593.
|
வெந்தழற் சுடர்வா ணீட்டும் வேந்தனை நோக்கிக்
"கெட்டே!
னந்தமில் புகழா னன்புக் களவின்மை கண்டே"
னென்று
தந்தவாள் வாங்க மாட்டார், தன்னைத்தான றுறக்கு
மென்று
சிந்தையா லுணர்வுற் றஞ்சி வாங்கினார் தீங்கு
தீர்ப்பார். 43 |
(இ-ள்.)
வெளிப்படை. வெவ்விய தழல்போல் ஒளிவீசும்
வாளினை உருவி நீட்டும் அரசரைப் பார்த்து "ஓ! கெட்டேன்!
எல்லையில்லாத புகழினையுடைய அரசரது அன்பினுக்கு ஓர்
எல்லையில்லாத் தன்மையை யிப்போது கண்டு கொண்டேன்" என்று
கருதியவராகி, அவர் நீட்டிய வாளினை வாங்கமாட்டாதவராயிருந்தும்,
தாம் வாங்காவிடில் அரசர் தம்மைத்தாமே மாய்த்துக் கொள்வர்
என்று உணர்ந்தவராகிப் பயந்து, அத்தீங்கு வராமற் காக்குங்
கருத்தினால் கையில் வாங்கினார்.
(வி-ரை.)
வெந்தழல் - (வாளின்) செயலையும், சுடர்
உருவினையும் குறித்தன. கெட்டேன் -
இரக்கக் குறிப்புப்பட
வருவதோர் அவலச் சொல். 588 பார்க்க.
அந்தமில்
புகழான் - அந்தம் - முடிவு. இவரது புகழுக்கு
ஓர் முடிபு - எல்லை - இல்லைஎன்றபடி. புகழ்ச்சோழர் என்பது
இவர்க்குக் காரணப் பெயராம் என எண்ணினார் என்றதும் குறிப்பு.
அன்புக்கு
அளவின்மை - புகழுக்கு அந்தம் - அளவு -
இல்லாமை போலவே அன்புக்கும் அளவில்லாமை. உம்மை
தொக்கது.
என்று
- என்று - உட்கொண்டவராய் - கருதியவராய்.
தந்த
வாள் - அவர் நீட்டிய. தம்பொருட்டாகவே
நீட்டியமையால் தந்த என்றார். அரசர் என்ற
நிலையிலே தம்மை
வைத்துக் குற்றத் தீர்வு தாமே விதித்தாராதலின் கொடுத்தனர்
எனமேற்பாட்டிற் கூறினார். அன்பரிடத்துத் தம்மைப் போலவே
அன்பு கொண்டார் அரசர் என்று எறிபத்தர் இங்கு
எண்ணியதனையும், தொழுந்தகை யன்பின்மிக்கீர் -(598)
என
இறைவர் இவ்விருவரும் அன்பினால் ஒப்பாகுந் தன்மை
விளக்கியதனையும் காண்க.
வாங்கமாட்டார்
- இது அவர் மனத்து முதலில் நிகழ்ந்த
உள்ள நிகழ்ச்சி. பேரன்புடையவராய்க் கண்ட அரசரது
பிழையுடன்பாட்டுக்குத் தாம் உடன் படமாட்டாதவராகி வாளினை
வாங்காது சிறிது தாழ்த்தனர். மாட்டார்
மாட்டராகியும் உம்மை
தொக்கது. மாட்டாராயும் - வாங்கினார் என்று முடிக்க.
தன்னைத்தான்
துறக்கும் - நாம் வாங்காவிடில் அரசர்
தாம் கொண்டபடி தமது பிழைப்புக்குத்தாமே தீர்வு செய்வாராய்,
‘அடியார்பால் பிழைபட்ட இவ்வுடலை நானே சிதைப்பேன்' என்று
தம்மைத் தாமே மாய்த்துக் கொள்ளும். துறக்கும் -
விட்டுவிடும்.
தன்னை - தன் உடலை. ஆயின் இது மிக அரியதாகிய
செயல்.
கிடைத்தற்கரியது இந்த மானிட உடலிற் பிறப்பு. "எண்ணரிய
பிறவிதனில் மானிடப் பிறவி அரிது" என்பது பெரியோர் வாக்கு.
