566.
|
"களியா
னையினீ ருரியாய்! சிவதா!
எளியார் வலியா மிறைவா! சிவதா!
அளியா ரடியா ரறிவே! சிவதா!
தெளிவா ரமுதே! சிவதா ! சிவதா! , 16 |
566. (இ-ள்.)
வெளிப்படை. "மதங்கொண்ட யானையை
உரித்து அத்தோலினைப் போர்த்தவரே! சிவதா!; எளியாரைக்
காக்கின்ற வலிமையுடையவரே! சிவதா!; அன்பு நிறைந்த
அடியார்களின் அறிவானவரே! சிவதா!; தெளிவார்க்கு அமுதமே!
சிவதா! சிவதா!; 16
566.
(வி-ரை.) களி - மதம் பொருந்திய.
ஈர் உரியாய் -
உரித்த தோலைப் போர்வையாக உடையவனே. ஈர் உரி -
உரித்த
தோல். யானையை உரித்தவராதலின் மதயானையால் நேர்ந்த
இவ்விடுக்கணைத் தீர்க்க உரிமையுடையவர். உரியாய் -
உரியவனே
என்ற குறிப்புமாம். ஈர் - ஈர்ந்த. உரியாய்
- உரிமையுடையாய்
என்பது குறிப்பு.
கயாசுரனைப்
பூர்வகாலத்தில் தோலைஉரித்துத் தேவர்களின்
இடர்போக்கியவர் சிவபெருமான் என்பது கந்தபுராண வரலாறு.
எளியார்
வலியாம் இறைவா - ஏழைபங்காளன் ஆதலின்
வலிமையற்ற எளிய எனக்கும் வலிமையளித்து இடரை நீக்குவிக்கும்
இறைமைத் தன்மையுடையவரே என்பதும் குறிப்பு. "எளியரை வலியர்
வாட்டின் வலியரை யிருநீர் வைப்பி, னளியறத் தெய்வம் வாட்டும்
எனுமுரை" என்ற காஞ்சிப் புராணம் - வயிரவக் கடவுள் துதி
காண்க. மாவலியுடைய மாவலியைச் செற்றவன் வாமனன். அவனை
வயிரவராக வந்து செகுத்து அவனது தோலை உரித்துச் சட்டையாகப்
போர்த்தும், தண்டத்தைக் கைக்கொண்டும் சட்டையப்பராயினர்
என்பது சரிதம். "வாமனனார் மாகாயத் துதிரங் கொண்டார்" என்ற
திருத்தாண்டகமுங் காண்க. அவ்வாறு மாபலங்கொண்டானையும்
செகுத்து உலகங்காத்தது போல், இங்குத் தன் பலத்தாலும்
மதத்தாலும் அரசனைச் சார்ந்த இறுமாப்பாலும் என்னை வலிந்த
யானையைத் தண்டித்து என்னைக் காக்கும் வலிமை உடையாய்
என்பது குறிப்பு.
அளியார்
அடியார் அறிவே - உன்பால் அன்பு நிறைந்த
அடியார்களின் அறிவு உனது நிறைவைப் பெற்றுளது. அதனால்
அந்த அறிவு நீயே யாகின்றாய். அறிந்தாயாதலின் அதனை
அகற்றுமாறு நான் வேண்டுதல் மிகை என்பனவாதி குறிப்புக்கள்
காண்க. அளி - வையமுந் துயர்தீர்க என்னும்
பரந்த கருணை.
"அளிபவ ருள்ளத் தானந்தக் கனியே" என்பது திருவிசைப்பா.
தெளிவார்
அமுதே - உன் இறைமைக் குணங்களைத்
தெளிவார்க்கு அமுதமானவனே. "தேறுவார்க் கமுதமான
செல்வனார்" - கண் - புரா - 162. அமுதம்
- துன்பம் போக்குவது.
தெளிவு ஆர் அமுது என்று கொண்டு எனது அறிவுமயங்கிய
இங்கு அதனைத் தெளிவித்து மருந்துபோல் உதவுபவனே
என்றலுமாம்.
நீடுரியாய்
- என்பதும் பாடம். 16
|