674.
|
அனையன
பலவுஞ் செய்தே யைந்தின்மே லான
வாண்டின்
வனைதரு வடிவார் கண்ணி மறச்சிறு மைந்தரோடுஞ்
சினைமலர்க் காவு ளாடிச் செறிகுடிக் குறிச்சி சூழ்ந்த
புனைமருப் புழலை வேலிப் புறச்சிறு கானிற்
போகி,
25 |
674. (இ-ள்.)
வெளிப்படை.. இவ்வாறாகிய
பலவிளையாட்டுக்களையும் செய்தே ஐந்தாண்டு நிரம்ப, அதன்மேல்
செல்கின்ற ஆறாவது ஆண்டில், வளையப்படுவதாய் வடித்த
வாரையும் கண்ணியையும் கொண்டு மறமிகும் வேட்டுவச்
சிறார்களோடும் மலர்கள் நிறைந்த கிளைகளையுடைய மரங்கள்
வளர்ந்த சோலைகளில் விளையாடியும் குடிகள் நெருங்கிய
குறிச்சியினைச்சுற்றி யானைக் கொம்புகளாலிட்ட உழலையுடைய
வேலிப்புறத்திலே அடுத்துள்ள சிறுகாட்டிலேபோய், 25
674.
(வி-ரை.) அனையன பலவும்
செய்தே - சிறுபறை
முழக்குதல் முதலிய ஆடல்களும் பிறவும் தொகுத்து அனையன
பல என்றார். இதனால் மூன்று முதல் ஐந்தாண்டுவரை வளர்ச்சி
குறிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகள் வரையிற் சிறுவர்
மனைக்குள்ளும் மனைமுன்றிலிலும் தவழ்ந்தும் நடந்தும்
விளையாடுவர். அதன்மேல் முன்றிலை நீங்கி வெளியே, முதலிற்
சிறுதூரமும், பின்னர் நெடுந்தூரமும் ஓடியும் ஆடியும்
விளையாடுவர். இதனையே படிப்படியாக வேலிக்குட்பட்ட
மனைகளை யடுத்துச்சூழ்ந்த சினைமலர்க் காவுள் ஆடி என்றும்,
பின்னர், வேலிப் புறச்சிறு கானிற்போகி என்றும்
கூறினார்.
மலர்ச்சினைக்காவுள்
என மாற்றுக. குடிசைகளைச்
சுற்றியுள்ள வன்றிரள் விளா - (652) முதலிய மரங்களின் சோலை.
சினை - ஆகுபெயர்.
மருப்புப்புனை
உழலை வேலி என்க. மருப்பு -
யானைக்கொம்பு. புனைதல் - வலிமையும் ஒழுங்கும்பெற
யாத்து
நிறுவுதல். "களிற்றுக் கோட்டு வன்றொடர் வேலிகோலி" (651) என
முன்னர் இதனைக்குறித்தது நினைவு கூர்க. யானை புலி முதலிய
வலிய பெரிய பிராணிகளும் உள்ளே நுழையாதபடி ஊரினைச்
சுற்றிச் சூழச் செறிவாகப் புனையப்படுவதனால் - சூழ்ந்த
- புனை
- என்றார். உழலை - கடக்கும் மக்களுக்கு வழிதந்து உழன்று பின்
தன் முன்னை நிலையில் நிற்பதாக மரத்தா னியன்றதோர் அமைப்பு.
இந்நாள் இருப்புப்பாதைகளின் குறுக்காக மக்கள் தாண்டிச்செல்லும்
சுருங்கைவழிகள் பலவற்றிலும் இவ்வித அமைப்புக் காணலாம்.
கடவு, காவு என்பன உலக வழக்கு. உழலுதலால் உழலை
எனப்படும். ஐகார விகுதி பறவை என்பதிற்போலக் கருத்தாப்
பொருளில் வந்தது. உழலுதல் சுழலுதல் - முன்னும் பின்னும்
அசைதல் - முதலியன; இவ்வழியால் விலங்குகள் புக இயலாதென்க.
உழலை என்பதொருவகைச் செடியா னியன்ற வேலி என்பாருமுண்டு.
நுழைவோர்க்கு இடந்தந்து வளைந்து பின்னர் நிமிர்ந்து நிற்ப
திவ்வகைச் செடி என்பர்; மரவேலி என்புழிப்போல
உழலையானியன்ற வேலி என்பது இவர்கள் கருத்து.
புறச்சிறுகான்
- குறிச்சி ஊரினை அடுத்து அதன் புறத்தே
உள்ள மரச்செறிவில்லாத சிறுகாடு. ஊரை விட்டு முதலில்
வெளிவரும் வேடர்சிறார் இதனில் ஆடல் பயில்வர். இவற்றில் புலி
- யானை - முதலிய வலிய பெருவிலங்குகள் வசிக்கமாட்டா. மக்கள்
வாழிட மருங்கினை அடுத்து முயல்களும், அதனிற்சிறிது சேய்மையிற்
காட்டுப்பன்றிகளும் வாழும். பின்னும் சேயனவாய்ப் பெருவிலங்குகள்
வாழ்கின்ற காட்டை அடுத்துச் செந்நாய்கள் வாழும்.
இஃதவற்றினியல்பு. ஆதலின் அம்முறையில் வரும் பாட்டிற் கூறியது
காண்க. இவ்வாறு படிப்படியாக இச்சிறார் கானில் மேன்மேற்
சென்று பழகும் இயல்பு குறித்த நயமும் ஓர்க.
வரிக்குருளை
- இவை ஏனைவிலங்குகளுடன்கூடித் தவறி
வந்தனவாம். "ஏனத் திரளோ டினமான் கரடி யிழியு மிரவின்கண்,
ஆனைத் திரள்வந் தணையுஞ் சார லண்ணா மலையாரே" என்ற
ஆளுடைய பிள்ளையார் தேவார முதலியவை காண்க.
சிறுகான்
- பெருங்கானமுள்ள மலைச்சாரலும் அதில்
வாழ்வனவும் பற்றி 693 - 727 முதலிய பாட்டுக்களிற் காண்க. 25
|