1243.
|
இறையோ
னடிக்கீழ் மறையவனா ரெடுத்துத் திருமஞ்
சனமாட்டு
நிறைபூ சனைக்குக் குடங்கள்பால் நிரம்பச்சொரிந்து
நிரைக்குலங்கள்
குறைபா டின்றி மடிபெருகக் குவிந்த முலைப்பால்
குறைவின்றி
மறையோர் மனையின் முன்புதரும் வளங்கள்
பொலியவைகுமால். 38 |
(இ-ள்.)
வெளிப்படை. இறைவனாரது திருவடிகளில்
மறைச்சிறுவனார் எடுத்துத் திருமஞ்சனம் ஆட்டுகின்ற நிறைந்த
பூசைக்கு, அன்பு நிறைதலினால் குடங்களில் பால் சொரிந்தும்,
ஆனிரைகள், குறை வில்லாமல் மடிபெருக அதனாற் குவிந்த
முலைப்பாலின் அளவு குறைவின்றி மறையவர்களின் வீடுகளில்
முன்பு தருகின்ற வளங்கள் எல்லாம் விளங்கும்படியேபொருந்தியன.
(வி-ரை.)
இறையோன் - மறையவனார் - என்ற ஒருமை
பன்மை விகுதிகளைக் கருதுக. "ஒருவனுமே பலவாகி நின்றவா
தோணோக்க மாடாமோ" (திருவாசகம்) என்றபடி, ஒன்றாயும்
பலவாகியும் நிற்கும் இறைவனை ஒருமையிலும் கூறுதல்
அமையுமாகலான், அவ்வாறே இறையவன் என்று
ஒருமையிற்
கூறியருளிய ஆசிரியர், யாண்டும் மறந்தும் அரனடியார்களைப்
பன்மைச் சொல்லினாலன்றி ஒருமையிற் கூறாத
நியதியுடையாராதலின் மறைவனார் என்றார்.
"அவர்தம்
சென்னிமிசைப் பாதமலர் சூட்டினான், சிவபெருமான்" (திருநா
-புரா - 195) என்றதும், இவ்வாறு வருவன பிறவும் கண்டு
கொள்க.
திருமஞ்சனம்
ஆட்டும் நிறை பூசனை - கறவாமேபொழிந்த பாலினைக் கண்டு அது திருமஞ்சனமாகும்
என்ற குறிப்பு உணர்ந்து,
அதனையேபற்றிச் செய்த பூசையாதலின் திருமஞ்சன மாட்டும்
பூசனை என்றும், ஆயினும் ஏனைய உறுப்புக்கள்எல்லாம்
மேற்காட்டியபடி முற்ற நிகழ்ந்த தென்று குறிக்க நிறை
பூசனை
என்றும் கூறினார்.
நிரம்ப
குடங்கள் பால் சொரிந்தும் - என்க. முலை
தீண்டலும் கறவாமே பால் தாமே பொழிந்தனவாதலின் சொரிந்தன
என்றார். சொரிந்தும் - சொரிந்தனவாயினும்.
சொரிந்தும்குறைவின்றி
-முன்பு தரும் வளங்கள் - பொலிய என்க. உம்மை உயர்வு சிறப்பு.
அன்பாற் குடங்களிற் பால் சொரிந்ததனால் முன்பு தரும் பால் அளவு குறைதல் வேண்டுமே
என்று நினைக்க வருமாதலின், அவ்வாறன்றி,
முன்பு தரும் வளங்கள் குறைவின்றிப் பொலிய என்று எச்சரித்துக்
காட்டியபடியாம். "மடி பெருகிச் சொரிய முலைகள் சுரந்தன" (1235) என்றது காண்க.
இது, பசுக்கள்
கொண்ட - அளவின்றி எழுந்த -
மகிழ்ச்சி யினாலாகிய பெருமையினையும், நாயனாருக்குத்தாயாந்
தன்மை நிலையன்பின் பெருமையினையும், நாயகனாரது அருளின்
பெருமை யினையும், காட்டுவதாகும்.
குறைபாடின்றி
மடிபெருக - முலைப்பால் குறைவின்றி
என்றது குறைவில்லாது மடிகள் பெருகின; அதனாற் குறைவில்லாது
பாலும் தந்தன என்றதாம். குறைபாடின்றி என்றதனால் மடியின்
ஊற்றின் பெருக்கமும், முலைப்பால் குறைவின்றி
என்றதனால்
பால்சுரந்து தரும் வளத்தின் அளவும் குறிக்கப்பட்டன. மடி
பெருகியிருப்பினும் ஒருமுறை பால் தந்த பசுக்கள் மீளவுந் தருதல்
அமையாமையுமுண்டாதலின் மடிபெருகப்பால் குறைவின்றிஎன்று
கூறவேண்டியதாயிற்று.
குறைபாடு
என்பது அளவினையும், குறைவின்றி வளங்கள்
பொலிய என்றது குணத்தன்மையினையும் குறிப்பனவாகக்
கூறுவாருமுண்டு.
நிரம்ப
- நிரம்பியமையால். தாயாந்தன்மை நிலையாகியஅன்பு
நிரம்பியதனால் என்க. காரணப் பொருட்டால் வந்த வினையெச்சம்.
குடங்கள் நிரம்ப என்றலுமாம்.
வளங்கள்
- பால். பால் என்றது ஒரு வளமேயாயினும்
அதனால் தயிரும் நெய்யும் என்ற ஏனைய வளங்களும்
விளைவன ஆதலானும் நிரைக்குலங்கள் பல வாதலானும்
பன்மையிற் கூறினார். பொலிய - சிறக்க
- விளங்க.
குடங்கொள்பால்
- என்பதும் பாடம். 38
|