667. (இ-ள்.)வெளிப்படை.
மலைவாழும் கடவுட் காப்பாகத்
தமது மறவர் குடி மரபிலே வந்த குற்றமற்ற பழைய
வழக்குக்கேற்குமாறு பொருந்துவனவற்றை யெல்லாம் விரும்பிச்
செய்து, வாசனையுடைய இளந்தளிர்களைச் சூட்டி மலைவேப்பங்
கொட்டைகளை ஒழுங்குபடுத்தி இடையிடையே கோத்த
அரையிற்றரிக்கும் பலகறைமணிக் கோவையைக் கட்டி அழகு
பொருந்த வளர்க்கின்ற நாளிலே, 18
667.
(வி-ரை.) வரையுறை
கடவுள் காப்புச்...........செய்து -
மலைவாழ்கின்ற தெய்வங்கள் இக்குழவியைக் காப்பனவாக என்று
தொழுது அதன்பொருட்டுத் தமது பழையவழக்குப்படி வேண்டுவன
செய்து, அவைதாம், கைகளிலும் கால்களிலும் இரும்புகலந்த
கலன்களிடுதல் முதலியனவாய் நிலந்தோறும் மரபுதோறும்
வெவ்வேறுவகைப்படும். காப்பு - என இந்நாளில்
மணி - பொன்
வெள்ளி முதலியவற்றாற் சிறுகுழவிகட்கு இடும் வழக்கும் இக்கருத்தே
பற்றியது. ஆயின் காப்பு - என்ற பேரால்
இயன்று காவல் செய்ய
இடுகின்ற இவை காவலுக்கு மாறாக அக்குழவிக்கு இறுதிநேரச்
செய்துவிடுகின்றன. முன்னோர் கையாண்ட முறைக்கு மாறாய்நடந்து
மக்கள் இவ்வாறு துன்பப்பட்டுழலுதல் வருந்தத்தக்கது.
குழவிகட்குச்
செய்யும் முதற்சடங்கு பேரிடுதலாம்,
(நாமகரணம்). அதனை மேற் பாட்டிற் கூறி, அதனையடுத்துள்ள
பருவங்களில் முதலாவதாகிய காப்புப் பருவச் செய்தியை
இப்பாட்டானும், அதன்மேல் ஓராண்டுவரைவரும் ஏனைப்
பருவங்களை அடுத்து வரும் பாட்டானும், ஆண்டிற்குமேல் வரும்
வளர்ச்சியைச் சிலைக்கலைபயில் பருவம்வரை அப்பால் எட்டுப்
பாட்டுக்களானும் கூறி, இவ்வாறு நாயனாரது வளர்ச்சியைப்
பாட்டுக்களின் வளர்ச்சியாற் கொண்டு செலுத்திக் காட்டிய
அழகு காண்க. இவைபற்றி 279 - ம் பாட்டில் உரைத்தவையும்
பார்க்க.
வரையுறை
கடவுள் - முருகன் என்றுரைப்பாருமுண்டு.
முருகவேள் முன்றிலிற் பரவுதல் செய்து பெற்ற இக்குழவியை
முருகனேகாக்க என்று காப்புச் செய்தல் மிகையாம். "தாம்வ
ளர்த்தோரி நச்சு மாமர மாயி னுங்கொலார்" (திருவாசகம்) என்பது
உண்மை. திருமாலை முன்னிட்டுக் காப்புக் கூறுவது பிள்ளைக்கவி
மரபு. பற்பல மரபு வழக்கும் பற்பல நிலவழக்கும் பலவேறு
திறப்படுவன. இங்கு வேடர் தங்குலத்தின் பழைய மரபுபற்றியே
பொருந்துவன போற்றிச் செய்தார் எனக் கூறினாராதலானும், பின்னர்
"அலர்பகல் கழிந்த வந்தியையவிப் புகையு மாட்டி" (676),
"காட்டிலுறை தெய்வங்கள் விரும்பி யுண்ண" (699), "தலைமரபில்
வழிவந்த தேவராட்டி" (696) எனவும் பிறவும் கூறுகின்றவாற்றானும்,
இங்கு வரையுறை கடவுள் என்றது மலைவாழும் சிறு
தெய்வங்கள்
எனக் கொண்டுரைக்கப்ட்டது. வரை உறை என்றதனால்
மலையில்
உறைகின்ற - வாழ்கின்ற என்ற குறிப்பும் காண்க. முருகப்
பெருமான் வரை உறைவார் மட்டுமன்றி வரைக்குரிய
முதல்வனாதலும் உணர்தற்பாலதாம். மறக்குடிமரபு
- வேடர்குலம்.
