577.
|
மற்றவர்
மொழிந்த மாற்ற மணிக்கடைக் காப்போர்
கேளாக்
கொற்றவன் றன்பால் வந்து குரைகழல் பணிந்து
நின்று
"பற்றல ரிலாதாய்! ‘நின்பொற் பட்டமால் யானை
வீழச்
செற்றனர் சிலரா' மென்று செப்பினார் பாக"
ரென்றார். 27
|
(இ-ள்.)
வெளிப்படை. அவர்கள் சொன்ன மாற்றத்தை மணி
கட்டிய வாயிலைக் காப்போர் கேட்டு அரசரிடம் போய், அவரது
வீரக்கழலணிந்த அடியிற் பணிந்து நின்று, "பகைவரில்லாதவரே!
‘உம்முடைய பொற்பட்டமணிந்த பெரிய யானை வீழும்படி சிலர்
கொன்றார்களாம் எனப் பாகர் சொன்னார்கள்" என்றார்கள்.
(வி-ரை.)
மாற்றம் - மன நிலையின் மாறுதல் விளைத்தலின்
மாற்றம் என்ற பெயராற் கூறினார். மணிக்கடை
- ஆராய்ச்சிமணி
கட்டிய. அழகிய என்றலுமாம்.
குரைகழல்
- சத்திக்கும் வீரக்கழல். அது அதனை அணிந்த
அடிக்காயிற்று. இது அரசரது வெற்றிநிலை குறித்தது. மேற்பாட்டில்
"மட்டவிழ் தொங்கல்" என்றதும் இக்கருத்தே பற்றியது.
"பற்றலரிலாதாய்!" என்று அவர்கள் அரசரை
விளித்ததும் காண்க.
அரசரது வெற்றியினையும் வீரத்தினையும் எடுத்துக்கூறி "உமக்குப்
பகைவர் என்போர் இல்லை. ஆயினும் இது நிகழ்ந்தது சிலரது
செய்கை. உமது விரங்கொண்டு இதனை எளிதின் மாற்றத் தக்கது"
என்பது குறிப்பு. இது கேட்ட மன்னனும் அதனையே உட்கொண்டு
கிளர்மணித் தோளலங்கற் சுரும்பினங் கிளர்ந்து பொங்கச்
(578) செல்வதும் காண்க. பற்றலரிலா தாய் என்றதனால்
இது
பகைவர் செயலன்று என்பதும் குறிப்பாம். பற்றலர் -
பகைவர்.
கழல் பணிந்து நின்று - அரசர்பால் அறிவிக்கும் முறை.
பொற்பட்டம்
- பொன்னாலியன்றதாய் யானை நெற்றியி
னணியும் பட்டம். பட்டமால் யானை - அரசப்
பட்டத்திற்குரிய
அடையாளமாய்ப் பட்டவர்த்தனமாம் பண்பு பெற்ற (561) யானை
என்றலுமாம்.
செற்றனர்
சிலராம் - சிலர் செற்றனராம் என மாற்றுக.
எழுவாய் பயனிலைமாறியது அவர்களது மனநிலை குறித்தது.
மாற்றம் என்ற குறிப்பும் காண்க. "பட்டவர்த்தனமும் பட்டுப்
பாகரும் பட்டார்" என்ற அளவே பாகரால் அறிவிக்கப்பெற்ற
வாயில் காவலர், இதனை யாவரோ சிலர்தாம் செய்திருத்தல்
வேண்டும் என்று தாமே உட்கொண்டு, அவர் சொல்லாத
அதனையும் சேர்த்து இவ்வாறுரைத்தனர். இஃதுலகியல்பு. கேள்விச்
செய்தி உலகில் பரவும்போது பற்பலவாறு மாறுபாடுகளையடையும்
இயல்பு காண்க.
சிலர்
- பலரல்லவர் - சிலரே. இதனைத் துவிவசனம் என்பர்
வடநூலார். தமிழில் இது இருமை குறித்து வழங்குவது மரபு. "நல்லற
நூல்களிற் சொல்லறம் பல சில, இல்லறந் துறவறமெனச் சிறந்தனவே"
என்றது காண்க. பாகர் அறியாராயினும் இங்கு யானைபட்டது
சிவகாமியார் - எறிபத்தர் - என இருவரால் நிகழ்ந்தது என்ற
உண்மைக் குறிப்புச் சிலர் என்றதிற் றொனிப்பது
காண்க.
யானைபட்டபோது
அதனைக் காக்கும்செயலிற்பாகரும்
பட்டிருத்தல் வேண்டுமென ஊகித்துக் கொள்ளக்கிடக்குமாதலின்
வாயிற் காவலர் அதனைக் கூறினாரில்லை.
செப்பினார்
பாகர் - என்றது இச்செய்தி யாங்கண்டதன்று;
கேட்டது; ஆயினும் பொறுப்புள்ளார்பாற் கேட்டது என்பது குறிப்பு.
Reliable information -
என்பர் நவீனர்.
போற்றி நின்று
- என்பதும் பாடம். 27
|