரின் வரலாறும்
அதுபற்றி வந்த கோழியூர் என்ற பெயர்க்காரணமும் காண்க.
தநு
எழும் தரணி - உயிர்நீங்கிய உடலை இட்டால்
உயிர்பெற்றெழும் இடம்.
இறவாத்தானம்
- காஞ்சிப்புராணத்தினுள் இறவாத்தானப்
படலம், பிறவாத் தானப்படலம் என்றவை பார்க்க.
தொலைவில்
ஊக்கம் - அழிக்கலாகாத ஊக்கம். இதனை
"ஊக்கித் துரக்கும்" என்றனர் காஞ்சிப்புராணமுடையார்.
இயல்பினின்
உடைத்து - (இவற்றைச்) செயற்கையானன்றி
அந்நகர் தன்னியற்கையாலுடையது. 77
|