689.
|
வெங்கதிர்
விசும்பி னுச்சி மேவிய பொழுதி லெங்கு
மங்கல வாழ்த்து மல்க மருங்குபல் லியங்க ளார்ப்பத்
தங்கடொன் மரபின் விஞ்சைத் தனுத்தொழில் வலவர்
தம்பாற்
பொங்கொளிக் கரும்போ ரேற்றைப் பொருசிலை
பிடிப்பித்தார்கள். 40
|
689.
(இ-ள்.) வெங்கதிர்....பொழுதில் - ஞாயிறு
ஆகாய
வெளியின் உச்சியிற் பொருந்திய நேரத்திலே ; எங்கும்....ஆர்ப்ப -
எவ்விடத்தும் பல மங்கல வாழ்த்து நிறையவும், பக்கங்களிற்
பலவகை மங்கல இயங்கள் சத்திக்கவும்; தங்கள்....தம்பால் -
(அவ்வேடர்கள்) தங்களுடைய பழைய மரபில் வந்த வில் வித்தை
பயிற்றும் தன்மை வல்லவரிடமாக; பொங்கொளி...பிடிப்பித்தார்கள் -
ஒளி வீசும், கரியபோர் வல்ல, ஏறுபோன்ற திண்ணனாரைப்
போர்புரிய வல்லதாகிய வில்லினைப் பிடிப்பித்தார்கள். 40
689. (வி-ரை.)
வெங்கதிர் விசும்பின் உச்சிமேவிய
பொழுதில் - 685 பார்க்க.
மங்கலம்
என்பதனை இயங்களுக்கும், பல என்பதனை
வாழ்த்துக்கும் கூட்டுக.
வாழ்த்து
- மக்கள் வாயால் வாழ்த்துவது.
வாழ்த்தெடுத்தியம்பினார்கள் (682) என்றது காண்க. அவ்வாறே
இயங்களின் மங்கல ஆர்ப்புக்களும் மிக என்க.
தங்கள்
தொல்மரபின் - தமது பழைமையான மரபு
வழிவந்த. ஆசிரியத் தொழிலுக்குத் தொன்மையும் மரபுவழி வருதலும்
வேண்டப்படுவன என்பது நமது முன்னையோராகிய ஆன்றோர்
துணிபு. ஒருமரபும் பற்றாது வழிவருதலுமிலராய்ப் புதிதின்
வந்தவரைச் சிறந்த ஆசிரியராகக் கொள்ளார் நம்முன்னோர்.
"குலவித்தை கல்லாமற் பாகம் படும்" என்பது கைவந்ததொரு
பழமொழி. இவ்வாறில்லாது சிலர்பால் விஞ்சைமேம்பாடு
காணப்படுவது ஒரோவழிஉளதாம். அதுவிதியாகாது. வணிகமரபினர்
இயல்பிலே கணக்கில் வல்லவராதலும், வழிவழி வரும் பழைய
வேளாள மக்களுக்கு உழவின் அறிவு கல்லாமே அனுபவத்தில்
வருதலும் பிறவும் காணலாம். இதுபற்றியே முன்னாள் வேடர்கள்
வில்வித்தையில் தங்கள் தொல் மரபில் வந்த
வலவரை
ஆசிரியராகக் கொண்டு பயிற்றனர்.
தனுத்
தொழில் விஞ்சை - எனமாற்றுக. விற்றொழிற்கலை.
வல்லவர் என்றது வலவர் என நின்றது. வலவர்பால் - ஏற்றைச் -
சிலை பிடிப்பித்தார்கள் என்று முடிக்க. முறையிற் காப்புச்செய்த
வில்லினை வலராற் றிண்ணனார் கையிற் பிடிக்கும்படி செய்தார்கள்.
சிலை கையிற் பிடித்தலே அவ்வித்தையின் பயிற்சித் தொடக்கம்
என்க. இவ்வித்தையின் மேன்மை விற்படிப்பினுள்ளே அமைவதாம்
என்பதும் குறிப்பு. திண்ணன் விற்பிடிக்கின்றான் (678) என்றதும்
காண்க. வலவர் என்ற பன்மையால் அவர்களது மரபிலே
அவ்வித்தை வல்ல ஆசிரியர் பலர் உளராக அவரெல்லார்பாலும்
வில்லினை முதலிற் றொட்டுப்பிடிப்பித்தலும் அவர்களது விழாவில்
வழக்குப் போலும். அவ்வாசிரியர் பலருள்ளும் தக்க ஒருவனே
ஆசிரியனாகக் கொள்ளப்பட்டானாதல் வேண்டுமென்பதுமுன்னர்
"ஆசிலாசிரியன்" (686) என ஒருமையிற் கூறியதனாலுணரக்
கிடக்கின்றது. இவ்வாறன்றி வலவர் என்பது சிறப்புப்பன்மை என
உரைப்பினுமமையும்.
பொங்கு
ஒளிக் கரும் போர் ஏறு - ஒளியைக் கரந்து
உள்வாங்கும் இயல்புடையது கருமை. ஆயின் இவரது கருமை, ஒளி
பொங்கிய அழகுடையது என்றார். முன்னர்க் "கருங்கதிர் விரிக்கு
மேனிக் காமரு குழவி" என்றவிடத்துரைத்தது காண்க. ஏறு
ஆண்சிங்கம். ஏறு - இதுபொதுமையின் விலங்குச்சாதி ஆணினைக்
குறிப்பதாயினும், வரும்பாட்டிற் சிங்கம் என்பதனால்
இங்கும் ஆண்
சிங்கம் என்றுரைக்கப்பட்டது. "ஏறுபோற் பீடுநடை" என்ற குறளில்
ஏறு - சிங்கம் என்றுரைத்தனர் பரிமேலழகர்.
பொருசிலை
- போர்வல்ல வில். இவரது வில் முற்பிறவியில்
அருச்சுனனாயிருந்தபோது பன்றியை எய்து சிவபெருமானுடன்
பொருதது போலவே இங்கும் பின்னர்ப் பன்றி வேட்டஞ் செய்தும்,
சிவபெருமானுக்குக் கானவூன் அமுதமாக்கியும், காவல் புரிந்துஞ்
செயல் செய்தமையின் பொருசிலை என்றார்.
ஏற்றைச் சிலையைப்
பிடிப்பித்தார்கள். செயப்படு பொருள் அடுக்கிவந்தது. "முதலையைப்
பிள்ளை (யைத்) தரச்சொல்லு காலனையே" என்ற ஆளுடைய
நம்பிகளது திருவவிநாசித் தேவாரங் காண்க.
மேவிய
போதில் - என்பதும் பாடம். 40 |