708.
|
கண்டத்திடை
வெண்கவ டிக்கதிர் மாலை சேரக்
கொண்டக்கொடு பன்மணி கோத்திடை யேனக் கோடு
துண்டப்பிறை போல்வன தூங்கிட, வேங்கை வன்றோற்
றண்டைச்செயல் பொங்கிய சன்னவீ ரந்த யங்க, 59 |
708. (இ-ள்.)
வெளிப்படை. கழுத்தில், வெள்ளையாகிய
பலகறைகளாலாகிய ஒளியுடைய மாலையைப் பொருந்தக் கொண்டு,
சங்குமணியோடு பலவகை மணிகளையும் கோத்து அவற்றினிடையே
பன்றிக்கொம்புகள் துண்டப்பிறை போல்வனவாகத் தொங்கவைத்து,
இவற்றை வேங்கையின் வலியதோலிற் பதித்துத் தட்டையாகிய
வடிவமையச் செய்த சன்னவீரம் என்ற வெற்றிமாலை விளங்க. 59
708.
(வி-ரை.) வெண்கவடி - வெள்ளிய
பலகறை. மாலை
சோக்கொண்டு மாலையாகச் சேரும்படி கொண்டு. அக்கு -
சங்குமணி.
பன்மணி
- வேறு பலவகை மணிகள். ஏனக்கோடு -
பன்றியின்கொம்பு. பன்றியின் வளைந்தபல் (வக்ரதந்தம்) கோடு
எனப்படும்.
துண்டப்பிறைபோல்வன
தூங்க - பிறையினது துண்டங்கள்
போல்வனவாகித் தொங்க. "துண்டப் பிறையான் மறையான்" -
(திருவாசகம் - திருவம்மானை - 9.)
வேங்கை
... சன்னவீரம் - வேங்கையின்
வலியதோலால்கைவினைத் திறமமையச்செய்த சன்னவீரம் என்னும்
வெற்றிமாலை. முத்துமாலை முதலியவற்றானியன்ற சன்னவீரம் அரசர்
முதலியோர் அணிவது மரபு. இங்கு வேடர்கள் தங்கள் மரபுக்கேற்ப
அதனைவேங்கைத்தோலால் ஆக்கி, அதிற் பலமணிகளும் பலகறை,
சங்குமணி இவைகளும் பன்றிக்கோடும் பொருந்தச்செய்து
அணிந்தனர். இது இவர் வழக்கு. தட்டை என்பது தண்டை
எனவந்தது. தண்டை - என்பதற்குப்
புலித்தோலினை
வலயமாகத்தைத்து உள்ளே சிறுகற்களையிட்டு வைத்த அணி
என்பாருமுளர். அது பொருந்தாமை யறிக. 59
|