601.
|
மட்டவி
ழலங்கல் வென்றி மன்னவர் பெருமான்
முன்ன
ருட்டரு களிப்பி னோடு முறங்கிமீ தெழுந்த தொத்து
முட்டவெங் கடங்கள் பாய்ந்து முகிலெனமுழங்கிப்
பொங்கும்
பட்டவர்த் தனத்தைக் கொண்டு பாகரு மணைய
வந்தார். 51 |
(இ-ள்.)
வெளிப்படை. வாசனை வீசும் (ஆத்தி)
மாலையணிந்த வெற்றியுடைய மன்னர் பெருமானின் முன்பு, தூங்கி
மீண்டு விழித்து எழுந்ததுபோல் நிறைவாகி வெவ்விய மத நீர்கள்
பாய முகில்போலமுழக்கஞ் செய்து ஆரவாரத்துடன் கிளம்பும்
பட்டவர்த்தன யானையைச் செலுத்திக் கொண்டு உண்ணிறைந்த
மகிழ்ச்சியினோடும் அந்தப் பாகர்களும் அங்கு அணைய
வந்தார்கள்.
(வி-ரை.) மட்டவிழ் அலங்கல் வென்றி -
இவ்வாறு
திருவருள் விளக்கம் பெற்ற பின்னர் அரசரது அடையாள
மாலைஇப்போது புதியதொரு மணம். வீசப்பெற்றதோடு
புதியதொரு
வெற்றியும் பொருந்துவதாயிற்று என்பது குறிப்பு. கிளர்மணித் தோள்
அலங்கற் சுரும்பினங் கிளர்ந்து பொங்க (578), என்றும், விரைசெய்
தார் மாலையோய் (586) என்றும் குறித்த இடங்களினும் அடையாள
மாலையினையே கூறினாரேனும் அந்நிலைகள் வேறு; இங்குக்
குறித்த நிலைவேறு; இப்போதே அது புது மணமும் உண்மை
வென்றி நிலையும்பெற்ற தென்பார் இவ்வடை மொழிகள்
தந்தோதினார். இக்கருத்துப் பற்றியே முன்னர் மன்னன் (583) உலக
மன்னன் (587) மனனவன் (590) தடந்தோள் மன்னன் (591) வேந்தன்
(593) என்று கூறிய ஆசிரியர், இங்கு மன்னவர் பெருமான்
-
சக்கரவர்த்தி - முடிமன்னர் - என்றார், திருவருளினாலே உலகிற்கு
எடுத்துக்காட்டாகிய பெருமை நோக்கி, மட்டு - தேன் என்றலுமாம்.
உறங்கி
மீது எழுந்தது ஒத்து - வெட்டுண்டு இறந்துபட்ட
யானையும் பாகரும் மீண்டும் உயிர் பெற்றெழுந்தது தூங்கி
எழுவதை ஒத்திருந்ததென்றார். "உறங்குவது போலும் சாக்கா
டுறங்கி, விழிப்பது போலும் பிறப்பு" என்ற திருக்குறட் கருத்தினை
இங்கு வைத்துக் காண்க. மீது - மேலே. முட்ட -
நிறைய -
மிகுதியாக - பாய்ந்து - பாய. செய்தெனெச்சத்தைச்
செயவெனச்சமாக்கி யுரைக்க. ஒத்து - பாய - முழங்கிப் பொங்கும்
பட்டவர்த்தனம் என முடிக்க.
உள்தரு
களிப்பினோடும் உறங்கி எழுந்ததொத்து
என்றதனை யானைக்குக் கூட்டி யுரைத்து யானை மகிழ்ந்து தூங்கி
எழுந்ததுபோல என்றுரைத்தலுமாம். சுகமாகத் துயின்றேன் என்னும்
வழக்குக் காண்க.
வெங்
கடங்கள் - யானையின் உடலின், மசிழ்ச்சி முதலிய
வெப்பக் கூறுகள் மிக்க போது மதநீர் பாயும் என்பர். வெம்மை
-
விருப்பம். மதமூன்றாதலிற் பன்மையாற் கூறினார். யானையை
முன்னர்க் குன்று - வரை - போன்றது என உவமித்தது உருவ
நோக்கி, இங்கு அதன் முழக்கம் முகிலென உவமித்தது, மழைக்
குறிப்பு நற்பயன் தருவதாதலின், யானை என்ற கருவியினால் உலக
வாழ்வாகிய மங்கலம் பெறும் திருவருள் வெளிப்பாடாகிய பயன்
பற்றிய குறிப்பாம்.
முழங்குதல்
- முகில் முழக்கம் குன்றினிடமாக உண்டாதலும்
காண்க. வெம் - விரும்பத் தக்க நறுமணங்
கமழும் என்றுரைப
்பாருமுளர்.
பொங்கும்
- ஆரவாரிக்கும் - மேல் முடுகி வருகின்ற -
யானை, கடங்கள் பாய்ந்து பொங்கும் என்றலுமாம். பாகரும் -
அவ்வாறே உறங்கி எழுந்தார்போன் றெழுந்தார்களாகிய பாகரும்.
இறந்தது தழுவிய எச்சவும்மை. பாகரும் - களிப்பினோடும் -
கொண்டு - அனைய - வந்தார் என்று கூட்டி முடிக்க.
அணைய
- அரசர்பாற் சேர.
உறங்கிய
தெழுந்தது - என்பதும் பாடம். 51
|