669.
|
ஆண்டெதி
ரணைந்து செல்ல விடுமடித் தளர்வு
நீங்கிப்
பூண்டிகழ் சிறுபுன் குஞ்சிப் புலியுகிர்ச் சுட்டி சாத்தி
மூண்டெழு சினத்துச் செங்கண் முளவுமுள் ளரிந்து
கோத்த
நாண்டரு மெயிற்றுத் தாலி நலங்கிளர் மார்பிற்
றூங்க,
20 |
669.
(இ-ள்.) வெளிப்படை. ஆண்டு நிறைந்து எதிராம்
ஆண்டு வந்தபின்பு இடும் அடியின் தளர்ச்சி நீங்கிச்
சிறுநடைப்பருவம் வந்து சிறிய புன்மயிர்த் தலையில் பூணாகத்
திகழும் புலிநகச்சுட்டி சாத்தி மூண்டெழுகின்ற சினமுடைய செங்கண்
முள்ளம் பன்றியின் முள்ளை அரிந்து இடையிடை கயிற்றிற்கோத்த
புலிப்பல் மாலையை நன்மை மிக்க மார்பில் தொங்க வைத்து, 20
669.
(வி-ரை.) ஆண்டு..........நீங்கி -
முதல் ஆண்டின்
நிறைவு தளர்நடைப்பருவம். அதன்மேல் இரண்டாவதாண்டு நடந்து
விளையாடும் பருவம் என்பர். வளர் பருவ முறையாண்டு
வருவதன்முன்...........செந்நின்று............தளர் நடையிட்டருளினார் (50),
பாதமலர் நிலம்பொருந்தப் பருவமுறை யாண்டொன்றின், மீதணைய
நடந்தருளி விளையாடத் தொடங்கினார் (51) என்ற திருஞானசம்பந்த
நாயனார் புராணங் காண்க. ஆண்டு எதிர் அணைந்து செல்ல -
வரும் ஆண்டை எதிர்கொண்டு அழைத்துத் தான் நின்றுவிட்ட
ஆண்டு. இடும் அடித்தளர்வு நீங்கி - எடுத்து
வைக்கும்
அடித்தளர்ச்சி. தாயர் தாதியர் கைப்பற்றி நடைபழகும் பருவம்
நீங்கி. "எட்டாவது மாதம் எடுத்தடி வைக்கும்" என்பர். அதன்
மேலும் நான்கு மாதங்கள் சென்றதனால் அடித்தளர்வு நீங்கிற்று.
நீங்கி மறுகிடை ஆடும் நாளில் என வரும்பாட்டுடன் கூட்டி
முடிக்க.
பூண்திகழ்
சுட்டி சிறுபுன் குஞ்சி சாத்தி - என மாற்றிக்
கொள்க.
புலியுகிர்ச்சுட்டி
- புலிநகத்தை அரிந்து சுட்டி என்னும்
அணியாகக் சுட்டிச் சாத்துதல் வேடர்மரபு. சுட்டி - சிறார்க்குத்
தலையின் முன்புறம் அணியும் அணிவகை. புலிநகத்தை
ஒற்றையாயேனும் எதிரெதிராக இரண்டாகச் சேர்த்தேனும் பொன்னாற்
கட்டிச் சிறார்க்கு மார்பிலணிதல் இந்நாளினும் பலமரபினரிடையும்
வழக்குண்டு.
புலியுகிர்
- முளவுமுள் - புலிஎயிறு - பாசொளிமணி -
மருப்பு - முதலிய அணி கலப்பெருள் - எல்லாம் வேடர்கள் தமது
நிலமாகிய குறிஞ்சி நிலத்துப் பொருள்களினின்றே ஆக்கிக்
கொண்டது காண்க. இவ்வாறே 686 - 697 - 710 முதல் 710 வரை -
வரும் பாட்டுக்களிலும் காண்க. இஃது எல்லா நிலமக்களுக்கும்
ஒக்கும். இவைபற்றி மேல் 667 - ல் உரைத்தவை காண்க.
சிறுபுன்
குஞ்சி - ஓராண்டு நிரம்பிய சிறு குழவியாதலின்
தலையின் மயிர் சிறியவாய்ச் சிலவாயிருக்குமென்க. "புன்றலைச்
சிறும கார்கள்" (653) என்றது நினைவு கூர்க.
புன்குஞசி
- இதனைப் "புன்றலை" (653) என்ற விடத்துக்
காண்க. இந்தச் சிறுபுன் குஞ்சி பின்னர் நெறிகொண்ட குஞ்சிச்
சுருளாய் (706) நீண்டு செறிந்தது காண்க.
முண்டு
எழு சினத்துச் செங்கண் முழவு - முள்ளம்
பன்றியின் தன்மை கூறினார். இது கோபத்தால் முட்கள் சிலிர்த்துப்
பாய்ந்து மேல் விழுந்து பகைப்பிராணிகளை அடர்க்கும்; சினத்தால்
உடல் சிலிர்த்தபோது இதன் உடலில் உள்ள நீண்ட முட்கள்
உடலினின்றும் கிளம்பி அம்புகள் போலப் பாய்ந்து எதிர்நிற்போரை
மிக ஊறுபடுத்தும் என்ப. முள் அரிந்து கோத்து -
நீண்ட
முள்ளினை அளவாகச் சிறு சிறு துண்டங்களாக அரிந்து அவற்றின்
உட்டுளையில் நாண்கோத்து மாலையாக்குதல். இவ்வழக்கு
இந்நாளினும் பிற மரபினரிடையும் அருகி நிகழ்கின்றது.
எயிற்றுத்
தாலி - புலிப் பல்லினையும் ஒழுங்குபட அரிந்து
துளையிட்டு மாலையில் கோப்பது வழக்கு. 658-ல் உரைத்தவையுங்
காண்க. தாலி - இங்கு மாலையைக் குறித்தது.
நலம்
கிளர் மார்பு என்றது பின்னர் இம்மார்பின் வீரத்தால்
விளையும் பெரு நன்மை நோக்கி. 20
|