இதனினும் பெரியதோர் பேறு பெறுவதற்காக வன்றி இதனைத்
துறவார் அறிஞர். "உடம்பா ரழியி லுயிரா ரழிவர், திடம்பட
மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டா, ருடம்பை வளர்க்கு முபாய
மறிந்தே, உடம்பை வளர்த்தே னுயிர் வளர்த்தேனே" "உடம்புளே
யுத்தமன் கோயில் கொண்டானென்,னுடம்பினை யானிருந்
தோம்புகின்றேன்" என்பனவாதி திருமூலர் திருமந்திரங்களுங்
காண்க.
இறைவனைக் "காணப்
பெற்றால், மனித்தப் பிறவியும்
வேண்டுவதேயிந்த மாநிலத்தே" என்றருளினர் அப்பர் சுவாமிகள்.
இறைவன்றாள் தொழ உடம்பின் பிறவி உறுதியைச் சாரும் என்பது
ஆசிரியர் திருவாக்கு. எவ்வகைப் பாதகமுஞ் செய்தேனும்
உடம்பினை ஓம்பி வளர்க்கும் ஊமர்கள் பலர். அவர் நிற்க; இங்கு
உறுதிப் பயன் கைவரப்பெற்ற அரசர் அரிய மானிடப் பிறவி பெற்ற
உடம்பினைத் "துறக்கப்படாத உடலை"த் துறத்தல் தகுமா? அவ்வாறு
துறக்கும் என்று நாயனார் துணிதற்குக் காரணமென்னை? யெனின்,
சிவாபராதத்துக்குத் துணையாய் நின்ற பாதகமுற்ற உடல் சிதைக்கத்
தக்கதே யாம் என்ற விதிபற்றி என்க. தக்கயாக சங்கார முதலிய
வீரங்கள் காண்க. அறிஞர்கள் கண்டு நகைத்தற்குரிய சிறுசிறு
காரணங்களுக்காக இந்நாளில் இந்நாட்டினும் பிற நாட்டினும் பலர்
தம்முடல் தாமே மாய்க்கக் காண்கின்றோம். அங்ஙனமே பிறர்
உடலையும் மாய்க்கக் காண்கின்றோம். இங்ஙனம் உண்மை நெறி
அறியாது உழல்கின்ற இக்காலஉலகம் இங்கு அரசர் தம்மைக்
கொல்லவேண்டினதும், பின்னர் நாயனார் தம்முயிரைச் செகுக்க
வாளினைக் கழுதிற் பூட்டியதும் ஆகிய செயற்கருஞ் செயல்களின்
திறத்தை அறிந்து உய்ய வலிமை பெறுவதாக. பின்னர் இவ்வரசர்
தீப்பாய்ந்து தம்முடல் விடுத்த சரிதமும் இக்கருத்தே பற்றியது.
இவ்வாறே இப்புராணத்தினுள் வரும் பிற சரிதங்களும் காண்க.
என்று
உணர்வுற்று அஞ்சி - எனச் கூட்டுக. என்று
அறிந்தமையால் அவர் தம்மை மாய்த்துக்கொள்ளும் செயலை
அஞ்சி. சிந்தையால் வாங்கி - அவர் அங்ஙனஞ்
செய்யாது
காக்குங் கருத்தால் வாங்கி. சிந்தையால் என்பது
நாயனார்
வாங்குவதற்குக் காரணங் குறித்து நின்றது. தீங்கு -
அச்செயலாகிய
தீங்கு.
தீர்ப்பார்
- வாராமற் றடுப்பாராகி. தீர்ப்பாராகி -
தவிர்ப்பாராகி - வாங்கினார் என்க. முற்றெச்சம். தீர்வு நேர்வார்
கொடுத்தனர் என மேற்பாட்டிற் கேற்பத் தீங்கு தீர்ப்பார் வாங்கினர்
என்று குறித்தது காண்க. இதுவே - இச் செயலே - அரசர் மனத்தில்
தீர்வு தருவார் வாங்கினார் என்ற எண்ணத்தை விளைத்தனையும்
வரும்பாட்டிற் காண்க.
தீர்வு
தீர்ப்பார் - என்றதும் பாடம். 43
|