1225.
|
"ஆய
சிறப்பி னாற்பெற்ற வன்றே மன்று ணடம்புரியு
நாய னார்க்கு வளர்மதியு நதியு நகுவெண்
டலைத்தொடையு
மேய வேணித் திருமுடிமேல் விரும்பி யாடி
யருளுதற்குத் தூய
திருமஞ் சனமைந்து மளிக்கு முரிமைச் சுரபிகடாம்; 20 |
1225. (இ-ள்.)
வெளிப்படை. "ஆய சிறப்பினாலே ஈன்ற
அன்றைக்கே, திருவம்பலத்தில் நடம்புரிகின்ற நாயனாருக்கு,
வளர்பிறையும், கங்கையும், வெள்ளிய நகுதலை மாலையும்பொருந்திய
சடையுடைய திருமுடியின் மேல், அவர் விரும்பி ஆடியருளுதற்குத்
தூய திருமஞ்சனமாகிய ஆனைந்தினையும்அந்த உரிமையுடைய
பசுக்கள் கொடுப்பனவாகும்; 20
1225. (வி-ரை.)
ஆய சிறப்பு - இவ்வாறாகிய சிறப்பு.
தூயவுடம்புடைமையானாகிய சிறப்பு.
பெற்ற
அன்றே - கன்றினைப்பெற்ற - ஈன்ற - பொழுதே.
ஈன்ற அன்றே அளிப்பினும் திருமஞ்சனமைந்தும் ஆகமங்களில்
விதித்த கால எல்லையிற் கொள்ளத்தக்கன என்ப. அன்றேபடைப்புக்
காலத்திலே, பெற்ற - பெற்றன என்று கொண்டுரைத்தலுமாம்.
நாயனார்
- தலைவர் - சிவபெருமான் "மன்றினடமாடு,
நாயனாரென்றுரைப்போம் நாம்" (கோயினான்மணிமாலை - 13),
"அழகிது நாயனீரே" (774) முதலியவை பார்க்க. இப்பொருள்பற்றியே,
தமது தலைவர்களாந் தன்மை கொண்டு நம்மை ஆட்கொண்டருளும்
அடியார் பெருமக்களை "நாயனார் " என்ற வழக்கும் போந்தது.
நதி
- கங்கை. நகுவெண் தலைத் தொகை - சிரமாலை
என்பர். இவை ஊழிகளில் வீந்த பிரமபுட்டுணுக்களின் தலைகளைக்
கோவைபோல அணிந்தமாலை. "தலைமாலை தலைக்கணிந்து"
(திருஅங்கமாலை) "மூரல்வெண் சிரமாலை யுலாவித்தோன்றும்"
(தாண்டகம் - பூவணம்) என்ற தேவாரங்களும் பிறவும் காண்க.
ஆடி
அருளுதல் - திருமஞ்சனமாடுதல். திருமஞ்சனம்
ஐந்து - பசுவின் நெய் - பால் - தயிர் - கோமயம் - கோசலம்
என்பன. (916) பார்க்க. இவை ஆனைந்து எனப்படும்.
உரிமைச்
சுரபிகள் - அந்த உரிமையுடைய ஆனினம்,
இவ்வுரிமை ஆனினங்களுக்கே இறைவனாற்றரப்பட்டுள்ளது
என்பது குறிப்பு.
உரிமை
சுரபிகள் என்று பாடங்கொண்டும்,ஆய்சிறப்பினால்
சுரபிகள் உரிமை பெற்ற அன்றே
என்றுகூட்டி அந்தச் சிறப்பினால் சுரபிகள் உரிமை பெற்றன வன்றோ? என்று பொருள்
கொள்வாருமுண்டு. இப்பொருளில் ஏகாரம் வினாப்பொருளில்
வந்ததென்ப.
இப்பாட்டினால்
ஆனைந்தின் சிறப்பும் தூய
உடம்புடைமையும் பற்றிப் பசுவின் சிறப்புக் கூறப்பட்டது. 20
|