695.
|
"இத்தனைகா
லமுநினது சிலைக்கீழ்த் தங்கி
யினிதுண்டு தீங்கின்றி யிருந்தோ!; மின்னும்
அத்தவுன தருள்வழியே நிற்ப தல்லா
லடுத்தநெறி வேறுளதோ?; வதுவே யன்றி
மெய்த்தவிறற் றிண்ணனையுன் மரபிற் சால
மேம்படவே பெற்றளித்தாய்; விளங்கு மேன்மை
வைத்தசிலை மைந்தனையீண் டுழைத்து நுங்கள்
வரையாட்சி யரு" ளென்றார் மகிழ்ந்து வேடர். 46
|
695. (இ-ள்.)
வெளிப்படை. "இத்தனை காலமும் உன்னுடைய
நிலையாட்சியின் கீழே தங்கி இனிதாக உண்டு தீங்கின்றி
வாழ்ந்திருந்தோம்!" அத்தனே! நீ கட்டளை யிட்டருளிய வழியிலே
அமைந்து நிற்கின்றதல்லாமல் எங்களுக்கு அடுத்த நெறி
வேறுமுண்டோ?; அதுவேயுமன்றி, மெய்த்த விறலுடைய திண்ணனை
உன் மரபிலே மிகவும் மேன்மையடையவே பெற்று அளித்தாய்;
விளங்கும் மேன்மைவைத்த வில்லினை ஏந்திய உன் மைந்தனை
இங்கே அழைத்து உங்களுக்குரிய மலையாட்சி யுரிமையை
அவனுக்குக் கொடுத்தருள்வாயாக" என்று அவ்வேடர்கள் மகிழ்ந்து
கூறினார். 46
695.
(வி-ரை.) நினது
சிலைக்கீழ்த் தங்கி - சிலை -
இங்கு அரச அடையாளங்குறித்தது. சிலையின் ஆட்சியாற் பெற்ற
காவலின் கீழமைந்து என்பது பொருள். "வெண்கொற்றக் குடையும்
நவமணி முடியும் சிங்காதனமும் மன்னவர்க்கேயுரிய
சிறப்படையாளமாம்" - என்ப. (சிவஞானபோதச் சிற்றுரை - 8-ம்
சூத்திரம்.) மன்னவனது குடையைத் "தண்ணளி வெண்குடை"
எனவும், அதன் நிழலின்கீழ் உலகம் குளிர்ந்து காவல்பெற்று
நிற்குமெனவும் உபசரித்துக் கூறுவது மரபு. அதுபோல இங்கு,
வேடர் தலைவன் ஆட்சி புரிந்து காவல்தர இன்றியமையாச்
சிறப்பின் உள்ளது அவன் கையேந்திய வில்லேயாதலின்
அச்சிலையின்கீழ் அவன் குடிமக்கள் தங்கினார் என்பதாம்.
இனிதுண்டு
தீங்கின்றி - வழிவழி அரசனேயாக, அல்லது
தலைவனேயாக, அல்லது அரசாங்கமேயாக, இன்னோர்
குடிகளுக்குச் செய்து தரவேண்டிய இன்றியமையாத கடமைகள்
இரண்டேயுள்ளன. அவையவான, அவர்களைப் பசியின்றி இனிதுண்டு
வாழ வைத்தலும், அவர்தம் உடலுக்கும் உடைமைக்கும் பிறரால்
எவ்விதத் தீமையும் நேராதபடி காவல்பெற்று வாழவைத்தலும் என்ற
இவைகளேயாம். அரசாங்கத்தின் உள்ளுறையாகி இந்தக்
கடமைகளை இங்கு வேடர்கள் தமது தலைவன் தமக்களித்த
காவலின் பெற்றியைப் பாராட்டும் முறையால் பேரமைச்சராகிய
ஆசிரியர் அவ்வேடர்களது வாக்கில் வைத்துக் காட்டிய அழகு
காண்க. தீங்கின்றி - தீங்கு - அரசர்
கள்வர் முதலாயினோரால்
வரும் தீமைகள். இதுபற்றி 121-ம் திருப்பாட்டில் உரைத்தவை
காண்க.1
அத்த
உனது அருள் வழியே.....வேறுளதோ? என்றும்,
வரை ஆட்சி அருள் என்றும்
வருவன தலைவன்பால் குடிகளாகிய
வேடர் பணிவுடன் விண்ணப்பிக்கும் முறை. Ever
your Majesties`
subjects - Graciously pleased என்பனவாதி மரபு. வழக்குக்களும்
காண்க.
அதுவேயன்றி
- இனிதுண்டு தீங்கின்றி இருக்க
வைத்ததுமன்றி.
மெய்த்த
விறல் - உடல் வலிமை மிக உடைய. மெய்
-
உடம்பு. மெய்த்த உடம்பின் கண்ணதாகிய.
பெயர்ச்சொல்
லடியாகப்பிறந்த பெயரெச்சம். இவர்கள், கண்டதும், இவர்களது
சிலையாட்சிக்கு வேண்டுவது அதுவேயாதலின் அதனை
இங்குக்குறித்தனர். மூப்பினால் வேட்டையினில் முயலகில்லேன்
என்ற தலைவனை நோக்கி உன்னினும் மிக்க உடல் வலிபெற்று
அதனால் எங்களைக் காக்கவல்ல மகனைத் தந்தனை என்று
வேடர்குறித்தபடி. மைந்தனை என்ற குறிப்புமது.
ஆயின் இங்கு
அவர்களறியாமலே, மெய்த்த விறல் என்றது
உண்மையன்பு
உருப்பட்டு வந்த தவவலிமை பெற்ற என்றதோ ருண்மைப்பொருள்
தொனித்தலும் காண்க. "அன்பின் மெய்ம்மை யுருவினையும்"
(திருஞான - புரா - 1023) என்றது காண்க.
மரபில்
சால மேம்படவே - உன் மரபில் வந்த பிறர்
யாவரினும் மிக மேலோங்க. இங்கும் பிறிதோருண்மைப்
பொருட்குறிப்புக்காண்க. இவ்வாறே பின்னர்த் தேவராட்டி வாக்கில்
"நின் அளவி லன்றி மேம்படுகின்றான்-" (700) என்ற இடத்தும்
பிறிதோருட் குறிப்பும், சரித நிகழ்ச்சியின் முற்குறிப்பும் காண்க.
பிறவும் இவ்வாறே அங்கங்கும் இச்சரிதத்துட் கண்டுகொள்க.
விளங்கும்
மேன்மை வைத்த சிலை - முன்னர் வில்
விழாவிற்கூறிய சிறப்புக்களும் மேன்மையும் கொண்டசிலை.
மைந்தனை - மைந்து
வல்லமை. நீ ஏவியதன் அளவேயன்றி
அவனும் அதற்குத் தகுதிபெற்ற வன்மையுடையோன் என்பதாம்.
நுங்கள்
வரை ஆட்சி அருள் - உங்களுக்கு வழிவழி
உரிமையாய் வந்த மலையாளும் தலைமையை அவனிடத்து ஏற்றுக.
அரசனாக்குக என்றார். நுங்கள் - நீ கூறியவாறு
எங்கள்
இசைவேயன்றி உங்களுக்கே உரிமையுடையதான. அருள் - உரிய
மரபிற்கொடுக்க. இம்மரபுகள் 701 - 702-ல் உரைக்கப்பட்டன. 46
1எனது
சேக்கிழார் 49, 50 பக்கங்கள் பார்க்க.
|