663.
|
கரிப்பரு
மருப்பின் முத்துங் கழைவிளை செழுநீர்
முத்தும்
பொருப்பினின் மணியும் வேடர் பொழிதரு மழையே
யன்றி
வரிச்சுரும் பலைய வானின் மலர்மழை பொழிந்த
தெங்கும்;
அரிக்குறுந் துடியே யன்றி யமரர்துந் துபியு
மார்த்த. 14
|
663.
(இ-ள்.) வெளிப்படை. யானையின் பெரிய
கொம்புகளில் விளையும் முத்துக்களையும், மூங்கிலில் விளையும்
செழிய நீர்மையுடைய முத்துக்களையும், மலையில் விளையும்
ஏனைய மணிகளையும் வேடர்கள் மகிழ்ச்சியாற் பொழிகின்ற
மணிமழையேயன்றி வரிவண்டுகள் எழுந்து பறக்க விண்ணில்
மலர்மழையும் எங்கும் பொழிந்தது; சில்லரியுடைய சிறிய
உடுக்கைகளே யன்றித் தேவர் துந்துபிகளும் எங்கும் ஆர்ந்தன. 14
இவ்வைந்து பாட்டுக்களும்
ஒரு முடிபு கொண்டன. இவற்றின்
இறுதித் தொடர்கள், நெறியினிற்பார் - எடுத்த பின்றை -
அருளினாலே - மகப்பயந்தபோது - துந்துபியு மார்த்த என
அவ்வாறே ஒரு முடிபுபடக் கூட்டி முடிக்குமாறு அமைந்த அழகுங்
காண்க.
663. (வி-ரை.)
கரிப் பரு மருப்பின் முத்து -
யானைக்கொம்பு மூங்கில் முதலிய பதின்மூன்றிடங்களில்
முத்துப்பிறக்குமென்ப. கரி - யானை. பருமருப்பு
- பெரிதாய்
நீண்டு முற்றியகொம்பு. "மத்தவெங் களிற்றுக் கோட்டு வன்றொடர்
வேலி" (651) என்றதன் கருத்தை நினைவுகூர்க. கழை - மூங்கில்.
செழுநீர் - செழியநீர்மை. இதனை நீரோட்டம்
என்பது வழக்கு.
"வேரல் விளையுங் குளிர்முத்து" (492) என்றது காண்க. நீர்
- ஒளி
என்பாருமுண்டு. இவை பற்றி (492) உரைத்தவைகாண்க.
பொருப்பினின்மணி
- நவமணிகளில் முத்தும் பவளமு
மொழிந்தவற்றில் மலையிற் கல்லின் விளைவோடு சேர்ந்து
விளைந்துபடும் பச்சை நீலம் முதலிய ஏனை மணிகள். இவைபற்றி
225ல் உரைத்தவை காண்க. ஏனைமணிகளினின்றும் முத்தினை
வேறு பிரித்து முதன்மைபெறக் கூறுவதற்குக் காரணம் மேல்
உரைக்கப்பட்டது.
வேடர்
பொழிதரு மழை - பலகாலம் பிள்ளைப்பேறின்றி
நின்றதம் தலைவனது குடி விளங்குதற்கும், தாம் இளந்தலைவனைப்
பெறுதற்கும் ஓர் ஆண்மகவு பிறந்த பெருமகிழ்ச்சியினால், நரகன்கீழ்
வாழும் குடிகளாகிய வேடர்கள் மழைபோல முத்துக்களையும்
ஏனைய மணிகளையும் இரவலர்க்குப் பொழிந்தார்கள் என்பது.
