720.
|
நண்ணி
மாம றைக்கு லங்க ணாட வென்று நீடுமத்
தண்ணி லாவ டம்பு கொன்றை தங்கு வேணி
யார்தமைக்
கண்ணி னீடு பார்வை யொன்று கொண்டு காணு
மன்பர்முன்
எண்ணில் பார்வை கொண்டு வேட ரெம்ம ருங்கு
மேகினார்.
71 |
(இ-ள்.)
வெளிப்படை. பெரிய வேதங்கள் கூடித் தேடும்படி,
நீடுகின்ற அந்தக் குளிர்ந்த நிலவும் அடம்பும் கொன்றையும்
தங்குஞ் சடையுடையவராகிய இறைவரைத் தமது கண்ணின்
நீடியபார்வை ஒன்றுகொண்டு காணும் அன்பராகிய திண்ணனார்
முன்னே எண்ணில்லாத் பார்வைகளைக்கொண்டு வேடர்கள்
எல்லாப் பக்கங்களிலுஞ் சென்றனர்.
(வி-ரை.)
மாமறைக்கு குலங்கள் நண்ணி நாட என்க.
மா - பெரிய. மறைக்குலங்கள் -
வேதத்தின் பல
சாகைத்தொகுதிகள். நண்ணி நாட - தேடும்
அத்துறையிலே
பொருந்தி நாட.
என்றும்
நீடும் - எக்காலத்தும் அந்நாட்டத்துக்கு
அகப்படாமல் நீளுகின்ற. நாட நீளுதல் - சொல்லிமுடிய இயலாமல்
நீளச்சென்று கொண்டேயிருத்தல். "பாதாள மேழினுங்கீழ் சொற்கழிவு
பாதமலர், போதார் புனைமுடியு மெல்லாப் பொருண் முடிபே" என்ற
திருவாசகங் காண்க.
அ
வேணியர் - அகரம் உலகறிசுட்டு. பெரியோரால்
அறியப்பட்ட அந்த.
கண்ணின்......அன்பர்
- ஒன்று பார்வை கொண்டு -
என்க. அவரைக் காண்பதன்றி வேறொன்றையும் காணாத. இவ்வாறு
கண்டுகொண்டிருந்தபொருள் 777ம் பாட்டில் "ஆர்வமுன் பெருக
ஆரா அன்பினிற் கண்டு கொண்டே, நேர்பெற நோக்கி நின்றார்"
என விரித்துரைக்கப்பட்டது காண்க. நீடுபார்வை -
முற்பிறப்பிற்
றவஞ்செய்து பார்த்த பார்வை இப்பிறப்பிலும் வந்து நீடியது; இங்குப்
பார்த்த பின்னர் விலகாது நித்தமாய் நீடியுள்ளது. ஒன்று - ஒப்பற்ற
- தனி - என்ற குறிப்புமாம்.
பார்வை
ஒன்று - வலக்கண்ணைப் போழ்ந்து இறைவன்
கண்ணிலே அப்பி விட்டாராதலின் மற்றை இடக்கண் ஒன்றின் நீடிய
பார்வை கொண்டு என்பதுமாம். பார்வை - ஒன்று - எண்ணில்
பார்வை - முரண் அணி. எண்ணில் பார்வை
அளவில்லாத பல
வகைப்பட்ட பார்வைமிருகங்கள். "பன்றியும் புலியு மெண்குங்
கடமையு மானின் பார்வை" (652) என இவற்றை முகப்பிலே,
வேட்டைக்குரிய "கொடுஞ்செவி ஞமலி" "வார்வலை"
முதலியவற்றுடன் சேரவைத்துக் காட்டியது நினைவு கூர்க.
அரும்பு
கொன்றை - என்பதும் பாடம். 71
|