587.
குழையணி காதி னானுக் கன்பராங் குணத்தின்
                       மிக்கார் ழுகொண்டு
பிழைபடி னன்றிக் கொல்லார்; பிழைத்ததுண்",
                               டெடன்றுட்
மழைமத யானைச் சேனை வரவினை மாற்றி, மற்றி
வுழைவயப் புரவி மேனின் றிழிந்தன னுலக
                               மன்னன்.   37

     (இ-ள்.) வெளிப்படை. "குழை யணிந்த காதினையுடைய
சிவபெருமானுக்கு அன்பராகிய குணத்தின் மிக்க இவர்,
பிழைபட்டிருந்தாலல்லது கொலைசெய்யமாட்டார்; ஆதலின் பிழை
நேர்ந்ததுண்டு." என்று மனத்தினுட் கொண்டு, மழைபோலமதஞ்
சொரியும் யானை, படை முதலிய சேனைகள் மேல்வராமற்றடுத்து,
தாம் மேல் கொண்டுவந்த கொற்றக்குதிரையினின்றும் உலகமன்னர்
(தனியிடத்து) இழிந்தனர்.

     (வி-ரை.) குழையணி காதினான் - சிவபெருமான். குழை -
சங்கக்குழை - "சங்கக் குழையார் செவியா" - தேவாரம்.
இறைவனது திருவுருவத்தில் ஆண்பாகம் வலப்பாகம்.
வலக்காதிலணிந்த குழை வலிய வீரம்பற்றிய மறக்கருணை குறிக்கும்.
அவனன்பராகிய இவரும் பிழைநீக்கும் மறக்கருணையாலே இது
செய்தாராதல் வேண்டும் என்பது குறிப்பு.

     குணத்தின் மிக்கார் - கொல்லார் - கருணைக் குணத்தின்
மிக்கவர். "குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி" - எனுந்
திருக்குறளை இங்கு நினைவுகூர்க. "கோதிலாத குணப்பெருங்
குன்றனார்" - (திருக்கூட்டச் சிறப்பு 7) காண்க. குணத்தால்
மிக்காராதலின் பிழை கண்டல்லாது கொல்லுதலைச் செய்யார் என்ற
நியதியை அரசர் இங்குத் தம்முள் நிச்சயித்துக் கொண்டனர்.
எவ்விடத்தும் கொலைதீது என்று வெறு முழக்கம் செய்து
ஆரவாரிக்கும் பொய்க்கொள்கை இங்கு மறுக்கப்பட்ட நேர்மை
நோக்குக. பிழைபடிற் குற்ற நீங்கத் தண்டித்தல் இறைவன்
மறைவழிக் காட்டிய நீதியாம். தக்கயாக சங்காரம், சூரசங்காரம்
முதலியவற்றினிகழ்ச்சிகள் காண்க. இதனை நன்கறிந்து நீதிசெலுத்திய
அரசாராதலின் இவ்வாறு துணிந்தனர். இவரது புராண சரிதத்தில்,
பின்னர் இவர் சேனை செய்த அபராதத்துக்குக் கழுவாயாகத் தாமே
தீப்புகுந்தமையும் இங்கு வைத்துக் காண்க. பிழைபடிற் கொல்லுதல்
பிறவுயிர்கள் ஈடேறவும், அவ்வுயிர், மேலேதருமன்றண்டனைக்குத்
தப்பவும் ஆம் என்பது.

     பிழைத்ததுண்டு - பிழை நேர்ந்ததுண்டாம். இது
கருதலளவையாற் போந்த முடிபு. அனுமானம் என்பர்.
நெருப்பில்லாத விடத்துப் புகையில்லை. ஓரிடத்துப் புகை
காணப்பட்டபோது தீ அங்குக் காணப்படாவிடினும், நெருப்புண்டு
எனக் கொள்ளுதல்போலஈண்டுக் காணப்படாத பிழையாகிய
காரணத்தைக் காணப்பபட்ட தண்டமாகிய காரியத்தினின்றும்
துணிந்தனர், பிழைபடினன்றிக் கொல்லார் என்ற ஏதுவினைக்
கொண்டு.

