1231.
|
பதவு
காலங் களின்மேய்த்தும் பறித்து மளித்தும்
பரிவகற்றி
யிதமுண் டுரையு ணற்றண்ணீ ரூட்டி யச்ச மெதிர்நீக்கி, யதர்நல் லனமுன் செலநீழ
லமர்வித், தமுத மதுரப்பால் உதவும் பொழுது பிழையாம லுடையோ ரில்லந்
தொறுமுய்த்தார். 26
|
1231.
(இ-ள்.) வெளிப்படை. புல் மிகவுள்ள காலங்களில்
ஆனிரைகளை மேய்த்துப் புல் உண்ணச் செய்தும், கையாற் பறித்துக்
கொடுத்துக் காப்பாற்றியும், அவற்றின் துன்பம் போக்கி, இதமாக நீர்
உண்ணத்தக்க நீர்த்துறையுள் நல்ல குளிர்ந்த நீரை உண்ணச்செய்து,
அச்சங்களை வாராமல்நீக்கி, நல்லனவாகிய வழிகளில் அவை
முன்னே செல்லும்படி விட்டு நிழலில்இளைப்பாறச் செய்து,
அமுதமாகிய சுவையுள்ள பாலினைத் தரும் நேரத்தில் அவற்றினை
உடையோராகிய மறையவர் களுடையமனைகள்தோறும்செலுத்தினார்.
26
1231.
(வி-ரை.) தலைச்சென்று - மேய்த்தும் பறித்தும்
- அளித்தும் - பரிவகற்றி - தண்ணீர் ஊட்டி - அச்சம் நீக்கி -
என்பன விசாரசருமனார் ஆனிரை மேய்த்துக்காத்த வகையை
விரிக்கின்றன.
மேய்த்தும்
- பறித்தும் - அளித்தும் - புல் மேய
இயலுங்காலத்தில் மேய்த்தும், இயலாதபோது பறித்தும், காத்தும்
என்க. மேய இயலாத காரணமாவன மழை பெய்தலும் பசுக்கள்
உடல் நிலையாலும் நிலத்தின் மேடுபள்ளம் சேறு முதலாகிய
இயல்பாலும் பலபுறமும் சென்று மேயக்கூடாமல் இருத்தலும்,
பயிரிட்ட நிலத்திற் புல் இருத்தலும் முதலியவை.
பரிவு
- பசித்துன்பம். "அழிவாம் பசி" (திருநா - புரா - 304).
இதம்
உண்துறையுள் நல் தண்ணீர் ஊட்டி - தண்ணீர்
குடிக்கும் துறை சேறுடனிருத்தல், இறங்குமிடத்தில் கரையின்றி
ஆழமாயிருத்தல், நாணல் முதலிய புதல் இருத்தல், கராம் முதலிய
இருத்தல் என இவைபோன்ற இடர்கள் இல்லாத துறை.
துறைகளைப்பற்றி முன் உரைத்தவை பார்க்க.
நல்
தண்ணீர் - அழுகற் பொருள்கள், வண்டல் முதலியன
இல்லாத தூயநீர் உண்ணும் துறையாயினும் நீர் நல்லதாய் இல்லாத
காலமுமுளது.
எதிர்
அச்சம் நீக்கி - என்க. அச்சம்
- புலிமுதலியவற்றால்
வருவனவும், பகையரசர் நிரைகவர்தல் முதலியவற்றால் வருவனவும்
ஆம்.
அதர்
- வழி. நல்லன (ஆகிய) அதர், என்க. வழிகள்
நல்லனவாதல் குழி, மேடு, கல், முள், முதலிய இடங்கள்
இல்லாமலும், தீயவிலங்குகள் தாங்காமலும், நேராகவும் உள்ளமை.
நீழல் அமர்வித்தல்
- இளைப்பாறி உணவு சீரணிக்கச் செய்து
கொள்ளும் பொருட்டு மேய்ந்தவுடன் நிழலில் பசுக்களை
அமர்வித்தல் முறை.
அமுத
மதுரப்பால் - நோய் நீக்கம் செய்தும், உடல்
வளர்ச்சிக்கு உதவியும், சுவையுள்ள உணவாக உதவுவது. மதுரம்
-
சருக்கரை முதலிய வேறொன்றின் சேர்க்கையாலன்றித் தானே
சுவையுள்ளது. இவை உலக நிலையின் அளவாற் குறிக்கப்படும்
தன்மை. இனி, அமுதம் - மரணத்தை நீக்குவது.
சிவவேள்விக்குரிய
பொருளாய் உதவுதலின் சாவா மூவாச் சிவபதப் பயன் தந்து
மக்களை நிலைபேறு பெறச் செய்வது என்பது உயர்ந்த உயிரின்
நிலையாற் குறிக்கப்படும் பொருள். இச்சரிதத்தில் நாயனார்க்கு
இந்தப் பால்தானே அமுதம் பெறச் செய்வதும்
காண்க. "அமுதம்
பெறு சண்டி" (தக்கேசி திருநின்றியூர் - 2) என்றது நம்பிகள்
தேவாரம்.
உதவும்
பொழுது - உதவ வேண்டிய காலத்தில்; அஃதாவது-
மாலைநேரம்; மாலை வேள்விக்குரிய காலம்.
உய்த்தல்
- உடையவர் இல்லந்தோறும் பசுக்களைக்கொண்டு
செலுத்துதல் ஆ மேய்ப்போர் கடமை.
மேய்த்துப்
பறித்தும் - இதமுண்டுறையு நற்றண்ணீர்
- என்பனவும் பாடங்கள். 26
|