595.
|
வன்பெருங்
களிறு பாகர் மடியவு முடைவா ளைத்தந்
தென்பெரும் பிழையி னாலே யென்னையுங் கொல்லு
மென்னு
மன்பனார் தம்மைத் தீங்கு நினைந்தன" னென்று
கொண்டு,
"முன்பென துயிர்செ குத்து முடிப்பதே முடி" வென்
றெண்ணி, 45 |
595.
(இ-ள்.) வெளிப்படை. "வலிய பெரிய யானையும்
பாகரும் மடியவும், தமது உடைவாளைத் தந்து எனது பெரும்
பிழையினாலே என்னையுங் கொல்லும் என்று சொல்கின்ற
பேரன்பருக்குத் தீங்கு நினைத்தனன்" என்று கருதி, "முன்னர் எனது
உயிரைப் போக்கி முடிப்பதுவே இதற்கு முடிபாகும்" என்று எண்ணி,
45
அதனுக்கு
- அந்த எண்ணத்தை அவர் முடிபாகக்
கொள்ளுமாறு தமது செயல் (வாள் வாங்கிய செயல்) விளைவித்த
அதற்கு. அடியார் உள்ளத்துத் தவறாகிய எண்ணம் விளைவிக்கும்
செயல் செய்தல் சிவாபராதமாம் என்று அதற்கு அஞ்சினார் என்க.
ஈங்கெனை........இவர்பால்
- இச்சொற்கள்
சிவாபராதத்தினின்றும் தாம் கழுவாய் பெற்று மய்யும் நெறி பெற்ற
நிலையினை எதிர்பர்த்த அளவில் அரசர்க்குள்ள ஆர்வத்தைக்
காட்டுவனவாம். தமக்குக் குற்றத் தீர்வு புரிந்து தம்மைப் புனிதராகச்
செய்வதனைப் பேருதவி என்றதும் காண்க. தாம் தாம் செய்த குற்றத்
தீர்வுக் குபகரிக்கும் அரசாங்க நீதியதிபர்களை எத்தனை பேர்
வெறுத்து வைதெழுகின்றார்கள்! அவ்வாறன்றித் தம் குற்றத்தைப்
போக்குபவரைப் போற்றிப் பாராட்டல் பெரியோர் செயல்.
உதவி செய்யப்
பெற்றனன் - விரைவும் உறுதியும் பற்றி
எதிர்காலச் செயலை இறந்த காலத்தாற் கூறினார்.
உரைப்பக்
கண்ட - என்பதும் பாடம். 44
595. (வி-ரை.)
வன் - பெரும் - களிறு - வலிமையும்
பெருமையுமுடைய யானை. துங்க மால் வரைபோல் - 562,
வென்றி மால்யானை - 563, என்பனவாதி முன்னர் உரைத்தவை
காண்க. திருத்தொண்டின் பெருமையை உலகிற் காட்டுதற்கென்று
திருவருளாலே யானை மலரைச் சிந்தியதேயன்றி (598) அதனது
தீக்குணத்தாலன்று ஆதலின் திருவருள் விளக்கத்துக்குக் கருவியா
யிருந்த இதனை இவ்வாறு சிறப்புக் குறிக்கும் அடைமொழிகள்
தந்தோதினார். களிறு பாகர் - உம்மைத்
தொகை.
பெரும்பிழை
- பெரியோரும் பொறுத்தற்கரியதாய், உயிர்
போக்குதலாகிய பெருந் தண்டத்தைத் தவிர வேறு எவ்வாற்றானும்
கழுவாய் பெறாததாய் உள்ளதென்று அரசர் கொண்டனர் எனுங்
குறிப்பு.
அன்பனார்
- முதலில் அவரை அரசராக மட்டும் கருதிச்
சென்னி! - (590) என்றார். பின்னர்ச் சிவாபராதத் தீர்வின் பொருட்டு
உயிரையும் உவந்தீயும் பெரும்புகழ் நோக்கி அந்தமில்
புகழான் -
(592) என்றார். உயிர் கொடுத்தும் அபராதத் தீர்வில் அவர்க்கிருந்த
ஆர்வப் பெருக்கினைக் கண்டு இங்கு அன்பனார் என்ற சிறப்புக்
காண்க.
அன்பனார்
தம்மைத் தீங்கு நினைந்தனன் - எறிபத்தர்
எவ்வாற்றானும் அவர்க்குத் தீங்கு நினைத்தாரல்லர். ஆனால் தீங்கு
தீர்ப்பாராகியே (593) வாளை வாங்கினாராகவும், தீங்கு நினைத்தனன்
என்ற தென்னை? யெனின் அவரை வாளினாற்கொன்று பிழை தீர்க்க
வாங்கினார் என்னும் தீங்காகிய எண்ணத்தை அவர் மனத்தில்
உண்டாகும்படி செய்தனர் என்றதனையே இவ்வாறு கூறினார்.
நினைந்தனன் - அவர் நினையும்படி செய்தனன் என்ற பொருளில்
வந்தது. இவ்வாறன்றி, யானையையும் பாகரையும் வீழ்த்திய அவர் -
அரசர் வரின் அவரையும் கொல்வேன் என்று எண்ணி யிருந்தனர்
என்று கொண்டுரைப்பாருமுண்டு. தம்மை - தமக்கு.
கொண்டு
- உட்கொண்டு - நிச்சயித்து - கருதி.
முன்பு
- அவர் முன்பு, அவர் வேண்யடிபடி தாம்
செய்யாவிடின் அவர் எவ்வாற்றானும் தம்மைத் தாமே துறந்து
அபராதத் தீர்வாகக் கருதியதனைத் தாமே தேடிக்கொள்வர்;
அதற்கு முன்பு - அம்முடிபினைக் காண்பதற்கு முன்பு - அவர்
முடியு முன்பு என்றலுமாம்.
உயிர்
செகுத்து முடிப்பதே முடிவு - உயிரைப்போக்கி
இத்தீங்கு சேராமல் முடிப்பதுவே இதற்கு முடிபாவது என்றபடி.
முடிவு - அன்பனார்பால் தீங்கு இயற்றுவேன் என்ற நினைவுவரச்
செய்த தீமையைப் போக்கும் கழுவாய்.
தமக்குத்
தீங்கு - என்பதும் பாடம், 45
|