598.
|
"தொழுந்தகை
யன்பின் மிக்கீர்! தொண்டினை
மண்மேற் காட்டச்
செழுந்திரு மலரை யின்று சினக்கரி சிந்தத்
திங்கட்
கொழுந்தணி வேணிக் கூத்த ரருளினாற்
கூடிற்"றென்றங்
கெழுந்தது பாக ரோடு மியானையு மெழுந்த
தன்றே.
48 |
598. (இ-ள்.)
வெளிப்படை. "யாவரும் தொழும்
தகைமையுடைய அன்பினாலே மிக்கீர்களே! திருத்தொண்டி
னீர்மையை மண்ணுலகிலே காட்டும் பொருட்டாகச் செழுந்
திருப்பள்ளித்தாமத்தை இன்று கோபங் கொண்ட யானை சிந்தும்படி
நேர்ந்த நிகழ்ச்சி, பிறையை யணிந்த சடையினையுடைய கூத்தனாரது
திருவருளினாலே கூடிற்று" என்று எழுந்தது. (இறந்த) பாகர்களோடும்
(இறந்த) யானையும் அப்போதே எழுந்தது. 48
இவ்விரண்டு பாட்டுக்களும்
ஒரு முடிபு கொண்டன. தனி
முடிபாக்கி முன் பாட்டினை எழுந்தது என வினைமுற்றாக்கி
முடித்து, எவ்வாறெழுந்ததெனின் என வருவித்து, இவ்வாறு என
இப்பாட்டினைத் தனி முடிபாக்கி உரைப்பாருமுண்டு.
598. (வி-ரை.)
தொழும் - தகை - அன்பு - யாவராலும்
தொழுது பாராட்டத்தக்க தகுதியுடைய அன்பு. எம்மையே
எஞ்ஞான்றும் தொழுந் தகுதியுடைய அன்பு என்றலுமாம்.
மிக்கீர்
- இவ்விரு நாயன்மாரையும் குறித்தது - மிக்கார்
என்று பாடங்கொண்டு சிவகாமியாண்டாரையு முன்னிட்டுக்
கூறியதாக உரைப்பாருமுண்டு.
தொண்டினை
- உங்களிருவருடைய தொண்டின்
உறைப்பினை. பொதுப்படத் திருத்தொண்டின் பெருமையினை
என்றலுமாம்.
செழும்
திரு - "சடைமேல் ஏறும் மலர்" (567) என்றபடி
இறைவனுக்கானமையோடு திருத்தொண்டினை விளக்கக் காரணமு
மாயினமையின் அச்சிறப்புக்கள் குறிக்க செழும் - திரு -
என்றிரண்டு அடைமொழி தந்து கூறினார்.
கரி
- யானை. கரத்தையுடையது. சிந்தியது கரமாதலின்
இப்பெயராற் குறித்தார்.
சிந்தக்
- கூடிற்று என்று கூட்டி முடிக்க. சிந்துதலாகிய
செயல் நிகழ்ச்சி கூடிற்று என்றபடியாம். "ஏறும் மலரைக் கரிசிந்
துவதே?" - (567) உனது திருவருள் வசத்தா லாவதன்றி உன்
முடிக்கணியாகு மலரைக் கேவலம் ஒரு யானை சிந்தவல்லதா?
என்ற குறிப்புடன் சிவகாமியாண்டார் வினாவியதற்கு விடையாக
இறைவன் நமது அருளினாலே சிந்தக்கூடிற்று என்றுரைப்பார்
போன்று திருவாக்கு எழுந்தது காண்க.
திங்கட்கொழுந்து
- மூன்றாம் பிறை. மறைந்த மதி அன்று
முளைக்கத் தொடங்குதலின் கொழுந்து என்றார்.
இங்குத்
தொண்டர்க்கும் முன்னர் மறைந்து இடுக்கண் பட்ட மதி இதனால்
முளைத்தலும் இக்குறிப்பாலுணர்த்தியது காண்க.
எழுந்தது
- மேற்பாட்டில் வாக்கு என்ற எழுவாய் தழுவியது.
எழுந்தது - எழுந்தது - வாக்கு எழுதலும், பாகரோடு யானை
எழுதலுமாகிய இரண்டு செயல்களும் ஒன்றுபட்டு ஒரே காலத்தில்
இடையீடு காணமுடியாத வண்ணம் நிகழ்ந்தமை குறிக்க இவ்வாறு
பிரிவுறாமல் தொடர்ந்து ஒரே அடியில் ஒருவகைச் சொல்லாற்
கூறினார்.
பாகரோடு
யானையும் - பாகர் மின்னர் மடிந்தனர். யாது
இறுதியில் ஒடுங்கிற்றோ மீள உளதாம் போது அது முதலிற்
தோற்றும் என்பது சிருட்டி முறை. அதுபற்றி இவர்கள்
மீளவுண்டாங்கால் முன்னர் எழுதல் முறையாமாதலின் இவர்களை
முதலில் வைத்துக் கூறினார். பாகரும் யானையும் ஒரே நிகழ்ச்சி
காரணமாகப் பட்டார்களாதலின் உடனிகழ்ச்சிப் பொருளில்
மூன்றனுருபாகிய ஓடு உருபுதந் தோதினதும் காண்க. யானையும்
- உம்மை எச்சப்பொருளில் வந்தது.
அன்றே
- அக்கணமே. அசையென் றொதுக்குவாருமுண்டு.
48
|