1209.
|
யாக
நிலவுஞ் சாலைதொறு மறையோ ரீந்த
வவியுணவின்
பாக நுகர வருமாலு மயனு மூரும் படர்சிறைப்புண்
மாக மிகந்து வந்திருக்குஞ் சேக்கை
யெனவும், வானவர்கோ
னாக மணையுங் கந்தெனவு நாட்டும் யூப வீட்டமுள.
4 |
(இ-ள்.)
வெளிப்படை. யாகங்கள் - செய்யப்படுகின்ற சாலைகள் தோறும் மறையவர் கொடுத்த அவிப்பாகத்தைஉண்ணுதற்கு
வருகின்ற
மாலும் பிரமனும் ஏறி வருகின்ற படரும் சிறகுகளையுடைய (கருடனும்
அன்னமும் ஆகிய) பறவைகள் ஆகாயத்திலிருந்துவந்து
தங்குதற்குரிய இருப்பிடம்போலவும், (அவ்வாறே வரும்)
தேவேந்திரனுடைய(ஊர்தியாகிய ஐராவதம் என்னும்) யானையைக்
கட்டுந் தறிபோலவும், நாட்டப்படும் யூபத்தம்பங்களின் கூட்டம்
உள்ளன.
(வி-ரை.)
யாக நிலவும் சாலை - வேள்விச் சாலைகள்.யூபம்
- வேள்விப் பசுவை கட்டும் தம்பம். ஓமத்தறி. சேக்கை- கூடு -
இருப்பிடம் - பறவைகள் தங்குமிடம். "பைம்பொழிற்சேக்கைக
ணோக்கினவாற், பகலோங் கிருங்கழி வாய்க்கொழு மீனுண்ட
வன்னங்களே" (188) என்ற திருக்கோவையாரும்,"புள்ளினம் வைகு
சேக்கைகள் மேற்செல" (304) என்றதும் காண்க. கந்து - யானையக்
கட்டும் தறி. "யூப வேள்விப்பெரும்பெயர்ச்சாலை" (77) என்றதும்
காண்க.
யூப
ஈட்டம் சேக்கை எனவும் கந்து எனவும் உள -என்க. வேள்விகளில் பிரமா
விட்டுணு இந்திரன் முதலிய தேவர்களுக்கு
அவிப்பாகம் தரப்படும்; அதற்காக அவர்கள் வரும்போது தங்கள்
தங்கள் ஊர்திகளில் ஏறி வருவார்கள்; அவை வேள்விச் சாலைகளின்
பக்கத்திற் தங்கவேண்டுமாதலின் யூபத்தம்பங்கள் தங்குவதற்கு
உதவுவன போன்றிருந்தன என்பது கருத்து. யூபத்தம்பங்களின்
உயர்ந்த அகன்ற உச்சியிடங்கள் மேலிருந்து வரும்
பறவைகளாகிய கருடன் அன்னம் என்ற ஊர்திகள் தங்குமிடம்
போலவும், அடியகன்ற யூபம் கீழ் ஊர்ந்து வரும் யானை கட்டும்
தறிபோலவும் உள்ளது என்க. உவமைகள் எண்ணும்மைகள்.
ஒரு பொருளையே
இரண்டு பொருளுக்கு உவமைஆக்கினார்.
மெய்பற்றி வந்த உவமைகள். இப்பாட்டு மறையவர் வேள்வி
குறித்தது.
படர்
சிறைப்புள் - புட்கள் கருடனும் அன்னமும்.
புள் - பன்மை குறித்த ஒருமை. நாகம்
- யானை -
ஐராவதம்.
ஈந்த
அவி உணவின் பாகம் - இங்குச் சிவபொருமானைக்
குறித்துச் சொல்லாத காரணமாவது, சிவனே வேள்விகட்கெல்லாம்
முதல்வராகலானும், சிவனையன்றிச் செய்யும் வேள்விகள் தக்கன்
வேள்விபோல முற்றுப்பெறாது சிதைவு பட்டொழியுமாகலானும்,
சிவபெருமானுக்கு முதற்கண் அவிகொடுத்து எழுந்தருளுவித்த
பின்னரே ஏனைத் தேவருக்கு அவியுணவு தருதல் மரபாதலானும்,
விட்டுணு பிரமன் இந்திரன் முதலினோர் சிவனுக்குரிய
வேள்விகளைக் காத்தற் பொருட்டே அமைவார்களாதலானும்
சிவனுக்கு அவிகொடுத்தல் கூற வேண்டா தாயிற்று. ஈந்த
-
எனவும், அவி உணவின் பாகம் எனவும் கூறிய குறிப்பும்.
சிவனுக்கு அளித்து
எஞ்சியதே இவர்களுக்கு அளிக்கப்
பெறுகின்றது.இவ்வாறு வேள்வியினிறுதியில் இவர்களுக்கு அவி
தரப்படுதலின் அதுவரை இவர்கள் காத்திருக்க
வேண்டியவர்களாதலால் இவர்களது ஊர்திகளுக்கும் அதுவரை
தங்குமிடம் வேண்டுவதாகும் என்பதும் இப்பாட்டின் குறிப்பாதலும்
கண்டுகொள்க. 4
|