1222.
|
ஓது
கிடையி னுடன்போவா, ரூரா னிரையி னுடன்புக்க
போது,மற்றங்கொருபுனிற்றா போற்று மவன்மேன்
மருப்போச்ச,
யாதுமொன்றுங் கூசாதே யெடுத்த
கோல்கொண்டவன்புடைப்ப,
மீது சென்று மிகும்பரிவால் வெகுண்டு, விலக்கி,
மெய்யுணர்ந்து, 17 |
1222.
(இ-ள்.) வெளிப்படை. வேதமோதும் மாணவர்
கூட்டத்தினுடன் போகின்றவர், ஊரவருடைய ஆனிரையினுடன்
போயினபோது, அவற்றுள் ஈன்றணியதொரு பசுத் தன்னை
மேய்ப்பவன்மேல் கொம்பினால் முட்டச்செல்ல, ஒரு சிறிதும்கூசாமல்
எடுத்த கோலினால் அவன் அதனைப் புடைக்க,அதுகண்டு,
மேற்சென்று, மிகும் அன்பினாலே சினந்து, அவன் செயலைவிளக்கி,
உண்மையினை உணர்ந்தாராய், 17
1222.
(வி-ரை.) ஓதுகிடை
- வேதமோதும் மாணவர்கூட்டம்.
1208 பார்க்க.
ஊர்
ஆன் நிரையின் - உடன்புக்க போது -வேதம்பயிலும்
மடங்களும் வேள்விச் சாலைகளும் ஊர்ப் புறத்தே உள்ளனவாதலின்
ஊரினின்றும் வேதம் பயில்வதற்காக உரிய நேரத்திற் புறப்பட்டுத்
தெருவழியேவேத மாணவர் கூட்டம் செல்வதாம். அந்நேரத்தில் ஊர்
ஆனிரையும் காலையில்,மனைகளில் பால் தந்தபின் மேய்வதற்கு
மண்ணியாற்றின் கரைப்புறவுக்குச் செல்வன ஆதலின் உடன்புக்க
போது என்றார்.
புனிற்று
ஆ - ஈன்றணிய பசுவாதலின் கன்றைப்பிரிய
மனமின்றி மேய்க்கக் கொண்டுபோகும் இடையன்மேல் மருப்பு
ஓச்சிற்றுப் போலும். போற்றும் அவன் -
மேய்க்கும் இடைமகன்.
மருப்பு ஓச்சுதல் - கொம்பினை அசைத்து
முட்டச் செல்லுதல்.
மருப்பு ஓச்சு என்றதற்கு கொம்பினால் முட்டி என்றுரைத்தனர்முன்
உரைகாரர். "கடிதோச்சி மெல்ல எறிக", "கைச்சிறியதொருமாறு
கொண்டோச்ச" (திருஞான - புரா - 73) என்றஇடங்களிற் போல
ஈண்டும், ஓச்ச - முட்டுதற்குச் செல்ல என்றல் பொருந்தும்.
கொம்பினை அசைத்து முயன்றதே யன்றி முட்டிப்பிழை
செய்யாதிருக்க இடைமகன் புடைத்தான் என்க.
யாதும்
ஒன்றும் கூசாதே 1224 - 1227 பாட்டுக்களிற்
கூறியபடிக்குள்ள பெருமைகளில் எதையும் ஒரு சிறிதும்உணராமலும்,
பசுவைக் கருணையின்றிக் கோல் கொண்டு புடைத்தலைப்பற்றி ஒரு
சிறிதும் அஞ்சாமலும், கூசுதல் - தகாதசெயல் செய்ய அஞ்சுதல்.
மெய்யுணர்ந்து
- உள்ளத்தினுள் எழுகின்ற வுணர்ச்சியினால்
உண்மையை அறிந்து. மேல்வரும் பாட்டில் எய்த உணர்ந்த
உள்ளத்தால் என்றது வேத ஆகம நூல் உணர்ச்சி குறித்தது.
மெய்யுணர்ந்து, (அதன் மேல்) மறைகள் மூலமாக உணர்ந்த
உள்ளத்தால் என்று கூட்டிக் கொள்க. 17
|