573.
|
கண்டவ
"ரிதுமுன் பண்ண லுரித்தவக் களிறே போலு;
மண்டரு மண்ணு ளோருந் தடுக்கினு மடர்த்துச்
சிந்தித்
துண்டித்துக் கொல்வே" னென்று சுடர்மழு வலத்தில்
வீசிக்
கொண்டெழுந்தார்த்துச் சென்று காலினாற் குலுங்கப்
பாய்ந்தார்.
23 |
(இ-ள்.)
வெளிப்படை. (கிட்டியவுடன் அவ்வியானையை
முற்றிலும்) கண்ட நாயனார், "இது முன்காலத்திற் சிவபெருமான்
உரித்த அந்த யானையினையே போன்றதாம்! தேவர்களும்
மண்ணவர்களும் தடுத்தாலும் பொருட்படுத்தாது மேற்சென்று
எதிர்த்துச் சிந்திவீழும்படி துண்டித்துக் கொன்றிடுவேன்" என்று,
ஒளி வீசும் மழுவை வலமாகத் திரித்து வீசிக்கொண்டு மேலெழுந்து
ஆர்ப்பரித்துச்சென்று காலினாற் குலுங்க யானைமீது பாய்ந்தார்.
(வி-ரை.)
இது முன்பு அண்ணல் உரித்த அக் களிறே
போலும்!. வழிப்பகை களிறேயன்றோ? (570) என்று முன்கொண்ட
கருத்தினையே தொடர்ந்து கூறியவாறு. முன்னர் யானையைக்
காணாது அதன் செயலைக் கேட்டபோது யானையே வழிப்பகை
என்ற நினைவு வந்தது. அதனை நேரிற் கண்டபோது அந்நினைவு
உறுதி பெற்றது என்க. பகைவனைக் காணான் - பகைமைச்செயல்
மட்டிற் கண்டானொருவன் இஃதோர் உற்ற முற்பகைவனால்
நேர்ந்தது என்று முதலில் எண்ணுவன். பின்னர்ப் பகைவனை
நேரிற் கண்டானாயின் அவ்வெண்ணத்தைத் திடப்படுத்துவன்.
இஃது உலக இயல்பு. முன்னர் வழிப்பகை களிறே என்றது
பகைமைச் செயலின் விளைவு கண்டபோது நிகழ்ந்த அனுமானத்தால்
உண்டாயின உணர்ச்சி. இங்கு அக்களிறே போலும் என்றது
காட்சியால் அவ்வனுமானத்தை உறுதிப்படுத்திய உணர்ச்சி. "களியா
னையினீ ருரியாய்!" என்று முதலிற் சிவகாமியார் ஓலமிட்டதும்
காண்க.
போலும்
- போன்றுள்ளது - ஆதலால் என்க.
அண்டரும்
- தேவர்கள் தவத்தால் மிக்க அறிவும்
ஆற்றலும், சிலகாற் சிவாபாரத முயல்வும் படைத்தவர்களாதலின்
அவர்கள் இதற்காகப் பரிந்து எதிர்த்துவரினும் என்பார் அண்டரும்
என்றார்.
மண்ணுளோரும்
- இவ்வியானை அரசரது பட்டத்து யானை
யாதலின் அரசன் சார்புகொண்ட மண்ணவர் எதிர்த்துவரினும்
என்பார் மண்ணுளோரும் என்று கூட்டினர். வழிப்பகை
என்ற
கருத்தினைத் தொடர்ந்து கூறியதாம்.
சிந்தி
- அதன் வலிமையைச் சிந்தி. அறுபட்டு வீழச்செய்து
என்றலுமாம்.
துண்டித்து
- சிவ அபசாரம் விளைத்தது துதிக்கை யாதலின்
அதனை உடலினின்றும் வேறுபடத் துணித்து. "தோய்தனித் தடக்கை
வீழத் துணித்தனர்." என வரும் பாட்டிற் கூறியது காண்க. குற்றஞ்
செய்த அங்கத்தினையே முற்படத் துண்டிக்க ஒருப்பட்டனர் என்க.
இந் நியதியினைச் சண்டீச நாயனார், அபசாரம் செய்த பிதாவின்,
காலைத்துணித்ததும், செருத்துணையார் அரசனது தேவியாரின்
மூக்கினைவார்ந்ததும், கழற்சிங்கர் அத்தேவியாரது கைதடிந்ததும்
முதலிய வரலாறுகளில் வைத்துக் காண்க.
மழு
வலத்தில் வீசிக்கொண்டு - போர்ப்படையை
வலமாகத்திரித்து வீசுதல் வேகத்தால் எறியும் பொருட்டாம்.
வலக்கையால் என்றும், பலங்கொண்டு என்றும் உரைப்பாருமுளர்.
காலினாற்
குலுங்கப் பாய்ந்தார் - மேலே வலத்தில்
வீசியதாற்பெற்ற பலத்துடனே, காலின் பாய்ச்சலாலும் உடலின்
குலுங்கலாலும் கூடிய தமது முழு உடற்பலமும் தமது செயலுக்குத்
துணையாகப் பெற்றுக்கொண்டனர் என்பது. யானை குலுங்க என்று
கூட்டி யுரைப்பாருமுண்டு. 23
|