576.
|
வெட்டுண்டு
பட்டு வீழ்ந்தா ரொழியமற் றுள்ளா ரோடி
மட்டவிழ் தொங்கன் மன்னன் வாயிற்கா வலரை
நோக்கிப்
"பட்டவர்த் தனமும் பட்டுப் பாகரும் பட்டா ரென்று
முட்டநீர் கடிது புக்கு முதல்வனுக் குரையு"
மென்றார். 26 |
(இ-ள்.)
வெளிப்படை. வெட்டியதாற் பட்டு வீழ்ந்த பாகர்கள்
ஒழிய வேறுள்ளவர் ஓடிப்போய், வாசனையுடைய மாலையை
அணிந்த அரசரது அரண் மனை வாயிற் காவலாளரை நோக்கிப்
"(சிலரால்) பட்டவர்த்தன யானையும் பட்டது. (சில) பாகரும் இறந்து
பட்டனர் என்று நீவிர் சேர விரைவிற் சென்று அரசருக்குச்
சொல்லுங்கள்" என்றார்கள்.
(வி-ரை.)
வெட்டுண்டு - வெட்டுண்டதனாலே.
பட்டு -
இறந்து. ஒழிய - மங்கலவிழாக் கொண்டு யானையுடன்
வந்தார்
பலராக, அவருள்ளே, மேலேகண்டவாறு பட்டவர் ஐவர் ஒழிய.
ஒழிய் - ஒழிந்தேபோக என்ற குறிப்புமாம். "ஒழிந்தவரொழிந்தே
மாண்டார்" (427) என்றது காண்க.
மற்றுள்ளார்
- மிகுந்த - எஞ்சிய - ஏனையோர். இவர்களும்
பாகர் கூட்டத்திற் சேர்ந்தவர்கள். வரும் பாட்டிற் "செப்பினார்
பாகர்" என்றது காண்க. அறிவிக்கும் பொறுப்பு வாய்ந்தவர்களாற்
கேட்டசெய்தியே அரசன்பா லறிவிப்பது முறையாம்.
மன்னர்
வாயிற் காவலர் - அரசரது அரண்மனை வாயில்
காப்போர். இதனால் அப்பாகர் அரண்மனை வாயிலையடைந்தமை
குறிப்பாலுணர்த்தப்பட்டது. விரைவு குறிக்க அதனை வெளிப்படக்
கூறாது எஞ்சவைத்துக் கூறிய நயமும் காண்க.
பட்டவர்த்தனமும்
பட்டுப் பாகரும் பட்டார் என்று -
இது அவர்களது ஆவலும், ஆத்திரமும், கவலையும் மிகுந்த
மனநிலை குறித்தது. இதுபற்றியே முட்ட என்றும்.
கடிது புக்கு
உரையும், என்றும் கூறுவதும் காண்க. ஓடி
என்றதும் குறிக்க.
முட்டப் புக்கு - அடுத்துப் போய். வரும்
பாட்டிற் "சிலராம்"
என்றதுகொண்டு இங்குச் சிலரால் என வருவித்துரைத்துக் கொள்க.
பாகரும் - பாகரிற் சிலரும். முதல்வன்
- தமது முதல்வன்.
அரசன்.
வேறுள்ளார்
- என்பதும் பாடம். 26
|