685.
|
அயல்வரைப்
புலத்தின்வந்தா ரருங்குடியிருப்பி
லுள்ளா
ரியல்வகை யுணவி லார்ந்த வெயிற்றிய ரெயின
ரெல்லா
முயர்கதி ருச்சி நீங்க வொழிவில்பன் னறவு மாந்தி
மயலுறு களிப்பி னீடி வரிசிலை விழவு கொள்வார். 36
|
685.
(இ-ள்.) வெளிப்படை. பக்கத்து மலைச்சாரற்புலத்தின்
வந்தாரும், இங்கு அரிய (உடுப்பூரில்) சிறுகுடியிருப்பின்
கண்ணுள்ளாருமாய், நில இயலும் உடலியலும் பொருந்தியவகையாற்
கூடிய அவ்வுணவில் நிறைய உண்டு தேக்கிய எயிற்றியரும்,
எயினரும் ஆகிய யாவரும் விண்ணில் உயர்ந்த ஞாயிற்றின்
செலவில் உச்சிப் பொழுது கழிய அளவற்ற பலவகையாயின
நறவுங்குடித்து, அதனால் மயல் பொருந்தியகளியாட்டத்திற்பெருகி,
வரிவில்விழாக் கொண்டாடுபவர்களாய், 36
685.
(வி-ரை.) அயல்வரைப்
புலத்தின் வந்தார் - நாகன்
வில்விழாவின் நாட்குறித்துச் சொல்லிவிட, அதுபற்றி, "மாடுயர்
மலைக ளாளு மறக்குலத் தலைவரெல்லாம்" (678), "சிலைபயில்
வேடர் கொண்டு திசைதொறு நெருங்க வந்தார்" (679) என்று
முன்கூறியவாறு அயலில் உள்ள மலை நிலத்திலிருந்து வந்தவர்கள்.
அயல் என்றது பொத்தப்பி நாட்டுக்கு அயல்
நாடும், உடுப்பூருக்கு
அயலூரும் ஆம். வந்தார் - குடியிருப்புக்கு
அப்பாலிருந்து
வந்துகூடியவர்கள். இவர்க்கு வேறாய் இந்நாட்டுச் சீறூரினுள்ளாராய்க்
கூடியவர்களைக் குடியிருப்பினுள்ளார் என்று
பிரித்துக் கூறியது
காண்க. அருங்குடி - அரியசிற்றூர். இயல்வகை
உணவு -
நிலத்துக்கும் நலத்திற்கும் பகுதியிற் பொருந்தியனவாகத்
தத்தமக்கியைந்த உணவு. மேலிரண்டு பாட்டுக்களினும் விரித்த
உணவுவகை. ஆர்ந்த - வயிறு நிறையவும் ஆசைதீரவும்
நிறைய
உண்ட.
எயிற்றியர்
- எயினர் - வேடிச்சியரும் வேடரும். வில்விழா
ஆண்மகவுக்குரிய சடங்காயினும் நன்மக்கள் வாழ்க்கைத் திறத்தில்
இவ்விழாவிற் பெண்களும் கலந்துகொள்ளும் பண்டைநாள் வழக்கும்,
இதனால் பழங்குடி மக்கள் பெண்களுக்குக் கொடுத்த உரிமையும்,
அதுபற்றியே எயிற்றியரை முதலிற் சுட்டிய சிறப்பும் குறிக்கொள்க.
உயர்
கதிர் உச்சி நீங்க - ஞாயிற்றின் உச்சிவேளையை
ஒருநல்வேளையாகக் கொள்வது இவர்கள் வழக்கு. இது நல்வேளை
என்பது சோதிடநூற் றுணிபுமாம். இதனை அபிசித்து முகூர்த்த
மென்பர். காலப் பிரகாசிகை, காலவிதானம் முதலியவை பார்க்க.
