588.
|
"மைத்தடங்
குன்று போலு மதக்களிற் றெதிரே
யிந்த
மெய்த்தவர் சென்ற போது வேறொன்றும் புகுதா
விட்ட
வத்தவ முடையே னானே; னம்பலவாண ரன்ப
ரித்தனை முனியக், கெட்டே! னென்கொலோபிழை?"
யென்றஞ்சி, 38
|
588.
(இ-ள்.) வெளிப்படை. கரிய பெரிய குன்றுபோல
உருவுடையதும் மதமுடையதுமாயின யானையின் முன்னே இந்த
மொய்த்தவர் போயினபோது வேறு ஒன்றும் நிகழாமல் விட்டதாகிய
அந்தத் தவமுடையேனாயினேன்; அம் பலமுடையாரது அடியாராகும்
இவர் இத்தனை முனிவு கொள்ளும்படி என்ன பெரும்பிழை
நேர்ந்ததுவோ? ஓ கெட்டேன்!" என்று பயங் கொண்டவராய்,
588. (வி-ரை.)
மை தடம் - குன்று - போலும் - மதக் -
களிறு - இது யானை எறிந்து படுவதற்கு முன்னிருந்த நிலையை
அரசர் மனத்தில் எண்ணிச் சொல்லியபடி. துங்காமல் வரைபோல்
(562) - என முன்னர்க் கூறியது காண்க. இது யானை நின்ற
உயர்நிலை. மைத்தடம் - துங்கமால்
என்ற அடைமொழிகள் தந்து
குன்று எனவும் வரை எனவும் கூறினார். இதுபோல
பொன்றவ
முருவிக் குன்றம் (585) - என்ற அது வீழ்ந்துபட்ட
கீழ்நிலைகுறித்தபோது அடைமொழி கொடாதுவாளர் கூறியதுடன்
குறைவுநிலைக் குறிப்புப்பட அம் விகுதி தந்து குன்றம் என்றதும்
காண்க. யானை நின்றால் வரையும் குன்றும் போலும்; வீழ்ந்தாற்
குன்றம் போலும் என்பது.
மதக்களிறு
- பொழிமதஞ் சொரிய (562) என இதன்
முன்னைநிலை கூறினார்.
மெய்த்தவர்
- ஆனிலையுடையாரை வழிபடுந் தொழிலராகி,
இறையவர்க்குரிமை பூண்டார்க்குத் தொண்டு செய்வாராதலானும்,
பழமறை பரசும் தூயபரசுமுன் எடுக்கப் பெற்றாராதலானும் இவரைக்
கண்டபோதே இவரது தோற்றத்தானே இவர் மெய்த்தவர் என
அரசர் உணர்ந்தனர் என்க. வேடம் மெய்வேடமாதலின் அது
தாங்கியவர் மெய்த்தவர் என்று அரசர் கொண்டொழுகியவர்
என்பது. இவர் புராணமுங் காண்க. அன்று யிவரை முன்னரே
அறிந்தார் என்றலுமாம்.
வேறொன்றும்
- இடையூறு ஒன்றும். வேறு - நன்மைக்கு
மாறாகியது - வேறாகியது. அடியவர்க்கு வரும் அடாதனவற்றை
வாக்கினாற் சொல்லுதலும் கூடாதென்பது உயர்ந்தோர் மரபு. அரசர்
வேறு ஒன்று என்றார். முன்னரும் (481) இவ்வாறு கூறிய கவிமரபு
காண்க. 647 பார்க்க.
புகுதாவிட்ட
- புகுதாது போயின - நிகழாமல் விட்ட.
அத்தவம்
- தமது யானையினால் அன்பர்க்கு வேறு
விளையாதுவிட்டது தமது பெருந்தவமென்று கொண்டனர் அரசர்.
இவர் இக்கொள்கையினையே கடைப்பிடித்துக் கைக்கொண்டு
ஒழுகித் தம்வாணாள் செலுத்தியவர் என்பது, மாற்றானை வென்ற
இவரது சேனைகள் அவனகரினின்றுங் கொணர்ந்த தலைக்குவியலில்
ஒரு தலையிற் சடை தெரியப் பார்த்துப், பெருந்துயர் கூர்ந்து,
அதனைப் பொற்றட்டிலேந்திச் சிரத்திற்றாங்கித் தீப்பாய்ந்த இவரது
சரிதத்தினின்றும் புலனாம். இவரது புராணங் காண்க.
அம்பலவாணர்
அன்பர் இத்தனை முனிய -
அம்பலவாணர் - சிவபெருமான் - "மன்று ளென்று நிருத்தமே
புரியும்" - (585) என்றது காண்க. அன்பர் -
"அன்பராங் குணத்தின்
மிக்கார் பிழைபடி னன்றிக் கொல்லார்" என மேற்பாட்டிற்
கூறியதனைத் தொடர்ந்து கூறினார். அவ்வாறு அருட்குண
மிக்காரும். சிறப்பு உம்மை தொக்கது. இத்தனை
முனிய -
இவ்வளவும் கோபிக்கும்படி - உம்மை தொக்கது. தனை -
அளவு
என்பதனைக் குறிப்பதோர் உரிச்சொல் "இத்தனையும் எம்பரமோ"-
அப்பர் தேவாரம். "இத்தனையா மாற்றை" - நம்பிகள் தேவாரம்.
பட்டத்து - யானையையும் பாகர் ஐவரையும் கொல்லும் அந்த மிக்க
அளவும்.
என்கொலோ
பிழை? - அன்பர் செய்த பெருந்
தண்டனைக்குக் காரணமாயிருந்தது பெரும் பிழையாதல் வேண்டும்;
அதுதான் யாதோ? முன்னரும் இங்கும் அன்பர் என்றதனால்
-
ஈசனிடத் தன்புடையார் எவ்வுயிர்க்கு மன்புடையார்; ஆதலின் பிற
எவ்வுயிரையும் வாளா கொல்லார் என்றது குறிப்பு. மேற்பாட்டிலும்,
வரும் பாட்டிலும் இவ்வாறே அன்பர் என்றதுங்
காண்க.
கெட்டேன்!
- அவலத்தால் தம்மையே நொந்துகொள்ளும்
ஓர் இரக்கச்சொல். இத்தனை முனிய என்கொலோ பிழை என்று
தொடரும் பொருட் செலவினிடையே கெட்டேன் என்னும்
இந்த
அவலச் சொல் வந்தது இவரது துயர மிகுதியும், அன்பர்பால் வைத்த
பற்றுமிகுதியும் குறித்தது. "முடிக்கச் சிவந்தது போலுங் கெட்டேன்"
- சிதம்பர மும்மணிக்கோவை என்புழிப்போல. கெட்டேனால்
நேரிட்ட பிழை யாதோ என்று கூட்டி உரைப்பாருமுளர். இஃதுரை
யன்மையுணர்க. 593 பார்க்க. 38
|