1228.
|
என்றின்
னனவேபலவுநினைந், "திதத்தின் வழியே
மேய்த்திந்தக்
கன்று பயிலா னிரைகாக்கு மிதன்மே லில்லை
கட;னிதுவே
மன்று ளாடுஞ் சேவடிகள் வழுத்து நெறியா வது
"மென்று
நின்ற வாயன் றனைநோக்கி "நிரைமேய்ப் பொழிக நீ"
யென்பார், 23 |
1228. (இ-ள்.)
வெளிப்படை. என்று இவ்வகையாகிய பல
எண்ணங்களையும் எண்ணிக், "கன்றுகளுடன் கூடிய ஆனிரைகளை
இன்பந்தரும் வழியே மேய்த்துக் காக்கின்ற இதனின் மேல்
செய்யத்தக்க கடமை வேறில்லை; இதுவே அம்பலக் கூத்தரது
திருவடிகளைப் போற்றும் நெறியுமாம்" என்று கொண்டு, எதிர் நின்ற
ஆயனை நோக்கி, "நீ இந் நிரைமேய்க்கும் தொழிலை ஒழிக" என்று
சொல்லி, 23
1228. (வி-ரை.)
என்று இன்னனவே பலவும் நினைந்து -
முன் 1224 முதல் 1227 வரை நான்கு திருப்பாட்டுக்களானும்
கூறியவற்றையும், அவை போல்வன பலவற்றையும் எண்ணி. இவை
விசாரசருமனார் மனத்தினுள் எண்ணமிட்டுச் சிந்தித்தவை.
‘இதத்தின்...........நெறியாவது'
என்று - இது, பலவும்
நினைந்தபின் விசாரசருமனார் மனத்துள்ளே துணிந்து கொண்ட
முடிபு.
இதத்தின்
வழியே மேய்த்துக் காத்தல் - 1230 - 1231ல்
விரித்து உரைக்கப்படுவது. இதுபற்றி ஆனாயர்
புராணத்துரைத்தவையும் பார்க்க.
கன்று
பயில் ஆன் நிரை - கன்றுகளுடன் கூடிய கறவைப்
பசுக்கள். "பாலும் பயனும் பெருகவரும். பசுக்கள்" (1230) என்றும்,
"அந்தணாள ராகுதிக்குக் கறக்கும் பசுக்கள்" (1247) என்றும்
கூறியவற்றால் ஓமதேனுக்களாகிய இப்பசுக்கள் முழுமையும்
மறையோர் வேள்விக்குரிய பஞ்சகவ்வியமும் பாலும் (நெய்யும்)
தரும் கறவைகள் என்பதறியப்படும்.
இதன்மேல்
இல்லை கடன்; இதுவே சேவடிகள்வழுத்து
நெறியாவதும் - மக்கள் செய்யவேண்டிய கடமைகள் பலவற்றுள்ளும் இதற்கு
மேம்பட்ட கடமை வேறில்லை; கடமையாதலோ டமையாது
இது சிவன் சேவடி போற்றுநெறியுமாவது. மக்களின் கடமைகள்
பலப்பலவாக நூல்களால் வகுக்கப்படினும் அவை பலவும் சிவன்
சேவடி வழுத்து நெறியாகாது இவ்வுலக சம்பந்தமாய்ப்போந்து உடல்
பற்றிக்கழிவன. இக்கடமை அவ்வாறன்றி, அவற்றுள்ளே தலைமையாய்
நிற்பதுடன், சிவன் சேவடி வழுத்து நெறியுமாகும் என்றதாம்.
இது
மன்றுளாடும் சேவடிகள் வழுத்து நெறியாகுமாறு
யாங்ஙனம்?எனில் சிவனைக் குறித்த வேள்விக்குரியபொருள்களைத்
தருதலால் பசுக்காத்தல், சிவவேள்விக்குரியசாதனம் தரும்
சிவபுண்ணியம்
ஆகும்; சிவன் ஆனைந்தும்திருநீறும்
மகிழ்ந்தாடுவனாதலால் இதுவென் ஆடுவதற்குரிய திருமஞ்சனம்
தருதற்கும், உயர்வாகிய திருநீறு பெறுதற்கும் துணை செய்த
சிவபுண்ணியமுமாகும் ஆதலின்.
பசுக்கூட்டத்தைச்
சிவன் விரும்புவார்; ஆதலின் அதனைக்
காப்போர்பால் மகிழ்வர்; எனவே சிவனை மகிழ்விக்கு நெறியிதுவே
என்னலுமாம். இதுவே - ஆவதும் - இதன்மேற்கடன்
வேறில்லை;
அன்றியும் இதுவே நெறியாவதும் என்க. வழுத்துநெறிகளுள்
அருச்சனையும்வேள்வியும் சிறந்தன -ஆதலின் இவற்றுக்குரிய சாதனம்
தரும் ஆனிரைகாத்தலேவழுத்து நெறியாவது என்றதுமாம்.
நின்ற
ஆயன் - விசாரசருமனார் வெகுண்டு விலக்கியபின்
(1222) தம் மனத்துள் எண்ணி, இவ்வாறு உணர்ந்து துணிவு பெறும்
வரை அங்கு நின்று கொண்டிருந்த ஆயன். ஆயன்
- ஆயத்தை
உடையவன். செலுத்துபவன். ஆயம் - கூட்டம்.
இங்குப்
பசுக்கூட்டம் குறித்தது. "ஆனே நெருங்கும் பேராயம்" (1229)
நீ நிரை மேய்ப்பு ஒழிக என்க. எழுவாயைப் பின்வைத்தது
வெகுட்சிக் குறிப்பு. "வெகுண்டு" (1222) என்றது காண்க.
என்பார்
- என்பார் ஆகி. முற்றெச்சம். என்பார் - என்றார்
(1229) என முடிக்க
நீ
நிரை மேய்ப்பு ஒழிக; யானே இனி இந் நிரை
மேய்ப்பன் - என்று தொடர்ந்து கூறியது, "நீ ஒழிக" என்றபோது,
"இனியாவர் அதைக் கைக்கொள்வர்?" என்றவினா எழுவ
தியல்பாகையால், அது எழாவகை தாமே கூறி முடித்தவாறு. 23
|