இங்கு வில்விழாத் தொடக்கத்தில் வில்லினுக்கும் மாணவராகிய
திண்ணனாருக்கும் காப்புச் சேர்த்த இது நல்வேளை. இது போலவே
இதன் ஏழாநாளில் விழா நிறைவில் வில்லினைப் பிடிப்பித்த நேரமும்
இதுவேயாம். "வெங்கதி - ருச்சி மேவிய பொழுது" (689) என்றது
காண்க. முடிவில் நாயனார் திருக்காளத்தி மலையேறிக் காளத்தி
யடிகளாரைக் காணலுறுதற்கும் இந்த நல்வேளை கூடிற்று.
"கதிரவனுச்சி நண்ண" (750) உச்சிவேளையிற் சிறுவர் முதலியோர்
வெளியிற் போதலாகாது என்னும் உலகவழக்கும் இக்கருத்தினின்
றெழுந்தது போலும். ஞாயிற்றின் முழுவெப்பமுந் தாக்கிக் காய்தலின்
உயிர் வகைகளுக்கு அதன் பயன்றரும் நேரம் இது வென்க. ஞாயிறு
கடலிற்றோன்றும் உதய நேரம் ஒருநல்லவேளையாம் என்னும்
இந்நாள் வழக்கும் காண்க.
ஒழிவில்
பன்னறவு மாந்தி - உணவு வகைகள்
பலவாயினமை போலக் கள் வகைகளும் பலவாயின. இவையும்
அந்நிலத்துக்கும் உடல்நலத்துக்கும் பொருந்திய இயல்பு
வகையாலமைந்த ஈச்சஞ் சாறு முதலியன வென்பர். ஒழிவில் -
தடுக்கலாகாத வகையால் அவ்வுணவுகளோடு உடன்கூட்டி
உட்கொள்ளப்படுவன என்ற குறிப்புமாம். இதுபற்றியே முன்னருந்
"தொலைவில் பன்னறவு" (679) என்றார். மாந்தல் -
மிகுதிபெற
உட்கொள்ளுதல்.
பல்
நறவு - பலவேறு வகைப்பட்ட நறவுகள். ஆயின்
இவை அறிஞராற் கடியப்பட்டன. ஆதலின் இவற்றை
விரித்துறைத்தல் முறையன்றென்பார் பல் என்று தொகுத்து
நிறுத்தினார். மயலுறு களிப்பின் என்றதன்
குறிப்பும் அது.
இக் குடிவகைகள்
இந்நாளிற்போல மிகையும் கேடும்
விளைக்காமல், அந் நாளிலே கீழ்நிலையிலுள்ளார் கொண்டாட்டச்
சிறப்புகளில் அளவில் அமைந்துள்ள உணவுவகையாகிய மட்டில்
நின்றதுபோலும். இந்நாளிலே சிறுப்பு நாளிலும் பிறநாளிலும் உலகப்
பெருநிலைப் பேர்படைத்தோரும் பேருண்டி மிசைந்து பெருங்குடி
மாந்திக் கேடுற்றழியக் காண்கின்றோம். இது முன்னாளின் வழக்கக்
கேடுகளின் எச்சமாய் வந்த வழிவழி வழக்குப்போலுமாம்.
மயலுறு
களிப்பின் நீடி - விழாக் கொண்டாட்டங்களில்
யாவரும் களிப்புக் கொண்டு ஆடுதல் இயல்பேயாயினும் இங்குக்
கூறிய நறவின் களிப்பு அறிஞர்களாற் கடிந்து விலக்கப்பட்ட
தொன்றாம் என்பார் மயலுறு என்றார். மயல்
ஒருவனது நிறையை
அழித்து மயக்கஞ் செய்தலால் அதனைத் தரும் நறவு
ஒதுக்கப்பட்டது. "சத்தி யழிந்தது தம்மை மறத்தலால்" என்பது
திருமந்திரம்.
வரிசிலை
விழவு கொள்வார் - வில்விழாக்
கொண்டாடுவாராகி. முற்றெச்சம். கொள்வார் - சூழ்ந்தார் என
வரும்பாட்டுடன் கூட்டி முடிக்க.
அயல்வரைப்
புறத்தின் - என்பதும் பாடம் 36
|