1230.
|
கோலுங்
கயிறுங் கொண்டுகுழைக் குடுமி யலையக் குலவுமான்
றோலு நூலுஞ் சிறுமார்பிற் றுவள வரைக்கோ
வணஞ்சுடரப்,
பாலும் பயனும் பெருகவரும் பசுக்கள் மேய்க்கும்
பான்மையினாற்
சாலும் புல்லி னவைவேண்டுந் தனையு மிசையுந் தலைச்சென்று,
25
|
1230. (இ-ள்.)
வெளிப்படை. பசு மேய்க்கும் கோலினையும்
கயிற்றினையும் கொண்டு, சிறுபுன் குடுமி அசைய, விளக்கமுடைய
மான்றோலும் அதனுடன் பூணூலும் சிறிய மார்பகத்தில் துவளத்,
திருவரையில் கோவணம் ஒளிவிள்கப் பாலும் கன்றுகளும்
பெருகும்படி வருகின்ற பசுக்களை மேய்க்குந் தன்மையில், மிகவும்
புல்லின் அவை வேண்டுமளவும் விரும்பி உண்ணும்படியும்
மேற்சென்று, 25
1230. (வி-ரை.) இப்பாட்டில் விசாரசருமனார்
நிரைகாக்க
வந்த திருக்கோலத்தை விரித்துக் காட்டுகின்றார். இதனாலும்
மேல்வரும் பாட்டாலும் அவர் பசு மேய்த்த திறத்தினையும் விரித்துக்
கூறுகின்றார்.
கோலும்
கயிறும் - இவை நிரைமேய்த்தலுக்கு உதவுவன.
ஆனிரை காப்போர் இந்த இரண்டும் கொண்டு போதல் காண்க.
கயிறு
- பசுக்களையும் கன்றுகளையும் வேண்டும்போது
பிணித்ததற்கும், கோல் அவற்றைச் செலுத்தற்கும் உதவுவன. முன்னர்
ஆ மேய்த்த ஆயனும் கோல் கொண்டு சென்றான்என்பது "எடுத்த
கோல்கொண் டவன்புடைப்ப" (1222) என்றதனால் அறியப்படும்.
"ஆயன்கோல் போடிற், பசுக்க டலைவனைப் பற்றி விடாவே" என்ற
திருமந்திரமும் கருதுக. விசாரசருமனார் கொண்ட இந்தக் கோலே
பின்னர் மழுவாயிட, அது கொண்டே தாதையினது தாள்களை
எறிந்தனர் என்பதும் இங்கு நினைவுகூர்தற்பாலது."முந்தை மருங்கு
கிடந்த கோல்" (1256) என்பது காண்க.
குழைக்குடுமி
- மான்றேல் - நூல் - கோவணம் -இவை
பிரமசரிய நிலையின் விளங்கும் அவரது மேனியிற் கொண்டவை.
குழைக்குடுமி-
பிரமசாரிகளுக்கு அடையாளமாகிய
சிறுபுன்குடுமி. பஞ்ச சிகை என்பர். குழைக்குடுமி அலைய
- சிறுபுன்குடுமி கீழ்த்தாழ்ந்து அசைந்தாட. நூல் விதிதவறிக்
குடுமியைக் குறுகக் கத்திரித்துப் பிரமசாரிகள் திரியும் கொடுமை
இக்காலத்துக் கோர நாகரீக விளைவுகளுள் ஒன்று.
மான்
தோலும் நூலும் சிறுமார்பில் துவள -
மான்றோலினைப் பூணூலில் முடிந்து கொண்டு தாங்குதல்
பிரமசரியத்துக்குரிய வழக்கு. பஞ்சசிகை - மானறோல்உபநயனம்
என்னும் நெற்றிக்கண் முதலிய அடையாளங்கள்பிரமம் என்னும்
சிவதத்துவ விளக்கங் குறிப்பன என்பது பற்றி முன்னுரைத்தவை
பார்க்க - (1219).
அரைக்கோவணம்
சுடர - அரையிற் கோவணம்பூண்பதுவும்
பிரமசரிய வழக்கு. அக்கோவணம் தூயதாய் வெள்ளியதாய்
விளங்குவதென்பார் சுடர என்றார். நூல்
மார்பிற் றுவள
என்றதற்கேற்பக் கோவணம் அரையிற் சுடர
என்றுகூட்டிக்
கொள்க. இதுபற்றித் "தஞ்ச மாமறைக் கோவணவாடையின் றசைவும்"
(509) என்றதும், பிறவும், பார்க்க.
பாலும்
பயனும் பெருகவரும் பசுக்கள் - பயன் -கன்றுகள்.
பசுக்காத்துப் பெறும் பயனிரண்டு : அவை பாலும்கன்றும் என்பன.
அவற்றுட் பால் - அன்றன்று பெற்றுக்கழியும்
தற்காலப்பயன்
என்றும், பயன் (கன்று) அவ்வாறன்றிநீடிச்செல்லும் பெரும்பயன்
என்றும் கொள்ளப்படும். ஆதலின், ஆனைந்திற்சிறந்த பாலினும்
கன்றினையே பயன் என்றார்.பாலின் பயன்
என்பாருமுண்டு.
பாலும்
பயனும் பெருக வருதலாவது - இந்த இரண்டும்
ஒன்றானொன்று குறையாது சமமாகப் பெருகநிற்றல் இக்காலத்துப்
பலர், பால்வேண்டிய பேராசையால் கன்றுக்குப் பால்விடாமற்
கறந்துகொண்டு கன்றினம் செழிக்கவிடாது பாழ்படுத்துப்
பயனின்றாக்குவர். "தோற்கன்று காட்டிக்
கறத்தல்" என்ற
கொடுங்காட்சியும் இந்நாளிற் காணவுள்ளது! மற்றும் சிலர் கன்றையே
நினைந்து பால் பெறாதொழிவர். இந்த இரண்டுமின்றிப் பாலும்
பயனும் என்ற இரண்டு பயன்களும்தக்கபடி பெருகுமாறு பசுக்
காத்தல்வேண்டும் என்ற குறிக்கோள் நாட்டப்பட்டது காண்க.
மேய்க்கும்
பான்மையினால் - மேய்க்கத்தக்க பரிசினைக்
கொண்டமையால் இதனைமேல் விரிக்கின்றார்.
சாலும்......தலைச்சென்று
- சாலும் - புல் - புல்லின்
குணநலமும் அளவின் மிகுதியும் குறித்தது. வேண்டும் தனையும்
- தனை - அசைவு. மிசையும் தலைச்சென்று -
மிசைதல் -
விரும்பி யுண்ணுதல். தலை - இடம். உண்ணும் இடங்களிற்
கூடப்போய்.
சென்று - மேய்த்தும்
பறித்தும் - அளித்தும் என்று
கூட்டுக. 25
|