688.
|
குன்றவர்
வரிகொண் டாடக் கொடிச்சியர் துணங்கை
யாடத்
துன்றிய மகிழ்ச்சி யோடுஞ் சூரர மகளி ராட
வென்றிவில் விழவி னோடும் விருப்புடை யேழா
நாளா
மன்றிரு மடங்கு செய்கை யழகுற வமைத்த
பின்றை, 39 |
688. (இ-ள்.)
வெளிப்படை. (இவ்வாறு)வேடர்கள் வரிக்கூத்து
ஆடவும், வேடிச்சிகள் துணங்கைக்கூத்து ஆடவும், மிக்க
மகிழ்ச்சியோடும் அச்சந்தருகின்ற தெய்வ மகளிர்கள் ஆடவும்,
வெற்றிதரும் வில்விழாவை நாள்தோறுங் கொண்டாடிவந்து,
விருப்புடைய ஏழாம் நாளிலே முன்னை நாள்களைவிட இருமடங்கு
அதிகமாக அக்கொண்டாட்டங்களை அழகுறச் செய்த பின்னர், 39
688.
(வி-ரை.) குன்றவர்வரி - வரி - வரிக்கூத்து.
வரிப்பாட்டு, குறிஞ்சிப் பண் என்பாருமுண்டு. இவற்றின் விரிவுகளைச்
சிலப்பதிகார உரை முதலியவற்றுட் கண்டு கொள்க.
வரிகொண்டாடுதல் - குறிஞ்சிப் பண்ணைப்பாடிக்
கூத்தாடுதல்
என்பர். குறிஞ்சிப் பண் இத்திணைக்குரியது. நெஞ்சு உரத்துடன்
மிக்க மூச்சுச் செலவுடன் பாடத்தக்கது. வேடர்களில் ஆண்மக்கள்
வரி கொண்டாட என்க.
கொடிச்சியர்
துணங்கை ஆட - துணங்கை - துணங்கைக்
கூத்து. சிங்கிக் கூத்தென்பதும் வழக்கு. "முடக்கிய விருகை
பழுப்புடை யொற்றித், தொடக்கிய நடையது துணங்கை யாகும்"
(பிங்கலம்). வேட்டுவருட் பெண்கள் துணங்கைக் கூத்தாட என்க.
"வெருவர, வென்றடு விறற்களம் பாடித் தோள் பெயரா, நிணந்தின்
வாயன் துணங்கை தூங்க" என்பது திருமுருகாற்றுப்படை,
கொடிச்சியர் - குன்றவர் மகளிர்.
சூர்
அரமகளிர் - கண்டார்க்கு அச்சத்தை வருவிக்கும்
தெய்வப் பெண்கள். சூர் - அச்சம். இவர்கள் மலையிடங்களில்
வாழ்பவர். தெய்வம் பரவிக் குரவை - வரி - துணங்கை முதலியன
ஆடியும் பாடியும் வேட்டுவர் விழாக் கொண்டாடினார்களாக, அது
கண்டு தெய்வப்பெண்கள் மகிழ்ந்து ஆடினர் என்பதாம். துன்றிய்
மகிழ்ச்சி - விழாக் கொண்டாட்டங்களில் நிறைந்த மகிழ்வு. "கோழி
யோங்கிய வென்றடு விறற்கொடி, வாழிய பெரிதென் றேத்திப்
பலருடன், சீர்திகழ் சிலம் பகஞ் சிலம்பப் பாடிச், சூரர மகளி ராடுஞ்
சோலை" என்ற திருமுருகாற்றுப்படையுங் காண்க. வென்றி வில்
விழா - இவ்வில் வெற்றிபெற் றோங்குவதாக என்று மேற்கூறிப்
போந்தவாறு ஆறு நாளும் விழாக் கொண்டாடினார்கள் என்க.
விருப்புடை
ஏழாம் நாள் - திருவிழாவின் நிறைவு
நாளாதலின் விருப்புடை என்றார். காப்பணிந்தபின்
ஏழு நாட்கள்
தொடர்ந்து விழாக் கொண்டாடி முடித்தனர் என்க. ஏழுநாட்
கொண்ட திருவிழாக்கள் ஆகமங்களிலும் விதிக்கப்பட்டன
என்பதையும் நினைவு கூர்க. "தீர்த்தமா மட்ட மீமுன் சிறப்புடை
யேழு நாளும், கூத்தராய் வீதி போந்தார் குறுக்கைவீ ரட்டனாரே"
என்ற திருநேரிசையும் காண்க. "கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி,
ஆடுதுவன்று விழாவின் நாடார்த்தன்றே" என்னும் சங்கநூன்
மேற்கோளும் அறிக. ஏழாம் நாள் முடிவாகச் செய்யப்படும்
திருவிழா கணம் எனப் பெயர் பெறும்.
அன்று
இருமடங்கு செய்கை - முன் ஆறு நாளும்
நிகழ்ந்ததுபோல ஒருமடங்கும், விழாநிறைவின் பொருட்டுத் தனியாக
ஒரு மடங்கும் ஆக இருமடங்கு என்க. இருமடங்கு -
மிகுதிப்
பொருள் தருதல் மாத்திரையாய் நின்றது என்பாருமுண்டு.
அழகுற
அமைத்த - குறிச்சியை அலங்கரித்தலும் தம்மை
அலங்கரித்தலும் முதலிய யாவும் அழகு பொருந்தச் செய்த. 686
பார்க்க. இவற்றின்வகை திருமுருகாற்றுப்படை யுள்ளுங் காண்க.
பின்றை - பின்பு.
களி
கொண்டாட - ஏழாநாளின் - அமைந்தபின்னர் -
என்பனவும் பாடங்கள்.
|