717.
|
தாளில்
வாழ்செ ருப்பறர் தோற றழைத்த நீடு
தானையார்
வாளியோடு சாப மேவு கையர் வெய்ய வன்கணார்
ஆளி யேறு போல வேகு மண்ண லார்மு
னெண்ணிலார்
மீளி வேடர் நீடு கூட்ட மிக்கு மேலெ ழுந்ததே. 68
|
(இ-ள்.)
வெளிப்படை. இவ்வாறு வேட்டையின்மே லெழுந்து
ஆண்சிங்கம் போலப் புறப்பட்ட பெருமையுடைய திண்ணனாரின்
முன்னே, கால்களில் இட்ட செருப்பினையுடையாராய், விரிந்த
தோலை மேலேகட்டிய நீண்ட உரியாடையினையுடையாராய்,
அம்புகளுடன் வில் பொருந்திய கைகளையுடையாராய்த்,
தறுகண்மையுடையாராய், எண்ணில்லாத கொடிய வலிய வேடர்கள்
நெருங்கிய கூட்டம் மிகுதி பெற மேலெழுந்தது.
(வி-ரை.)
வாழ் செருப்பர் - வாழ்க்கை நிலையில்
எவ்வேளையினும் செருப்பையணிந்து திரிதலின் அவர்களது
கால்களினிடமாக வாழும் செருப்பு என்றார்.
நீடுதானை
- உரியாடையாகிய நீண்ட உடை. தோல்
தழைத்த - அதன்மேல் தோல்வரிந்த.
சாப
மேவு கை - வில்லினைப் பிடித்த கை. செருப்பு
இவர்களது தாளிலும், வில் இவர் கையிலும் நீங்காது நின்றன
என்பது கருத்து. சாபம் - இரட்டுற மொழிதலால் கொலைப்பழியின்
நியதியாக இடப்பட்ட சாபம் எனக்கொண்டு, அது இவர்கள் எய்யும்
குறிதவிராத அம்புடனே பற்றிவந்து இவர்களை மேவுகின்றதென்ற
குறிப்புப்பொருளும்பட நிற்றல் காண்க. இதனைப்பாண்டு, தசரதன்
முதலியோர் சரிதங்களிற் காண்க.
செருப்பராய்த்,
தானையராய்க், கையராய், வன்கண்ணராய்
எண்ணில்லாத வேடர் என முடிக்க.
வெய்ய
வன்கணார் - வன்கண்மை - கொடுமை. வெய்ய
-
அதன் மிகுதி குறித்தது. தாட்சண்ணியமில்லாமற்
கொடுமைசெய்கின்றவர்கள் என்பர் மகாலிங்கையர்.
ஆளி
ஏறு - அடலேனம் புலிகரடி (693) முதலிய
விலங்குகளை வேட்டையாடுதல் மேற்கொண்டெழுந்து
செல்கின்றாராதலின் விலங்கினத்தின் அரசாகிய சிங்க ஏறு
என்றுவமித்தார். இவரது வேட்டையிற் றப்பிச்செல்லும்
விலங்குகளில்லை என்பது குறிப்பு. பெருமிதத்தோற்றம்,
அவசியமின்றிக்கொல்லாமை, சிறுபிராணிகளை வதைக்காமை
முதலியபெருங்குணங்கள் பற்றியும் சிங்கத்தை உவமித்ததுமாம்.
மீளி
- வலிமை. நமனைப் போல்வாராகிய
என்பாருமுண்டு. 68
|