     படின் அன்றி - கொல்லார் - படிற் கொல்வார்
என்பதனை வலியுறுத்த இரண்டு எதிர்மறைகளாற் கூறினார்.
"ஞாயிறு படரி னல்லதைக் காண்டல் செல்லாக் கண்" என்ற
விடத்துப், "படரிற் காண்டல் செல்லும் கண்ணெனப்பாலதனை
எதிர்மறை முகத்தாற் கூறினார் இன்றியமையாமை விளக்குதற்கு"
என்று எமது மாதவச்சிவஞானசுவாமிகள் சிவஞானபோதப்பாயிரத்துட்
காட்டினமைகாண்க.

     உட்கொண்டு - அனுமானித்து - கருதலளவையாற் றுணிந்து.

     மழை மதயானை - வீரக் களிப்பினாற் படையின் யானைகள்
மழைபோல மத நீர் சொரிய நின்றன என்பது.

     சேனை வரவினை மாற்றி - மண்ணிடை இறுகால் -
ஊழிக்காற்று - மேன்மேல் வந்தெழுந்தது போல் (583) அழிவு
செய்யு முயற்சியின்மிக்கு வேகத்தால் வருதலால் அவை, உண்மை
அறியாமையாலே, மேல்வந் தடராதபடி சேனை வரவினை
மாற்றினார். தடுத்து நிறுத்தினார்.

     மற்றவ்வுழை - சேனைகளை நிறுத்திய இடத்தினின்றும்
வேறாகிய தனியிடத்து. வயவுழைப்புரவி என்று மாற்றிக் கூட்டி
வெற்றிக்கு இடமாகிய புரவி என்றுரைப்பாருமுளர். இப்பொருளில்,
மற்ற என்ற சொல்லுக்குப் பொருளின்மையானும், இழிந்தனன்
எனுஞ் சொற்குறிப்புடனும் பிற சொல்லாற்றலுடனும் மாறுபடலானும்,
புரவியினிடத்து வெற்றி நிற்றல் கூறுதல் முறையாகவும்,
வெற்றியினிடத்துப் புரவி என மாறு பொருள் படுதலானும்
அஃதுரையன்றென்க. உளை என்பது எதுகை நோக்கி உழை
எனத் திரிந்து நின்றதென்று கொண்டு, உளை - பிடரிமயிர்
என்பாருமுண்டு.

     மேல்நின்று இழிந்தனன் - இழிந்தனன் - கீழே
இறங்கினார். தான் மேற்கொண்டு வந்த அளவில் சீற்றமாகிய
தலைநிமிர்ந்த நிலையினின்றும், தணிந்து இறங்கிய நிலையினை
யடைந்தனர் என்பதும் குறிப்பு.

     உலக மன்னன் - "உலகில் யாருளர்" என்றது மேற்பாட்டு.
உலகத்தார்க்கு மன்னனாவதன்றித் தொண்டரிடத்துத் தாழ்ந்தவரே
என்பது குறிப்பு. கவிகை மன்னன் - புரவிமேற்கொண்டு போந்தான்
(583) என முன்னர்ப்புரவியை ஏறி வந்தபோதும் இக்குறிப்புப் பெற
உரைத்தமை காண்க.

     அளவில் சீற்றங் கொண்டெழுந்து வந்த மன்னனுக்கு,
இச்செயல் அன்பர் செய்தார் என்றறிந்தவுடனே அத்தனை சீற்றமும்
மாறிச் சிவாபராதத்தில் அச்சம் மிக்கது எஞ்ஞான்றும் பிறழாத
அவரது அன்புநெறியொழுக்கத் திண்மையினைக் காட்டுவது. 37