இவ்விரண்டு பாட்டுக்களும்
ஒரு முடிபு கொண்டன.
564. (வி-ரை.)
மேல்கொண்ட - ஊர்ந்த.
கண்டு - யானை
பூக்கூடையைப் பிடித்துப் பறித்துச்
சிந்தியதனைக்கண்டு.
களிறு - களிற்றை
- யானையை - இரண்டாம் வேற்றுமையுருபு
தொக்கது. களிற்றைக்கொண்டு அகலப்போக என்று கூட்டுக. களிறு
காற்றுப்போலப் பாகரைக்கொண்டகல என்று எழுவாய் வேற்றுமைப்
பொருள்படக்கொண்டு உரைப்பாருமுளர். அஃது பொருந்தாமையறிக.
கண்டக்கால்
- சண்டமாருதம் என்னும் ஊழிக்காற்றை.
யானை தன்னியல் பானே காற்றுப்போன்ற வேகத்தாற்போவது,
"கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்டு" என்பது
திருமுருகாற்றுப்பாடை. பாகர் அதனை மேலும் வேகமாகச்
செலுத்தினர். ஆதலின் மிகு வேகமுடைய சண்டக்கால்
என்றுவமித்துக் கடிது கொண்டகல என்று அதற்குக் காரணமும்
காட்டினார். தொழிலுவமம். தான் பிறர் வசப்பட்டமையாது
தன்னகப்பட்ட எல்லாப் பொருள்களையும் அலைத்தல்
ஊழிக்காற்றின் தன்மை. சில ஆண்டுகளின்முன் தென்னாறுகாடு,
கூடலூர், தஞ்சை சில்லாக்களில் அடித்த சிறு பெருங்காற்றினால்
உலகம் அலைப்புண்டு பெருங்கேடுற்றதனை எண்ணினால்
சண்டக்காலின் நிலை ஒருவாறு ஊகிக்கக் கிடக்கும். அத்தகையதனையும் அடக்கிக் கொண்டுபோவார்
போல என்க.
இங்கு யானை மதம் மிக்குக் கட்டுமீறித் தானே வேறொரு தெருவின்
முட்டியதாதலின் மேலும் இவ்வுவமானத்தின் பொருத்தம்
கண்டுகொள்க.
கடிது
கொண்டகல - யானை, மேலும் தீமை செய்யாதபடி
கொண்டுபோக என்பது. நிகழ்ந்த சிவ அபசாரத்தைப்
பொருட்படுத்தாது அலட்சியஞ்செய்தகன்றார் என்பதன்று.
புகழ்ச்சோழராகிய பேரன்பரது ஏவலாட்களானமையால்
சிவாபராதத்தினைக் கண்டும் புறக்கணித்தார்கள் என்று கூறுதல்
பொருந்தாது. மெய்ப்பொருள் நாயனாராது "கடையுடைக் காவலாளர்
கைதொழு தேற நின்றே, யுடையவர் தாமே வந்தார் உள்ளெழுந்
தருளு மென்ற"தும், "தனித்தடை நின்ற தத்தன் இடை தெரிந்தருள
வேண்டும்", "துயில்கொளு மிறைவன்" என்றதும் காண்க. இங்கு
இந்நிகழ்ச்சி யாவும் "திங்கட் கொழுந்தணி வேணிக் கூத்த
ரருளினாற் கூடி"யன எனப் பின்னர் அறிகின்றதற் கேற்பப் பாகர்
செயலின் உட்கோளையும் குறித்தல் வேண்டும் என்பது. பாகர்
கண்டு என்றதன் குறிப்புமது.
நூல்
கொண்ட மார்பிற் றொண்டர் - மறையவராகிய
அடியார். முன்னர்ப் "புண்ணிய முனிவனார்" (518) என்றதனை
விளக்கியபடி. நோக்கினர். பதைத்து - நோக்கிப்
பதைத்து.
முற்றெச்சம். பின்றொடர்ந் தோடிவந்து - பின்னிருந்தபடியே
தண்டின் தலைப்பில் தூங்கிய பூங்கூடையைப் பறித்துச்
சிந்தியதாதலின் அதனைப் பின்றிரும்பிப் பார்த்தறிந்தனராகிப்
பதைத்தனர் என்று குறிக்க நோக்கினர் பதைத்து என்றார்.
நோக்கினர் என்பதனை வினைமுற்றாகவே கொண்டு,
பார்த்தனர்;
பின்னர்ப் பதைத்து - அடிக்கவந்தார் என்றுரைத்தலுமாம்.
நோக்குதல் ஊன்றிக் கருதிப் பார்த்தல். இறைவனுக்குத் தாம்
செய்யும் நியதியான திருப்பணிக்கு முட்டு நேர்ந்ததே பதைப்புக்குக்
காரணமாம்.
அடிக்க
வந்தார் - பூக் கூடையைப் பறித்துச் சிந்தியபின்
வேகமாய்ச் செலுத்தப்பட்டு முன்னே போயினமையின் அதனை
நோக்கிவந்தார். யானை செய்த சிவாபராதமான குற்றத்திற்காக
அதனை ஒறுத்து முறைசெய்வார்போல அடிக்க முற்பட்டனர். தாம்
அதனை அணுகவும் இயலாது - அணுகினும் அடித்தல் இயலாது -
அடிப்பினும், மதம் நிறைந்த அது தம்மை எதிர்த்துத் தாக்கிய
தாயின் தம்மைக் காத்துக் கொள்ளுதலும் இயலாது - அடித்தல்
தானும் அதற்குத் தக்க தண்டனையுமாகாது - என்ற இவை ஒன்றும்
தோன்றாமல் அடிக்க வந்ததற்கு இவரது பதைத்தலும், பொங்குதலும்,
திருப்பணியில் வைத்த அன்பும் காரணமாம். சினம் உள்ளத்தைக்
கவர்ந்து எழுந்து ஓங்கிற்று.
அடிக்கவந்தார்
- அவ்வாறு வருதலே யன்றி அடித்தல்
நிகழவில்லை என்பது குறிப்பு.
தண்டு
கொண்டு - தண்டினாலே. தண்டு
- பூக்கூடை
தூக்கியதாய் இவர் மலர்க்கையிற் கொண்டு சென்ற தண்டு. "மலர்க்
கையிற் றண்டுங் கொண்டு" (560), "வன்றனித் தண்டில்" (563)
என்றவை காண்க.
யானை - ஒரு தெருவின்
முட்டி - சென்று - கூடை தன்னைப்
பிடித்துப் - பறித்துச் சிந்த, - பாகர் கண்டு. (அக்) களிறு கடிது
கொண்டு - போக, - தொண்டர் - நோக்கினர் - பொங்கி -
(அதனை) அடிக்கவந்தார் - என இவ்விரண்டு பாட்டுக்களையும்
தொடர்ந்து முடித்துக் கொள்க.
களிறு பூண்ட -
என்பதும் பாடம். 14