புரையில் தொல்முறைமை - இவர்களது வாழ்க்கை
கொல்
எறிகுத்து என்ற ஆர்ப்பினாலறியப்படுவது; ஆறலைத் துண்பது
இவர் தொழில்; இவர்கள் உயிர்க்கொலை செய்து ஊனுண்பவர்கள்;
குற்றமே குணமா வாழ்வார் இக்குலத்தைப் புரையில் என்ற
தென்னை? எனின், இவை இவர்களது மரபுக்குரிய
தொன்னெறியாதலின் இவ்வாறு கூறினார். இவையே குலவொழுக்கம்
- பிறப்பொழுக்கம் என்பர். "குலமிலாராகிலும் குலத்துக் கேற்பதோர்
நலம்" என்ற அப்பர் சுவாமிகள் தேவாரமு மிக்கருத்தே
குறித்ததென்ப.
பொருந்துவ
- காப்புக்குரியவை. பலரும் பலவாறு
இயற்றுவரேனும், இவர் தங்கள் குலத்துக்கு ஏற்றபடி
பொருத்தமானவற்றையே செய்தனர். ஆளுடைய பிள்ளையார்க்கு
அவர்தம் குலத்துக்கு ஏற்றபடி பொருந்திய திருநீற்றுக்காப்பு இட்ட
வரலாறு இங்கு நினைவுகூர்க.
விரை
இளம் தளிரும் சூட்டி - மணமுடைய
இளந்தளிர்களைச் சூட்டுதல் கொசு முதலிய சிறு பிராணிகளும் பிணி
முதலியனவும் அணுகி நலியாமைப் பொருட்டு.
வேம்பு..............கட்டி
- பலகறைகளைக் கோத்து
அரைஞாண்போல அணிந்தனர். அக்கோவையின் இடையிடையே
மலைவேப்பங் கொட்டைகளை இழைத்துக்கோத்தனர்.
வேப்பங்கோலைத் துண்டங்களாகத்தறிந்து
மணிபோல் இழைத்துப்
பலகறை அரைஞாண் கோவையின் இடையிடை கோத்தனர்
என்றலுமாம். இவையும் காப்புச் செய்தலின்
ஒருபகுதி. மணிக்கவடி
- பலகறை மணி.
அவ்வநிலத்து
வாழும் மக்கள் தத்தமக்கு வேண்டிய
பொருள்களை அவ்வ நிலத்துப் பொருள்களினின்றே தேடிக்
கொண்டு வாழும் இயற்கைவாழ்க்கையே நமது நாட்டு முந்தையோர்
கைக்கொண்டொழுகியமுறை. இதுபற்றியே அவ்வத்திணைக்குரிய
முதல் - கரு - உரிப்பொருள்கள் என்று வகுத்தது தமிழ்
இலக்கணம். ஒரோர் சிறு பொருளுங்கூட அயல்நாட்டினின்றும்
வரச்செய்து பலவாறும் இடர்ப்பட்டொழிவது இந்நாள் நாகரிகமென்ற
பேரால் வாழும் நமது ஆபாச அநாகரிக வாழ்க்கையாய் விட்டது
வருந்ததக்கது.
அழகுற
வளர்க்கும் - மேலே சொல்லிய காப்புமுறையும்,
சூட்டுதல் கட்டுதல் முதலியனவும் குழவிக்குக் காப்புச்செய்தது
மட்டுமன்றி அழகுஞ் செய்ததென்க. நாளில் வரும்பாட்டில் உய்த்தார்
என்ற வினைமுற்றுக் கொண்டுமுடிந்தது. 18