629.
|
பொற்சிலை
வளைய வெதிர்ந்தவர் புற்றர வனைய
சரம்பட
விற்படை துணியவு நின்றிலர் வெற்றிகொள் சுரிகை
வழங்கினர்
முற்றிய பெருவள னின்றியு முற்படு கொடைநிலை
நின்றிட
வுற்றன வுதவிய பண்பின் ரொத்தன ருளர்சில
கண்டகர்.
22 |
(இ-ள்.)
பொற்சிலை...வழங்கினர் - பொற்பூணிட்ட தமது
விற்களை வளைத்துப் போர் செய்தாரில் புற்றினின்று கிளம்பும்
அரவு போல மாற்றார் விட்ட அம்பினால் தமது விற்படை
அறுபட்டொழியவும் போர் ஒழிந்து நிற்காதவர்களாகிய, வெற்றி
தரும் உடைவாளை உருவிப் போரிட்டனராகிய இவர்கள்; முற்றிய ...
பண்பினர் - முன்னர் நிறைந்திருந்த தமது பெருவளங்கள் ஒழிந்த
பின்னரும் முன்னைக் கொடை நிலையிலே நிற்கத் தம்மிடம் எஞ்சி
உள்ளனவற்றை உதவுகின்ற வள்ளற்றன்மையுடையாரை; ஒத்தனர்
உளர் சில கண்டகர் - ஒத்தாராகி உள்ளார் சில வீரர்கள்.
(வி-ரை.)
பொற்சிலை - பொற்பூணிட்டவில். போர்
மள்ளர்களும் ஏனைத் தொழிலாளர்களும் தத்தம் தொழிற்குரிய
கருவிகளுக்குப் பொற்பூண் முதலியன இட்டுப் பாராட்டிக்
கொள்ளுதல் மரபு. இவை அக்கருவிகளுக்குப் பலமும் உறுதியுந்
தருவனவுமாம். பொன் - அழகிய என்பாருமுண்டு.
சிலைவளைய
எதிர்ந்தவர் - விற்படை மள்ளராய்
எதிர்த்துப் போரிட்டார். வளைய என்பது அதற்கு உரிய
போர்த்தொழில் குறித்தது.
புற்று
அரவு அனைய சரம் - அம்பறாத்தூணி (புட்டில்)
புற்றாகவும், அதினின்றும் ஒன்றன்பின் ஒன்றாக இடைவிடாது
தொடர்ந்து வரும் சரங்கள் அரவாகவும் உவமித்தார்.
இறத்தலைத்தரும் தொழிலாலும் அரவுக்குவமையாம். விடமூட்டிய
அம்புகள் என்பதுமாம்.
பட
- பட்டமையால். துணியவும் -
துணிக்கப்பட்டு
அற்றுப்போயின பின்னரும். நின்றிலர் -
போர் செய்யாது
நின்றாரில்லை.
வெற்றிகொள்
- வெற்றியைத் தன்னதாகக் கொள்கின்ற.
வழங்கினர்
- போரிற் பயன்படுத்தினர்.
முற்படு
கொடை நிலை - முற்படு - பெருவளன்
இல்லாமற் போயின காலத்தின் முன் தம்மிடத்துப்பட்ட.
கொடைநிலை - பெருங்கொடையாகிய தன்மை. நின்றிட -
அத்தன்மை ஒழியாது தங்க. நிலைநின்றிட என்று
கூட்டிக்கொடையானது அறாமல் நிலைக்க என்றலுமாம்.
கொடைநிலை நின்றிட - கொடை நிலை செல்லாது நின்று
பட்டதாக என்பாருமுண்டு. உற்றன - அப்போதைக்குத்
தம்
கைக்கு உதவியன - கிடைத்தன.
பண்பினர்
- தன்மையுடையாரை, இரண்டனுருபு தொக்கது,
பண்பினரை ஒத்தனர் என்க. எதிர்ந்தவரில் - நின்றிலராகி -
வழங்கினார்கள் - பண்பினரை - சில கண்டகர் - ஒத்தனர் -
என்று கூட்டி முடித்துக் கொள்க.
கண்டகர்
- வன்கண்மையுடைய போர். வீரர்கள்,
கண்டர்கள்
- என்பதும் பாடம். 22
|