713.
|
பல்வேறு
வாளி புதைபார்த்துடன் போத வேவி
வில்வேட ராயத் துடிமேவி யொலிக்கு முன்றிற்
சொல்வேறு வாழ்த்துத் திசைதோறுந் துதைந்து விம்ம
வல்வேறு போல்வா ரடல்வாளி தெரிந்து நின்றார். 64 |
(இ-ள்.)
வல்லேறு போல்வார் - (சிறு காணெறிந்த) வலிய
சிங்கஏறு போல்வாராகிய திண்ணனார்; பல்வேறு ... ஏவி - பலவேறு
அம்புகளை அம்புக்கூட்டிற் பார்த்துத்தெரிந்து எடுத்துக்கொண்டு
தம்முடனே வரும்படிவேவுகாரருக்குக் கட்டளையிட்டு; வில்வேடர் ...
முன்றில் - வில்வேடர்கள் கூட்டங்களினது சிற்றுடுக்கை சேர்ந்து
சத்திக்கும் முன்றிலில் வந்து; சொல்வேறு ... விம்ம - அவர்கள்
சொல்கின்ற பலவேறு வாழ்த்தொலிகளும் எல்லாத்திக்குக்களிலும்
நெருங்கி நிறைய; அடல் ... நின்றார் - வலிய அம்புகளை
ஆராய்ந்துநின்றார்.
(வி-ரை.)
ஏவி - வேவுகாரருக்குக் கட்டளையிட்டு.
பலவகைப்பட்ட வேற்றுமையான பாணங்களை அம்புக்கூட்டிலே
தெரிந்தெடுத்து உடனேபோம்படி செலுத்தி வென்றிபொருந்திய
அவ்வாளிகளின் றன்மையைப் பரீட்சித்துநின்றார் என்பது
இராமநாதச்செட்டியார் உரைக்குறிப்பு. பல்வேறு - பல
வடிவினவாகிய பலதிறப்பட்ட. பற்பலவிலங்குகளுக்கும்
அவ்வவற்றின் திறந்தெரிந்து ஏற்றவாறு எய்யும் வகையாலும்
பிறவாற்றாலும் வாளிகளும் பலதிறப்பட்டனவாம் என்க.
சிறுநாணெறிந்த அதனால் நாண் ஒழுங்குபட அமைந்த
திறங்கண்டலர் அந்நாணிற் பலவகை அம்புகளையும் பூட்டிச்
செலுத்தியதனால் அந்நாண் அம்பு பூட்டி எய்வதற்குத் தகுதி
பெற்றதனைக் காண்பதும் வழக்காமாதலின் அதற்கு ஏற்றபடி இங்கு
உரைப்பாருமுண்டு.
புதை
- அம்புக்கூடு. அம்பறாத்தூணி - புட்டில். பார்த்து
-
தேர்ந்தெடுத்து. புதையின்கண் என ஏழனுருபு விரிக்க.
உடன்போத - உடன் கொண்டுவர.
ஆயம்
- கூட்டம். (முன்றில்) வந்து என
ஒருசொல்
வருவித்துக்கொள்க.
வாழ்த்துத்
துதைந்து விம்ம - வேடர்கூட்டத்தில் ஒலிக்கும்
துடியோசையின் மிக்குஒங்கி வாழ்த்தொலிநிறைய என்பதாம்.
சொல்
வேறு வாழ்த்து - சொல்கின்ற பலவேறுவகைப்பட்ட
வாழ்த்து. அவ்வவரும் தத்தம் மனங்கொண்டபடியும் பலவாறு
வாழ்த்துவராதலின் சொல்வேறு என்றார் இனி,
இவர் வாழ்த்தியது
ஒருநிலை; அவ்வாழ்த்தின் வேறாய்த் திண்ணனார் அடையநின்றது
மற்றொருநிலையாய் முடிதலின் வேறுசொல் வாழ்த்து எனப்
பிறிதொருகுறிப்பும்பட நின்றதுங் காண்க.
அல்
ஏறு - கரிய சிங்கஏறு என்றலுமாம். அடல்
- வெற்றி
என்றலுமாம். ஏறு போல்வார் - ஏவி - முன்றில் (வந்து) - விம்ம -
தெரிந்து நின்றார் என முடிக்க. 64
|