இம்மணிகள் ஏனை நிலத்தார்க்கு அரியனவாய் மிக்கவிலை
பெறுமாயினும் இவர்களுக்கு வினையின்றி மிகுதியாய்
இலகுவிற்கிட்டுவன ஆதலின் அவர்கள் அவற்றை எளிதாக
வழங்குதல் கூடிற்றென்க. "குறவர் பன்மணி யரித்திதை விதைப்பன
குறிஞ்சி" என்ற திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணமும் (7)
காண்க. இங்கு அரசன் மகப்பேறு பெற்றது குறித்துக் குடிகள்
மகிழ்ந்து கொண்டாடியதும், பின்பு அரசன் தன்மகனது
வில்விழாவுக்குக் குடிகளை அழைத்துச் சிறப்புச் செய்ததும்,
பின்னர்க் குடிகள் அரசனிடம் தமது குறைகளை முறையிடத்தன்
மகனை அவர்களுக்கு அரசனாகக் கொள்ளுமாறு கொடுத்ததுமாகிய
அரசர்க்கும் குடிகட்கு மிடைநின்ற அரசவிசுவாசச் செயல்கள்
காண்க. மனுநீதிச் சோழர் கழறிற்றறிவார், மூர்த்திநாயனார்
புராணசரிதங்களும் பிறவுங் காண்க. இந்நாளில் இதற்கு மாறாக
அரசர் முடிகளை அழித்து அலைக்கழிப்பதாய்க்கிளம்பி நாடெங்கும்
பரவி வளரும் பகை உணர்ச்சியும் சிந்திக்க.
வரிச்சுரும்பு...........பொழிந்தது
- என்றது தேவர்கள்
கற்பகப்புதுப்பூ மழை பொழிந்தனர் என்றதாம். நாயனார் பேறு
பெற்ற ஞான்றும் "வானவர் பூவின் மாரி பொழிந்தனர்" (828) என்றது
காண்க. பெரியார்கள் இறைவனடி சேர்ந்து முத்தி பெற்ற திருநாளைக்
கொண்டாடுதலே மரபன்றிப், பிறந்தநாள் (செயந்தி) கொண்டாடுதல்
சைவர் மரபன்று. இப்பிறப்பில் முத்திபெறுதற்கே அவதரித்தவர்
இந்நாயனாராதலின் அவர்தந்திருவவதாரமே முத்திபோலப்
பெருமையுடையதென்பது வானின்மலர் மழையாலும்
அமரர்துந்துபியாலும் உணர்த்தப்பட்டது. இவ்வாறே, முத்தி
தருதற்கென்றே அவதரித்து திருஞான சம்பந்தமூர்த்திகள்
திருவவதாரத்திலும் உரைத்தது காண்க. ஏனை நாயன்மார்கள்
முத்திபெற்ற காலத்து நிகழ்ந்த நிகழ்ச்சிகளுங் காண்க. வரிச்சுரும்பு
அலைய - மழைபோலப் பொழிந்த புதிய பூக்களில் மொய்த்த
வண்டுகள் அவை வீழும்போது மோதுண்டு அலைந்தன என்பது.
வரிச்சுரும்பு - வரிகளையுடைய வண்டுகள். வானின்
மலர்
மழை - தேவருலகப் புதுமலராகிய (கற்பகமலர்) மழை. "தெய்வப்
பூவின் மாமழை" (398), "கதிர்வி சும்பிடை கரந்திட நிரந்தகற்
பகத்தின், புதிய பூமழை யிமையவர் மகிழ்வுடன் பொழிந்தார்" (546)
முதலியவை காண்க.
எங்கும்
பொழிந்தது - எங்கும் ஆர்த்த - என ஈரிடத்தும்
கூட்டுக.
அரிக்குறுந்துடி
- "சில்லரித்துடி" (654) பார்க்க. குறிஞ்சிப்
பறைவகையிலொன்று.
அமரர்
துந்துபி - தேவவாத்திய வகை. இது தெய்விகச்
சிறப்பு நிகழும் போது ஆர்க்குமென்ப. ஆளுடையபிள்ளையார்
திருவவதாரத்தின்போது கண்ட நிகழ்ச்சிகளையும் இங்கு உன்னுக. (659)
அரியதென்று எவருங் கூற - காதலாலே - (660)
விட்டு - தூக்கி - நாற்றி - தூங்க - செய்து - எடுத்த பின்றை -
(661) நாகற்கு - அண்ணலாரருளினாலே - (662) விளங்க -
தத்தைபாற் கருப்பநீட - திங்கள் செல்ல - தவத்தினாலே
மகப்பயந்தபோது - (663) வேடர் பொழிதரு மழையேயன்றி -
வானின் மலர் மழை (எங்கும்) - பொழிந்தது; - எங்கும் -
துடியேயன்றி - துந்துபியும் ஆர்த்த என இவ்வைந்து
பாட்டுக்களையும் தொடர்ந்து முடித்துக் கொள்க. 14
|