புனித
தீர்த்தங்கள் - புனிதம் - தூய்மை. தூய்மை
செய்யும் தீர்த்தங்கள். 1155 - ல் உரைத்தவை பார்க்க.
எல்லாம்
- கங்கை, யமுனை முதலிய ஏழு
பெருந்தீர்த்தங்களும், அவற்றையும் புனிதமாக்கும் மாமகதீர்த்தமும்,
இன்னும் இவை போல்வனவும் ஆகிய எல்லாமும். முற்றும்மை
தொக்கது.
என்றும்
- எல்லாக் காலங்களிலும்.
துங்க
அமரர் - பிரமன் - விட்டுணு - வருணன்
- அக்கினி முதலிய பெருந்தேவர்கள். கணங்கள்
-
சிவகணங்கள்.
சூழ்ந்து
பிரியாத அங்கம் அனைத்தும் - அமரர்
முதலினோர் ஆனினங்களின் ஒவ்வோர் அங்கத்தினும் பொருந்தி
அங்கு நின்றும் அகலாது வாழ்ந்துள்ளார்கள் என்பது.
நல்
- உயிர்களுக்கு நன்மை செய்கின்ற. அதற்காவே
பிறந்தவை ஆனினங்கள் என்பதாகும்.
பசுக்களின்
உறுப்புக்களில் தேவர்களும் முனிவர்களும்
தீர்த்தங்களும் இருத்தலாவது : பிரமனும்விட்டுணுவும்,
கொம்பினடியிலும், கோதாவிரி முதலிய தீர்த்தங்களும் சராசரமும்
கொம்பினுனியிலும் இருப்பர். சிவபெருமான் சிரசிலும் உமாதேவியார்
நடுநெற்றியிலும் முருகக்கடவுள் நாசி நுனியிலும் வீற்றிருப்பர்.
உண்ணாசியில் திக்குப் பாலகர்கள் - செவிகளில் அசுவினிதேவர்கள்
-கண்களில் சந்திர சூரியர்கள் - தந்தத்தில் வாயு - நாவில் வருணன்
- இருதயத்தில் சரஸ்வதி - கபோலத்தில்இயமனும் இயக்கர்களும்
- உதட்டில் காலை நண்பகல் மாலை என்னும் மூன்று
காலத்துக்குமுரிய அதிதெய்வங்கள் - கழுத்தில் இந்திரன் - முசுப்பில்
(இடை) அருக்கதேவர் - மார்பில் சாத்தியர்- நான்கு கால்களில்
அநிலவாயு - முழங்காலில் மருத்துக்கள் - குழம்பினுனியில்
நாகலோகத்தார் - குளம்பினடுவில் கந்தருவர் -மேற் குளம்பில்
தேவமாதர்கள் - முதுகில் உருத்திரர் - சந்துகளில் எண் வசுக்கள் -
அரைப்பரப்பில் பிதிர் தேவர்கள் -பகத்தில் எழுகன்னியர் - குதத்தில் திருமகள்
- அடிவாலில் தேவர்கள் வால் மயிரில் சூரியனொளி
என்றிவ்வாறு தேவர் முனிவர்அந்தந்த அங்கங்களிற் சூழ்ந்து
பிரியாதிருப்பர். கோசலத்தில் ஆகாய கங்கையும், கோமயத்தில்
யமுனையும் இருப்பர்.பூமிதேவி வயிற்றினும், பெருங்கடல்கள்
முலையினும், காருகபத்தியம் ஆகவனீயம் தக்கிணாக்கினி என்னும்
முத்தீயும்வயிறு - இதயம் - முகம் என்னும் மூவிடங்களினும்,
யாகத்தொழில் முழுவதும் எலும்பிலும் சுக்கிலத்திலும்
இருக்கும்.கற்புடையமாதர்கள் எல்லா அவயவங்களிலும்
வசிப்பார்;என்றிவ்வாறு கண்டு கொள்க. இவை
சிவதருமோத்திரத்தினுள் "வேதாவுங் கரியவனு மாவினது
கோட்டடியின் விளங்கி வாழ்வர்" என்பது முதலாகஆறு
பாட்டுக்களால் விரித்துக் கூறப்பட்டுள்ளன.
இப்பாட்டினால்
தூய உடம்புடைமைபற்றி ஆனினங்களின்
சிறப்புக் கூறப்பட்டது. 19